search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Run Erratically"

    • தொலை தூர பஸ் என்பதால் இருவரும் மாறி மாறி பஸ்சை ஓட்டிக் கொண்டு வந்துள்ளனர்.
    • பஸ் நிலைதடுமாறி சாலையில் தாறுமாற ஓடி அருகில் இருந்த பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது.

    வல்லம்:

    திருச்செந்தூரில் இருந்து கும்பகோணத்திற்கு நேற்று இரவு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.

    பஸ்சை அம்மாபேட்டையை சேர்ந்த பாலமுருகன் (வயது 40) என்பவர் ஒட்டி வந்தார். நன்னிலத்தை சேர்ந்த‌ சிவா(வயது‌ 38) கண்டக்டராக இருந்தனர்.

    தொலை தூர பஸ் என்பதால் இருவரும் மாறி மாறி பஸ்சை ஓட்டிக் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அரசு பஸ்சை புதுக்கோட்டையில் இருந்து சிவா ஒட்டிக்கொண்டு வந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில் தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் உள்ள வல்லம் அற்புதாபுரம் சோதனைச்சாவடி அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் லாரி ஒன்று டீசல் போட்டு கொண்டு சாலையை கடந்துள்ளது.

    அப்போது தஞ்சை நோக்கி வந்த அரசு பஸ் லாரி மீது மோதாமல் இருக்க திடிரென‌ பிரேக் போட்டுள்ளார். இதில் பஸ் நிலைதடுமாறி சாலையில் தாறுமாற ஓடி அருகில் இருந்த பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது.

    இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர்.

    அவர்களது அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஊழியர்கள் விரைந்து சென்று பஸ்சில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி இருந்தவர்களை மீட்டனர்.

    இதில் காயம் அடைந்த வெங்கடேஷ், மாலா, சுப்ரமணியன், பிருத்திகா, சாந்தி உள்ளிட்ட 11 ேபர் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து‌ விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×