என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sabarimala temple"

    • இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • விழா நாட்களில் தினமும் வழக்கமான பூஜை வழிபாடுகளுடன், உத்சவ பலி சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    சபரிமலை:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசன் தவிர ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதுதவிர பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா மற்றும் சித்திரை விஷூ பண்டிகைக்காக கோவில் நடை திறக்கப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா நாளை (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது.

    விழா நாட்களில் தினமும் வழக்கமான பூஜை வழிபாடுகளுடன், உத்சவ பலி சிறப்பு வழிபாடு நடைபெறும். 10-ந் தேதி இரவு 9 மணிக்கு சரம் குத்தியில் பள்ளிவேட்டை நிகழ்ச்சி, 11-ந்தேதி காலை 11 மணிக்கு பம்பை ஆற்றில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு திருவிழா கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறுகிறது.

    அதைத்தொடர்ந்து சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு 18-ந் தேதி வரை சபரிமலையில் சிறப்பு பூஜை, வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறும். விஷூ பண்டிகை வருகிற 14-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை சிறப்பு பூஜை நடைபெறும். கடந்த மாத பூஜையின் போது பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு நேரடியாக அனுமதிக்கப்பட்டனர். அதே நடைமுறை இப்போதும் பின்பற்றப்படுகிறது. கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில் மட்டும் பெண்கள், குழந்தைகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் நேரடியாகவும், மற்றவர்கள் மேல் நடைபாலம் வழியாகவும் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    • சபரிமலையில் கடந்த 18-ந்தேதி நடிகர் மோகன்லால் சாமி தரிசனம் செய்தார்.
    • நடிகர் மம்முட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவது குறித்து வெளி உலகிற்கு தெரிய வந்தது.

    நடிகரும், டைரக்டருமான பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவான 'எம்புரான்' திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ளது.

    எம்புரான் படம் வெற்றி பெறவேண்டி சபரிமலையில் கடந்த 18-ந்தேதி நடிகர் மோகன்லால் சாமி தரிசனம் செய்தார்.

    அப்போது அவர் நடிகர் மம்முட்டியின் இயற்பெயரான முகமது குட்டி என்ற பெயரில் சிறப்பு வழிபாடு நடத்திய ரசீது சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    அதன் பின்னரே நடிகர் மம்முட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவது குறித்து வெளி உலகிற்கு தெரிய வந்தது. இதனையடுத்து மம்முட்டிக்காக மோகன்லால் வழிபடு நடத்தியது மத நல்லிணக்கத்திற்கு நல்ல உதாரணம் என்று நெட்டிசன்களில் ஒரு தரப்பினர் பாராட்டினார்.

    அதே சமயம் மம்முட்டி ஒரு முஸ்லிம் என்றும் இந்து முறைப்படி அவருக்கு பிரார்த்தனை செய்வது இஸ்லாமிய மத நம்பிக்கையை மீறுவதாகும் என்று மற்றொரு தரப்பினர் இதற்கு தெரிவித்துள்ளனர்.

    இஸ்லாமிய நம்பிக்கையைப் பின்பற்றும் ஒருவர் அல்லாவிடம் மட்டுமே பிரார்த்தனை செய்ய வேண்டும். தனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று மோகன்லாலிடம் மம்முட்டி கூறியிருந்தால் அதற்காக அவர் மன்னிப்பு கோரவேண்டும் என்று 'மத்யமம்' செய்தித்தாளின் முன்னாள் ஆசிரியரான அப்துல்லா தெரிவித்துள்ளார்.

    • நடிகர் மம்முட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவது குறித்து வெளி உலகிற்கு தெரிய வந்தது.
    • நடிகர் மோகன்லால் நடத்திய சிறப்பு வழிபாடு குறித்து, தேவஸ்தான ஊழியர் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

    திருவனந்தபுரம்:

    சபரிமலையில் கடந்த 18-ந்தேதி நடிகர் மோகன்லால் சாமி தரிசனம் செய்தார். அவர் நடிகர் மம்முட்டிக்காக சிறப்பு வழிபாடு நடத்தியதாக, சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதன் பின்னரே நடிகர் மம்முட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவது குறித்து வெளி உலகிற்கு தெரிய வந்தது. இதுகுறித்து மோகன்லால் கூறுகையில், நடிகர் மம்முட்டிக்கு தான் நடத்திய சிறப்பு வழிபாடு குறித்து தேவையின்றி திருவிதாங்கூர் தேவஸ்தான ஊழியர் பரப்பி விட்டதாக குற்றம் சாட்டி இருந்தார்.

    இதற்கு மறுப்பு தெரிவித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் நடிகர் மோகன்லால் நடத்திய சிறப்பு வழிபாடு குறித்து, தேவஸ்தான ஊழியர் எந்த தகவலையும் வெளியிடவில்லை. வழிபாடு ரசீதை பெற்று சென்ற நடிகரின் உதவியாளர் வெளியிட்ட தகவல் வைரலானது. இதற்கும் திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • பங்குனி உத்திரம் ஆராட்டு 11-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    • விஷு பண்டிகை 14-ந் தேதி கொண்டாப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழாவையொட்டி வருகிற 1-ந் தேதி (ஏப்ரல்) மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

    2-ந் தேதி காலை 9.30 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு கொடியை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைக்கிறார். இந்த திருவிழா 11-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் வழக்கமான பூஜை வழிபாடுகளுடன், உத்சவ பலி சிறப்பு வழிபாடு நடைபெறும். ஏப்ரல் 10-ந் தேதி இரவு 9 மணிக்கு சரம் குத்தியில் பள்ளிவேட்டை நடக்கிறது.

    விழாவின் இறுதி நாளான 11-ந் தேதி பகல் 11 மணிக்கு பம்பை ஆற்றில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறும்.

    சித்திரை மாத பூஜை மற்றும் விஷு பண்டிகையை முன்னிட்டு 18-ந் தேதி வரை சபரிமலையில் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். விஷு பண்டிகை 14-ந் தேதி கொண்டாப்படுகிறது.

    சபரிமலையில் கடந்த மாத பூஜையின் போது பக்தர்கள் 18-ம் படி ஏறி வந்தவுடன் நேரடியாக சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இனி வரும் பூஜை நாட்களிலும் பக்தர்கள் நேரடியாக சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். கூட்டம் மிகுதியான நாட்களில் பெண்கள், குழந்தைகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள நேரடியாகவும் மற்றவர்கள் மேம்பாலம் வழியாகவும் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும், ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருவதாகவும் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் தெரிவித்தார்.

    • 19-ந்தேதி இரவு கோவில் நடை அடைக்கப்படும்.
    • பங்குனி ஆராட்டு திருவிழாவுக்காக ஏப்ரல் 1-ந்தேதி மாலை கோவில் நடை மீண்டும் திறக்கப்படும்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக நேற்று திறக்கப்பட்டது. கோவிலின் தந்திரி கண்டரரு பிரம்ம தத்தன் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோவிலில் விளக்கேற்றினார்.

    ஐயப்பன் கோவிலில் முதன்முறையாக பக்தர்கள் 18-ம் படி ஏறியதும் கொடிக்கம்பம் வழியாக நேரடியாக சென்று தரிசனம் செய்யும் புதிய நடைமுறை நேற்று அமல்படுத்தப்பட்டது. அதன்படி 18-வது படியில் ஏறிய பக்தர்கள், கொடிக் கம்பம் மற்றும் பாலிக்கல் மண்டபம் மற்றும் மேம்பாலம் வழியாக செல்லாமல், நேரடியாக கோவிலின் முன்புறம் வழியாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    இதன்மூலம் பக்தர்கள் 30 முதல் 50 விநாடிகள் வரை ஐயப்பனை தரிசனம் செய்தனர். மேலும் இந்த முறை கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் உதவியது. 19-ந்தேதி இரவு கோவில் நடை அடைக்கப்படும். அதன்பிறகு பங்குனி ஆராட்டு திருவிழாவுக்காக ஏப்ரல் 1-ந்தேதி மாலை கோவில் நடை மீண்டும் திறக்கப்படும்.

    2-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. 11-ந்தேதி ஆராட்டு விழா நடைபெற உள்ளது.

    • சபரிமலைக்கு நடைபயணமாக வரும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக புதிய ஆன்லைன் செல்போன் செயலி உருவாக்கப்படும்.
    • பக்தர்களுக்கு வன விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு அளிப்பதே இதன் நோக்கம்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல மகரவிளக்கு சீசன் வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது. அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந் தேதி மண்டல பூஜையும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14-ந் தேதி மகரவிளக்கு பூஜையும் நடக்கிறது.

    இந்த நிலையில் சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு வனத்துறை சார்பில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கேரள வனத்துறை மந்திரி ஏ.கே. சசீந்திரன் பம்பை வந்தார். அங்கு அவரது தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மந்திரி ஏ.கே. சசீந்திரன் கூறியதாவது:-

    எருமேலி - பம்பை மற்றும் வண்டிப்பெரியார்- சபரிமலை பாரம்பரிய பெருவழிப்பாதை வழியாக சபரிமலைக்கு நடைபயணமாக வரும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக புதிய ஆன்லைன் செல்போன் செயலி உருவாக்கப்படும். இதன் பயன்பாடு இந்த சீசன் முதல் அமல்படுத்தப்படும்.

    பக்தர்களுக்கு வன விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு அளிப்பதே இதன் நோக்கம். வனப்பாதைகளில் ஆபத்தான விலங்குகள் நடமாட்டம் உள்ள இடங்கள், மருத்துவ வசதிகள், குடிநீர் வசதிகள், தங்கும் வசதிகள் கிடைக்கும் இடங்கள் ஆகியவற்றை இந்த செயலி மூலம் பக்தர்கள் தெரிந்து கொள்ளலாம்.

    மேலும் பெருவழிப்பாதைகளில் ஏராளமான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எங்கெங்கு வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பதையும் இந்த செல்போன் செயலி மூலம் பக்தர்கள் அறிந்து கொள்ள முடியும். இந்த ஆண்டு வனப்பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மார்க்சிஸ்டு மூத்த நிர்வாகிகள் பலரும் சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என கருத்து தெரிவித்தனர்.
    • சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபட செல்லும் பெண்களின் குறைந்தபட்ச வயது 50-ல் இருந்து இன்னும் குறைக்கப்படவில்லை.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக நாளை மறுநாள் (16-ந் தேதி) நடை திறக்கப்படுகிறது.

    இதையடுத்து சபரிமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜைக்கான விழா தொடங்குகிறது. இந்த விழாவில் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை செயல்படுத்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு அரசு நடவடிக்கை எடுத்தது.

    இதனை கண்டித்து ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது மார்க்சிஸ்டு மூத்த நிர்வாகிகள் பலரும் சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என கருத்து தெரிவித்தனர்.

    அப்போது மந்திரியாக இருந்த ஜி.சுதாகரனும் இந்த கருத்தை ஆதரித்து கருத்து கூறியிருந்தார். இந்த நிலையில் இப்போது மீண்டும் மண்டல பூஜை தொடங்க இருக்கும் நிலையில் மார்க்சிஸ்டு மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான ஜி.சுதாகரன், நிருபர்களிடம் கூறியதாவது:-

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபட செல்லும் பெண்களின் குறைந்தபட்ச வயது 50-ல் இருந்து இன்னும் குறைக்கப்படவில்லை. சபரிமலை ஐயப்பன் நித்திய பிரமச்சாரி என கருதப்படுவதால் 50 வயதுக்கு குறைவான பெண்கள் இக்கோவிலில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை.

    இந்த நடைமுறையை அனைவரும் மதித்து ஏற்றுக்கொண்டுள்ளனர். இதில் மாற்றம் கொண்டு வர தேவை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மந்திரியாக இருந்தபோது இக்கருத்துக்கு எதிராக பேசிய ஜி.சுதாகரன் இப்போது அந்த கருத்தை மாற்றி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கொரோனோ கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் தற்போது தான் மண்டல-மகர பூஜைகள் விமரிசையாக நடைபெற உள்ளது.
    • கேரளாவின் அனைத்து பகுதிகள் மற்றும் தமிழகத்தில் இருந்து முதல்கட்டமாக 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர்.

    இதில் கார்த்திகை மாதம் முதல் தேதியில் இருந்து 60 நாட்கள் கோவில் நடை திறக்கப்பட்டு நடத்தப்படும் மண்டல, மகர விளக்கு பூஜைகள் சிறப்பு வாய்ந்தவை. இந்த ஆண்டு நாளை மறுநாள் கார்த்திகை 1-ந் தேதி பிறக்கிறது. அதுமுதல் மண்டல பூஜை தொடங்குகிறது.

    இந்த பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நாளை (16-ந் தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைக்க உள்ளார். தொடர்ந்து அவர் தீபாராதனை நடத்தியதும், உப தேவதைகளின் கோவில்களில் விளக்கு ஏற்றப்படும்.

    நாளை மறுநாள் காலை 4 மணிக்கு புதிய மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடை திறந்து விளக்கில் தீபம் ஏற்றியதும் மண்டல காலம் ஆரம்பமாகிறது. அன்றைய தினம் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்க உள்ளனர்.

    சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக ஆன்லைன் முன்பதிவு ஏற்கனவே தொடங்கி விட்டன. மேலும் உடனடி தரிசன முன்பதிவிற்கு நிலக்கல் உள்பட 13 இடங்களில் வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

    கொரோனோ கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் தற்போது தான் மண்டல-மகர பூஜைகள் விமரிசையாக நடைபெற உள்ளது. எனவே சபரிமலைக்கு இந்த ஆண்டு பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    கேரளாவின் அனைத்து பகுதிகள் மற்றும் தமிழகத்தில் இருந்து முதல்கட்டமாக 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட உள்ளன. தேவைக்கேற்ப கூடுதல் பஸ்களும் இயக்கப்படும் என்று கேரள அரசு போக்குவரத்துக் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் பிஜுபிரபாகர் தெரிவித்துள்ளார்.

    இதேபோல தமிழகத்தில் இருந்து அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்கள் கூடுதலாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை, சேலம் என பல பகுதிகளில் இருந்தும் விரைவு போக்குவரத்துக் கழக பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இதேபோல் 18 ஜோடி வாராந்திர சிறப்புக் கட்டண சிறப்பு ரெயில்களை தெற்கு மத்திய ரெயில்வே அறிவித்துள்ளது. ரெயில் எண். 07119 நரசாபூர்-கோட்டயம் வாராந்திர சிறப்புக் கட்டண சிறப்பு ரெயில் நரசாபூரில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் 18 மற்றும் 25-ந் தேதிகளில் மாலை 5 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் (2 சேவைகள்) 5.30 மணிக்கு கோட்டயத்தைச் சென்றடையும்.

    ரெயில் எண். 07120 கோட்டயம்-நரசாபூர் வாராந்திர சிறப்புக் கட்டண சிறப்பு ரெயில் வருகிற 19 மற்றும் 26 தேதிகளில் (சனிக்கிழமைகள்) காலை 9.30 மணிக்கு கோட்டயத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மாலை 4 மணிக்கு நரசப்பூரைச் சென்றடையும் (2 சேவைகள்).

    ரெயில் எண். 07117 செகந்திராபாத்-கொல்லம் சந்திப்பு வாராந்திர சிறப்புக் கட்டண சிறப்பு ரெயில் ஞாயிற்றுக்கிழமைகளில் செகந்திராபாத்தில் இருந்து வருகிற 20-ந் தேதி மற்றும் டிசம்பர் 04, 18, ஜனவரி 08 ஆகிய தேதிகளில் காலை 6 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் நள்ளிரவு 11 மணிக்கு கொல்லம் சந்திப்பை சென்றடையும்.

    ரெயில் எண். 07118 கொல்லம் சந்திப்பு-செகந்திராபாத் வாராந்திர சிறப்புக் கட்டண சிறப்பு ரெயில் கொல்லம் சந்திப்பில் இருந்து வருகிற 22-ந் தேதி மற்றும் டிசம்பர் 6, 20, ஜனவரி 10 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமை) மதியம் 2.30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் 9.05 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.

    ரெயில் எண். 07121 செகந்திராபாத்-கொல்லம் சந்திப்பு வாராந்திர சிறப்புக் கட்டண சிறப்பு ரெயில் செகந்திராபாத்தில் இருந்து வருகிற 27, டிசம்பர் 11, 25, ஜனவரி 1 மற்றும் 15 ஆகிய தேதிகளில் மதியம் 2.40 மணிக்குப் புறப்பட்டு, அடுத்த நாள் (23-ந்தேதி) கொல்லம் சந்திப்பை இரவு 11 மணிக்கு சென்றடையும்.

    ரெயில் எண். 07122 கொல்லம் சந்திப்பு-செகந்திராபாத் வாராந்திர சிறப்புக் கட்டண சிறப்பு ரெயில் கொல்லம் சந்திப்பில் இருந்து வருகிற 29-ந் தேதி மற்றும் டிசம்பர் 13, 27 , ஜனவரி 3 மற்றும் 17 செவ்வாய்க் கிழமைகளில் மதியம் 2.30 மணிக்குப் புறப்பட்டு, அடுத்த நாள் 10 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.

    ரெயில் எண். 07123 செகந்திராபாத்-கொல்லம் சந்திப்பு வாராந்திர சிறப்புக் கட்டண சிறப்பு ரெயில், திங்கட்கிழமைகளில் செகந்திராபாத்தில் இருந்து வருகிற 21 மற்றும் 28 அன்று மதியம் 2.30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் கொல்லம் சந்திப்பை நள்ளிரவு 11.50 மணிக்கு சென்றடையும்.

    ரெயில் எண். 07124 கொல்லம் சந்திப்பு-செகந்திராபாத் வாராந்திர சிறப்புக் கட்டண சிறப்பு ரெயில் கொல்லம் சந்திப்பில் இருந்து வருகிற 23 மற்றும் 30-ந் தேதிகளில் புதன்கிழமைகளில் மதியம் 2.30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் 11 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.

    ரெயில் எண். 07125 செகந்திராபாத்-கோட்டயம் வாராந்திர சிறப்புக் கட்டண சிறப்பு ரெயில் ஞாயிற்றுக்கிழமைகளில் செகந்திராபாத்தில் இருந்து வருகிற 20 மற்றும் 27 அன்று காலை 8.50 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் இரவு 11 மணிக்கு கோட்டயம் சந்திப்பை சென்றடையும். ரெயில் எண். 07126 கோட்டயம்-செகந்திராபாத் வாராந்திர சிறப்புக் கட்டண சிறப்பு ரெயில் வருகிற 21 மற்றும் 28 திங்கட்கிழமைகளில் கோட்டயத்தில் இருந்து நள்ளிரவு 11.15 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள், புதன்கிழமை செகந்திராபாத்தை 4 மணிக்கு சென்றடையும்.

    ரெயில் எண். 07127 ஐதராபாத்-கொல்லம் சந்திப்பு வாராந்திர சிறப்புக் கட்டண சிறப்பு ரெயில் செவ்வாய்க்கிழமைகளில் ஐதராபாத்தில் இருந்து வருகிற 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மதியம் 2 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் கொல்லம் சந்திப்பை மாலை 6 மணிக்கு சென்றடையும்.

    ரெயில் எண். 07128 கொல்லம் சந்திப்பு-ஹைதராபாத் வாராந்திர சிறப்புக் கட்டண சிறப்பு ரெயில் கொல்லத்தில் இருந்து வருகிற 16, 23 மற்றும் 30 தேதிகளில் புதன்கிழமைகளில் இரவு 8.45 மணிக்குப் புறப்பட்டு, 3-ம் நாள் மதியம் 01.30 மணிக்கு ஐதராபாத் சென்றடையும்.

    • சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு விரதம் மேற்கொண்டு இருமுடி கட்டி தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் செல்வது வழக்கம்.
    • தமிழகத்தில் இருந்து ஐயப்ப பக்தர்கள் சென்று வர ஏதுவாக தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    மண்டல பூஜை - மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது.

    அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந் தேதி மண்டல பூஜையும், அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 14-ந் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறுகிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு விரதம் மேற்கொண்டு இருமுடி கட்டி தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் செல்வது வழக்கம்.

    இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சபரிமலைக்கு சிறப்பு பஸ்களை இயக்க ஏற்பாடு செய்துள்ளது.

    இதுகுறித்து தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகிய திருவிழாக்களின்போது, தமிழகத்தில் இருந்து ஐயப்ப பக்தர்கள் சென்று வர ஏதுவாக தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    அதன்படி, இந்த ஆண்டும் 17-ந் தேதி (இன்று) முதல் 20.1.2023 வரை சென்னை, திருச்சி, மதுரை, கடலூர் ஆகிய நகரங்களில் இருந்தும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்தும் பம்பைக்கு அதிநவீன சொகுசு பஸ்கள் சிறப்பு பஸ்களாக இயக்கப்பட உள்ளன. இந்த ஆண்டு கூடுதல் பஸ்கள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த சிறப்பு பஸ்களுக்கு www.tnstc.in என்ற இணையதளம் மூலமும் TNSTC எனப்படும் செயலி மூலமும் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 94450-14452, 94450-17793 ஆகிய செல்போன்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும்.
    • பக்தர்கள் அணிந்து வரும் ஆடைகள், மாலை உள்ளிட்ட பொருட்களை பம்பை ஆற்றில் வீசி எறியக்கூடாது. அதுதான் ஐதீகம் என்று நினைப்பது தவறு.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி சன்னிதானத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்களின் தஞ்சமாக சபரிமலை சன்னிதானம், ஐயப்பன் விக்ரகம் விளங்குகிறது. மேலும், தர்மசாஸ்தாவின் இருப்பிடம் என இந்த வனப்பகுதி அழைக்கப்படுகிறது. இவை அனைத்தும் புனிதமானது. இங்குள்ள ஒவ்வொரு மண்ணும் புனிதமானது. அவை பாதுகாக்கப்பட வேண்டும்.

    எனவே, தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும். இருமுடிகட்டில் கொண்டு வரும் பொருட்களை மலையில் வைத்து விட்டு செல்லக்கூடாது. புனிதமான புண்ணிய நதி பம்பையாற்றை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

    பக்தர்கள் அணிந்து வரும் ஆடைகள், மாலை உள்ளிட்ட பொருட்களை பம்பை ஆற்றில் வீசி எறியக்கூடாது. அதுதான் ஐதீகம் என்று நினைப்பது தவறு. பம்பை ஆற்றை சுத்தமாக வைத்திருப்பது நமது ஆன்மாவை சுத்தமாக வைத்திருப்பதற்கு சமம். சன்னிதானத்தை தூய்மையாக பாதுகாத்து, சபரிமலையை நாட்டிலேயே சிறந்த புனித இடமாக மாற்ற அனைவரும் பாடுபடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சபரிமலையில் தினமும் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
    • சபரிமலையில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மட்டும் 1 லட்சம் பக்தர்கள் வரை தரிசனம் செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவில் நிர்வாகம் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்த போதிலும், கேரள ஐகோர்ட்டு நேரடி கண்காணிப்பில் தான் அனைத்து செயல்பாடுகளும் உள்ளன.

    தற்போது சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி நடை திறக்கப்பட்டு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    தினமும் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மட்டும் 1 லட்சம் பக்தர்கள் வரை தரிசனம் செய்தனர்.

    அவ்வாறு வரும் பக்தர்களுக்கும் தினமும் 2 லட்சம் டின் அரவணை, 1.50 லட்சம் பாக்கெட் அப்பம் ஆகியவை தங்கு தடையின்றி வினியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும், தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க தற்போதைய நிலையில் 15 லட்சம் டின் அரவணை இருப்பில் உள்ளது.

    இந்த நிலையில் அரவணை அடைக்கப்படும் காலி டின்களை சப்ளை செய்யும் ஒப்பந்த நிறுவனம், காலி டின்களை சப்ளை செய்வதில் காலம் தாழ்த்தி வருவதாக ஐகோர்ட்டில் சபரிமலை சிறப்பு கமிஷனர் அறிக்கை சமர்ப்பித்தார்.

    இதனை தொடர்ந்து கமிஷனரின் அறிக்கை தொடர்பான விசாரணை கேரள ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் அனில், நரேந்திரன், அஜித்குமார் தலைமையில் நடைபெற்றது.

    அப்போது சபரிமலையில் பக்தர்களுக்கு பிரசாதமாக வினியோகம் செய்யப்படும் அரவணை, அப்பம் ஆகியவற்றின் வினியோக வசதிகள் குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் காலதாமதம் செய்து வரும் ஒப்பந்ததாரர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விசாரணை 24-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    • சபரிமலை வரும் பக்தர்களுக்கு உணவு பொருள்கள் விற்பனை செய்ய ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
    • சபரிமலை, பம்பை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 175 கடைகளில் இந்த சோதனை நடைபெற்றது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது.

    இதற்காக கடந்த 16-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. 17-ந் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    இம்முறை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் கோவிலுக்கு வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு இருமுடி கட்டி வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கேரள தேவசம் போர்டு செய்துள்ளது.

    சபரிமலை வரும் பக்தர்களுக்கு உணவு பொருள்கள் விற்பனை செய்ய ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    இவற்றில் விற்கப்படும் பொருட்களுக்கு மாவட்ட நிர்வாகம் விலை நிர்ணயம் செய்துள்ளது. அந்த விலையை விட கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்து இருந்தனர்.

    ஆனால் சபரிமலையில் மாவட்ட நிர்வாகம் நிர்ணயம் செய்த விலையை விட கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்கப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து நேற்று மாலை சபரிமலையில் அதிகாரிகள் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.

    பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள் தரமாக உள்ளதா? கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறதா? என்பது பற்றி அவர்கள் சோதனை நடத்தினர்.

    சபரிமலை, பம்பை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 175 கடைகளில் இந்த சோதனை நடைபெற்றது. இதில் பக்தர்களுக்கு கூடுதல் விலைக்கு உணவு பொருட்கள் விற்ற 6 நிறுவனங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

    மேலும் இதுபோன்று தொடர்ந்து விதிமீறல் நடந்தால் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

    ×