என் மலர்
நீங்கள் தேடியது "rumsticks"
- ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனையாகி வருகிறது.
- வியாபாரிகள் அதிகமாக முருங்கைக்காய்களை வாங்கவில்லை.
கோவை,
கோவை உக்கடம் பகுதியில் டி.கே.மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டிற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள், வெங்காயம், உருளைகிழக்கு போன்றவைகள் வருகின்றன.
இங்கு வரும் காய்கறிகளை கோவை மாவட்டம் முழுவதும் இருந்து வியாபாரிகள் வந்து மொத்தமாகவும், சில்லறையாகவும் வாங்கி செல்வார்கள்.
அதே போல் கோவை மாநகர சுற்றுவட்டார மக்களும் காய்கறிகள் விலை கடைகளை காட்டிலும் குறைவாக உள்ளதால் இந்த மார்க்கெட்டிற்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்வார்கள்.
இதனிடையே இங்கு விற்பனைக்கு வந்த காய்கறிகளில் முருங்கைக்காய் விலை உயர்ந்து காணப்பட்டது. இதனால் வியாபாரிகள் அதிகமாக முருங்கைக்காய்களை வாங்கவில்லை. மக்களும் குறைந்த அளவிலேயே வாங்கி சென்றனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட அனைத்து மொத்த காய்கனி வியாபாரிகள் கூறும்போது, டி.கே. மார்க்கெட் மற்றும் கோவையின் இதர மார்க்கெ ட்டுகளிலும் முருங்கை க்காய் விலை அதிகரித்து காணப்பட்டது.
மொத்த விற்பனை விலையில் கிலோ ஒன்றுக்கு முருங்கை ரூ.80 வரை விற்பனை செய்ய ப்பட்டது. இதனால் முருங்கை க்காயை வாங்க வந்த முருங்கை பிரியர்கள் அதிர்ச்சி யடைந்தனர். முருங்கைக்கு அடுத்து வெண்டை க்காய் ரூ.50க்கு விற்பனை செய்ய ப்பட்டது என்றார்.