என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sadhguru"

    • கால்பந்தாட்ட சீசன் வேளையில், வளமான மண்ணை நாம் இழந்து கொண்டு இருக்கிறோம்.
    • வளமான நிலம் பாலைவனமாகி கொண்டு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    உலக மண் தினமான இன்று, மண் காப்போம் இயக்கம் சார்பில் பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உலகளாவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை சத்குரு தொடங்கி வைத்தார். கால்பந்தை பயன்படுத்தி சமூக வலைத்தளங்களின் வாயிலாக மண் வளப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பது இப்பிரச்சாரத்தின் நோக்கமாகும்.

    உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்றும் இவ்வேளையில் இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் தங்களுடைய சிறந்த கால்பந்தாட்ட வீடியோவை #ScoreForSoil என்ற ஹாஸ் டேக்கை பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் பதிவிடலாம். மேலும், அந்த வீடியோவில் மண் வளப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும் அவர்கள் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். 


    நிகழ்ச்சியில் சத்குரு கூறுகையில், நாம் கடந்த 25 ஆண்டுகளில் மட்டும் உலகின் மண் வளத்தை 10 சதவீதம் இழந்துவிட்டோம். கால்பந்தாட்ட சீசன் நடைபெறும் இவ்வேளையில், உலகளவில் ஒவ்வொரு 5 வினாடியும் ஒரு கால்பந்தாட்ட மைதானம் அளவிற்கு வளமான மண்ணை நாம் இழந்து கொண்டு இருக்கிறோம்; வளமான நிலம் பாலைவனமாகி கொண்டு இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்

    எனவே, மண் அழிவை தடுத்து, இழந்த மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக நாம் மண் காப்போம் இயக்கத்தை கடந்த மார்ச் மாதம் தொடங்கினோம். இவ்வியக்கம் தொடங்கப்பட்ட பிறகு உலகளவில் மண் தொடர்பான பார்வை மாறியுள்ளது. கடந்தாண்டு க்ளாகோவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மாநாட்டில் பருவநிலை மாற்றத்தில் முக்கிய பங்காற்றும் மண் குறித்து யாரும் பேசவில்லை.

    ஆனால், மண் காப்போம் இயக்கத்தின் பிரச்சாரத்தால் இந்தாண்டு எகிப்தில் நடைபெற்ற மாநாட்டில் மண் வளம் குறித்த முக்கிய கலந்துரையாடல்கள் நிகழ்ந்துள்ளது. எனவே, மண் வள மீட்டெடுப்பு கொள்கைகள் உலகளவில் கட்டாயம் உருவாக்கப்படும் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், அது எந்த வேகத்தில் நடக்கும் என்பது மட்டுமே என்னுடைய கவலையாக இருக்கிறது.

    எனவே, இந்த வேகத்தை துரிதப்படுத்துவதற்கு மக்கள் அனைவரும் பல்வேறு வழிகளில் மண் குறித்து தொடர்ந்து இடைவிடாமல் பேசி கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பெங்களூருவில் மண் வளப் பாதுகாப்பு தொடர்பான மோட்டார் சைக்கிள் பேரணியிலும் சத்குரு பங்கேற்றார்.

    • ஆதியோகிக்கு முன்பாக, சக்திவாய்ந்த யோகேஸ்வர லிங்கத்தை சத்குரு பிரதிஷ்டை செய்ய உள்ளார்.
    • லிங்க பைரவி, இரண்டு தீர்த்த குண்டங்கள், ஈஷா சம்ஸ்கிரிதி பள்ளி படிப்படியாக உருவாக்கப்பட உள்ளன.

    கோவை ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற ஆதியோகி திருவுருவத்தை போன்று, பெங்களூரு அருகே உள்ள சிக்கபல்லாபுரத்தில் 112 அடியில் ஆதியோகி திருவுருவம் ஜனவரி 15-ம் தேதி திறக்கப்பட உள்ளது.

    மகர சங்கராந்தி தினமான நாளை மறுநாள் சத்குரு முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில் துணை குடியரசு தலைவர் ஜகதீப் தன்கர் கலந்துகொண்டு ஆதியோகி திருவுருவத்தை திறந்து வைக்க உள்ளார். கர்நாடக மாநில ஆளுநர் தவார் சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட பல முக்கிய விருந்தினர்கள் இவ்விழாவில் பங்கேற்க உள்ளனர். மேலும், சத்குரு சந்நிதியில் நடைபெறும் இந்த பிரமாண்ட விழாவில் சுற்றுவட்டார கிராம மக்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    திறப்பு விழாவின் ஒரு பகுதியாக, ஆதியோகி சப்தரிஷிகளுக்கு யோக விஞ்ஞானத்தை பரிமாறிய வரலாற்றை 3டி ஒளி, ஒலி காட்சியாக விவரிக்கும் கண்ணை கவரும் 'ஆதியோகி திவ்ய தரிசனம்' நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. மேலும், ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் மற்றும் சவுண்ட்ஸ் ஆப் ஈஷா குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். இவ்விழாவை சத்குரு செயலி மற்றும் சத்குரு யூடியூப் சேனல், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேனல்களில் நேரலையில் காணலாம்.

    முன்னதாக, ஆதியோகிக்கு முன்பாக, சக்திவாய்ந்த யோகேஸ்வர லிங்கத்தை சத்குரு பிரதிஷ்டை செய்ய உள்ளார். இதற்கு முன்பு, கடந்த அக்டோபர் மாதம் அங்கு நாக பிரதிஷ்டை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    மக்களின் ஆன்மீக வளர்ச்சிக்காக சிக்கபல்லாபுரத்தில் உருவாக்கப்பட்டுள்ள சத்குரு சந்நிதியில், ஆதியோகி மட்டுமின்றி, கோவை ஈஷா யோகா மையத்தில் இருப்பதை போன்று லிங்க பைரவி, இரண்டு தீர்த்த குண்டங்கள், ஈஷா சம்ஸ்கிரிதி பள்ளி, ஈஷா ஹோம் ஸ்கூல், ஈஷா லீடர்ஷிப் அகாடமி ஆகிய கட்டமைப்புகளும் படிப்படியாக உருவாக்கப்பட உள்ளன.

    கோவையில் உள்ள ஆதியோகி திருவுருவத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2017-ம் ஆண்டு திறந்து வைத்தார். இதையடுத்து, ஆதியோகியை தரிசனம் செய்வதற்காக இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்கள் கோவைக்கு வருகை தருகின்றனர். ஆதியோகி திருவுருவமானது உலகளவில் மிகப்பெரிய மார்பளவு சிலை என்ற அடிப்படையில் கின்னஸ் சாதனை பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மனிதகுலம் அனைத்திற்கும் 'ஒரு துளி ஆன்மீகத்தை' வழங்க உலகம் முழுவதும் 'ஆன்மீக கட்டமைப்புகளை' நிறுவ வேண்டும் என்பது சத்குருவின் நோக்கம். சத்குரு சந்நிதி என்பது தனி மனிதர்களின் ஆன்மீக வளர்ச்சியை, முன்னேற்றத்தை ஊக்குவிக்கிற, பிரதிஷ்டை செய்யப்பட்ட சக்தி மிகுந்த இடமாகும். இது மனம், உடல், உணர்வுகள் மற்றும் ஆற்றலுக்கு தேவையான கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களை பண்டைய யோக அறிவியலில் இருந்து நமக்கு வழங்குகிறது. ஒரு மனிதனின் உள்நிலையை மேம்படுத்துவதும், சாதகர்களின் முழு திறனை உணரச்செய்யும் வாய்ப்பை உருவாக்குவதும் இதன் நோக்கம்.

    மனித அமைப்பிலுள்ள ஐந்து சக்கரங்களை வெளிப்படுத்தும் வகையில் ஆதியோகியின் அருகே யோகேஸ்வர லிங்கத்தை சத்குரு பிரதிஷ்டை செய்கிறார். யோகேஸ்வர லிங்கத்தின் இருப்பில் ஆதியோகி உயிர்ப்புமிக்க அம்சமாக மாறுவார்.

    • சிக்கபல்லாபுரத்தில் 112 அடியில் ஆதியோகி திருவுருவம் உருவாக்கப்பட்டது.
    • கோவை ஈஷா ஆதியோகி திருவுருவம் கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பெற்றுள்ளது

    பெங்களூரு:

    கோவையில் உள்ள ஆதியோகி திருவுருவத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2017-ம் ஆண்டு திறந்து வைத்தார். இதையடுத்து, ஆதியோகியை தரிசனம் செய்வதற்காக இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்கள் கோவைக்கு வருகை தருகின்றனர். ஆதியோகி திருவுருவமானது உலகளவில் மிகப்பெரிய மார்பளவு சிலை என்ற அடிப்படையில் கின்னஸ் சாதனை பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது.

    இதற்கிடையே, கோவை ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள ஆதியோகி திருவுருவம் போன்று பெங்களூரு அருகே உள்ள சிக்கபல்லாபுரத்தில் 112 அடியில் ஆதியோகி திருவுருவம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மகர சங்கராந்தி தினமான நேற்று சத்குரு முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை கலந்துகொண்டு ஆதியோகி திருவுருவத்தை திறந்து வைத்தார்.

    திறப்பு விழாவின் ஒரு பகுதியாக, ஆதியோகி சப்த ரிஷிகளுக்கு யோக விஞ்ஞானத்தை பரிமாறிய வரலாற்றை 3டி ஒளி, ஒலி காட்சியாக விவரிக்கும் கண்ணை கவரும் 'ஆதியோகி திவ்ய தரிசனம்' நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் மற்றும் சவுண்ட்ஸ் ஆப் ஈஷா குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

    இதற்கு முன்பு, கடந்த அக்டோபர் மாதம் அங்கு நாக பிரதிஷ்டை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    • கனிவான பாரதம் உருவாக்குவதற்கு ஒவ்வொரு குடிமகனும் தொடர்ந்து பங்களிக்க வேண்டும் என சத்குரு தெரிவித்துள்ளார்.
    • ஈஷா சம்ஸ்கிரிதி மற்றும் ஈஷா ஹோம் ஸ்கூல் பள்ளி மாணவர்கள் தேசப் பக்தி பாடல்களை பாடினர்.

    ஈஷாவில் இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் சத்குரு, தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விழாவில் அவர் பேசியதாவது:

    பாரத தேசத்தில் வாழும் நாம் ஜாதி, மதம், மொழி, இனம், உணவு பழக்கம், கலாச்சாரம் என பல விதங்களில் வேறுப்பட்டு உள்ளோம். நம்மிடம் எவ்வளவு வேறுபாடுகள் இருந்தாலும் நாம் அனைவரும் பல நூறு ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகிறோம். சுதந்திரத்திற்கு முன்பு நம் தேசத்தை 600-க்கும் மேற்பட்ட குறு நில அரசர்கள் ஆட்சி செய்து வந்தனர். இருப்பினும், வெளியில் இருந்து வந்தவர்கள் அனைவரும் நம்மை இந்துஸ்தான் அல்லது பாரதம் என்று ஒற்றை பெயர் வைத்தே அழைத்தனர்.

    நம்மிடம் இருக்கும் இந்த பன்மைத்துவத்தையும், வேறுபாடுகளையும் பயன்படுத்தி நமக்குள் பிரிவினையை உருவாக்கும் செயல்கள் கடந்த 600 முதல் 700 ஆண்டுகளில் மிகவும் தீவிரமாக நடந்துள்ளன. நம் தேசத்தின் மீது படையெடுத்தவர்களும், ஆக்கிரமித்தவர்களும் இதை பல வழிகளில் மிகவும் திட்டமிட்டு செய்துள்ளனர். குறிப்பாக, நம் தேசத்தின் பொருளாதார முதுகெலும்பை தகர்ப்பதற்கும் அவர்கள் செயல் செய்துள்ளார்கள்.

    300 ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகளவில் பொருளாதாரத்தில் வளமான தேசமாக நம் பாரத தேசம் இருந்தது. அந்த நிலையை மீண்டும் அடையும் முயற்சியில் நாம் தற்போது ஈடுப்பட்டு உள்ளோம். பொருளாதார பலம் இல்லாமல் கலாச்சாரம், ஆன்மீக விழுமியங்கள் என நாட்டில் உள்ள எதையும் நம்மால் பாதுகாக்க முடியாது. மேலும், நம்மிடம் இருக்கும் பல விதமான வேறுபாடுகளை கடந்து எது நம்மை ஒற்றுமையாக வைத்துள்ளது என்பதை நீங்கள் கண்டறிந்து அதைப் மேலும் பலப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு சத்குரு கூறினார்.

    மேலும், குடியரசு தினத்தை முன்னிட்டு சத்குரு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "#குடியரசுதினம் - மிகப்பெரிய ஜனநாயகமாக ஆனது மட்டுமல்லாமல், துடிப்பான, வேற்றுமைகளுடன் ஒற்றுமையான தேசியத்தின் முத்திரையாக மாறியுள்ள நம் அன்பான பாரதத்தின் அருமையான பயணத்தின் நினைவூட்டல். வலிமையான, அனைவரையும் இணைத்துக்கொள்ளக்கூடிய, கனிவான #பாரதம் உருவாக்குவதற்கு ஒவ்வொரு குடிமகனும் தொடர்ந்து பங்களிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

    ஈஷாவில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஈஷா சம்ஸ்கிரிதி மற்றும் ஈஷா ஹோம் ஸ்கூல் பள்ளி மாணவர்கள் தேசப் பக்தி பாடல்களை பாடி விழாவை சிறப்பித்தனர்.

    இது தவிர, ஈஷாவின் பிரதான நுழைவு வாயிலான மலைவாசலில் இக்கரை போளூவாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் சதானந்தம் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் பழங்குடி மக்கள் உட்பட நூற்றுக்கணக்கான கிராம மக்கள் பங்கேற்றனர்.

    • தலித் மக்கள் 80 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக முத்துமாரியம்மன் கோவிலுக்குள் நுழைந்து வழிபாடு செய்தனர்.
    • ஈஷாவில் உள்ள தியானலிங்கம் மற்றும் லிங்க பைரவியில் அனைத்து தரப்பு மக்களும் பாகுபாடின்றி அனுமதிக்கப்படுகின்றனர்.

    கோவை:

    திருவண்ணாமலை மாவட்டம் தென்முடியனூர் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்குள் தலித் மக்கள் செல்ல கடந்த 80 ஆண்டுகளாக அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இதையடுத்து, அந்தப் பகுதியை சேர்ந்த தலித் மக்கள் மாவட்ட ஆட்சிரியரிடம் இது குறித்து புகார் அளித்தனர்.

    இதை தொடர்ந்து கடந்த வாரம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் முன்னிலையில் தலித் மக்கள் 80 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக முத்துமாரியம்மன் கோவிலுக்குள் நுழைந்து வழிபாடு செய்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக சத்குரு அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தெய்வீகமும் பாகுபாடும் ஒன்றாக இருக்க முடியாதவை. தெய்வீகத்தின் சன்னிதியில் மனிதர்களுக்கிடையே நாம் பிரித்துப் பார்ப்பதே வெட்கப்பட வேண்டிய விஷயம். யார் தலித், யார் தலித் இல்லை என்று நாம் யோசிக்கவே கூடாது. தென்முடியனூருக்கு வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார்.

    ஈஷாவில் உள்ள தியானலிங்கம் மற்றும் லிங்க பைரவியில் துவக்கம் முதலே அனைத்து தரப்பு மக்களும் எந்த வித பாகுபாடின்றி அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் யார் வேண்டுமானாலும் தியானலிங்கத்திற்கு பால் மற்றும் தண்ணீர் அபிஷேகம் செய்யும் வாய்ப்பும் வழங்கப்பட்டு வருவதாக ஈஷா தெரிவித்துள்ளது.

    • உலக காஷ்மீரி பண்டிட் புலம்பெயர்ந்தோர் கூட்டமைப்பு என்ற அமைப்பை தொடங்கி உள்ளனர்.
    • இந்த அமைப்பு சார்பில் நடந்த மாநாட்டில் சத்குரு பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார்.

    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிகழ்ந்த காஷ்மீரி பண்டிட்கள் மீதான இனப் படுகொலையை உலகம் அங்கீகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் புலம்பெயர்ந்த காஷ்மீரி பண்டிட்கள் ஒன்றிணைந்து, உலக காஷ்மீரி பண்டிட் புலம்பெயர்ந்தோர் கூட்டமைப்பு என்ற அமைப்பை தொடங்கி உள்ளனர். இந்த அமைப்பு சார்பில் நடந்த மாநாட்டில் சத்குரு பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார்.

    அந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

    உலகளவில் காஷ்மீரி பண்டிட்கள் மீதான கருத்துருவாக்கத்தை மாற்ற வேண்டியது மிகவும் அவசியம். குறைந்தப்பட்சம் இந்தியாவில் வாழும் அனைத்து இந்தியர்களும் நம்முடைய காஷ்மீரி பண்டிட்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அவலங்களைக் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். தனி நபராகவும் குடும்பமாகவும் நீங்கள் சந்தித்த வலிகளை 10 முதல் 20 நிமிட குறும்படங்களாக தயாரித்து வெளியிட வேண்டும். இதற்கு திரையரங்குகள் தேவையில்லை. நம் அனைவரிடமும் மொபைல் போன்களும், கம்ப்யூட்டர்களும் உள்ளன. இந்த தொழில்நுட்பங்களே போதுமானது.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவுகளில், உங்கள் ஒவ்வொருவருடைய ஆழமான வலிகளுக்கும் என் இதயம் அனுதாபம் கொள்கிறது. காஷ்மீர் கருத்துருவாக்கத்தை மீண்டும் பேச வேண்டிய நேரமிது. காஷ்மீர் இளைஞர்கள் இந்தப் பொறுப்பை கையிலெடுக்க வேண்டும். காஷ்மீரின் தலையெழுத்தை மாற்றி எழுதவேண்டும்.

    நம்மால் நடந்து முடிந்தவற்றை சரிசெய்ய முடியாது. ஆனால், கொண்டாட்டம் மிகுந்த எதிர்காலத்தை உருவாக்க நம்மால் உறுதி எடுக்கமுடியும். காஷ்மீரின் எதிர்காலம் மற்றும் கருத்துருவாக்கத்தை மாற்றும் பணியில் இளைஞர்கள் சக்திவாய்ந்த மற்றும் பொறுப்பு மிக்கவர்களாக திகழ வேண்டும். என் வாழ்த்துக்களும், ஆசியும் உங்களுடன் இருக்கும்." என பதிவிட்டுள்ளார்.

    இதுதவிர, காஷ்மீரின் செழிப்பான கலாச்சாரம் மற்றும் ஆன்மீக அம்சங்களைப் பாதுகாக்க, ஆதரவு அளிக்க தான் தயாராக இருக்கிறேன். இந்தியாவின் தென் பகுதிகளில் நீங்கள் காஷ்மீர் தினம் என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை நடத்தலாம். அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்து தருகிறோம். அந்நிகழ்ச்சி மூலம் உங்களுடைய கலை, இலக்கியம், இசை என அனைத்தையும் பிற மக்கள் அறிந்து கொள்ளட்டும். உங்களுடைய கதைகள் வலிகளுடன் மட்டும் நின்று விடாமல், காஷ்மீர் கலாச்சாரத்தின் அழகையும், உங்களுக்குள் இருக்கும் துடிப்பான அதிர்வுகளையும் வெளிப்படுத்தும் வண்ணம் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • சர்வதேச நதிகள் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
    • வளமிழந்த மண்ணால் தண்ணீரை உறிஞ்சவோ, சேர்க்கவோ முடியாது.

    கோவை:

    சர்வதேச நதிகள் அமைப்பு "சர்வதேச நதிகள் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள் தினத்தை" ஆண்டுதோறும் மார்ச் 14 ஆம் தேதி கொண்டாடி வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு சர்வதேச நதிகள் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி சத்குரு தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிபிட்டுள்ளதாவது:

    "கரிமவளம் நிறைந்த மண்ணால்தான் மழைநீரை உறிஞ்சி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி, நதிகளில் நீரோடச் செய்திட முடியும்; வளமிழந்த மண்ணால் தண்ணீரை உறிஞ்சவோ, சேர்க்கவோ முடியாது. எனவே நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அல்லது வறண்டுவிடும். மண்காப்போம், நதிகளை காப்போம். இவ்வாறு அவர் குறிபிட்டுள்ளார்.

    • தமிழ் மக்களுக்கு விவசாயத்தில் மிகவும் ஆழமான அனுபவம் உள்ளது.
    • சிறுதானியங்கள் வளரும் இடத்தின் மண் வளமாகவே இருக்கும்.

    கோவை:

    ஈஷா நிறுவனர் சத்குரு வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தி பின்வருமாறு:

    உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். நம் தமிழ்க் கலாச்சாரத்தில், மண்ணை 'தாய் மண்' எனச் சொல்லுகிறோம். ஏனெனில், அந்தக் காலத்திலிருந்தே மண் நம் உயிருக்கு மூலமானது, நம் தாய் போல என்று உணர்ந்து, நாம் பல்லாயிரம் வருடங்களாக விவசாயம் செய்து வருகிறோம். தமிழ் மக்களுக்கு விவசாயத்தில் மிகவும் ஆழமான அனுபவம் உள்ளது. அப்படி இருப்பினும், கடந்த இருபது, முப்பது வருடங்களில் நம் மண்ணைக் காப்பாற்றாமல் விட்டுவிட்டோம்.

    நம் மண்ணைக்காக்க, நாம் அனைவரும் கம்பு, வரகு, சாமை, ராகி உள்ளிட்ட சிறுதானியங்களை நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், சிறுதானியங்கள் வளரும் இடத்தின் மண் வளமாகவே இருக்கும்.

    மேலும், தமிழ் என்பது வெறும் மொழி மட்டுமல்ல. இது ஒரு பெருமை, இது ஒரு திறமை. திறமை என்றால் ஏதோ ஒரு செயல் மட்டும் இல்லை. நாம் வாழும் முறையிலேயே நம் திறமை காட்டப்படவேண்டும். நம் தமிழ் கலாச்சாரத்தில், இலக்கியத்தில், எல்லா இடங்களிலும், சித்தர், யோகிகள் என இருந்தனர். உள்நிலையில் எப்படி இருக்கிறோம் என்பது முக்கியம் என்பதால், ஒரு ஊரை உருவாக்கும் முன்னரே அங்கு கோயிலை உருவாக்கினோம்.

    பொருளாதாரம், குடும்ப வாழ்க்கை என எல்லாவற்றையும்விட முக்கியமானது நமது ஆன்மீகம். நாமே ஒரு கோயிலாக வாழவேண்டும் என்பதாலேயே, தமிழ்நாட்டின் குறியீடாக ஒரு கோயிலை வைத்துள்ளோம். இதுதான் தமிழ் கலாச்சாரம். இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் அனைவருக்கும் எனது ஆசியும், வாழ்த்துக்களும்.

    இவ்வாறு சத்குரு கூறி உள்ளார்.

    • ஆன்மீக பாதையில் இருப்பவர்களுக்கு குருவின் வழிகாட்டுதல் அத்தியாவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
    • ‘உயிர் நோக்கம்’ என்ற எளிய ஆன்மீக பயிற்சி தமிழ் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

    ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த குரு பெளர்ணமி தினமான இன்று ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், "சத்குரு, உங்கள் இதய துடிப்பாக இருக்க முடியும், உங்கள் உயிர் மூச்சாக இருக்க முடியும் அல்லது உங்கள் முக்திக்கு நோக்கமாகவும் இருக்க முடியும். உங்கள் விருப்பம், நீங்கள் என்னை எப்படி வேண்டுமென்றாலும் எடுத்து கொள்ளலாம். ஆனால், நான் எப்போதுமே உங்களுக்காக தான் இருக்கிறேன்" என கூறியுள்ளார்.

    நம் பாரத கலாச்சாரத்தில் ஆன்மீக பாதையில் இருப்பவர்களுக்கு குருவின் தேவையும், அவரின் வழிகாட்டுதலும் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சத்குரு அவர்கள் சம காலத்தில் உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான ஆன்மீக சாதகர்களுக்கு குருவாக விளங்குகிறார்.

    குரு பெளர்ணமியை முன்னிட்டு சத்குருவின் அன்பளிப்பாக, 'உயிர் நோக்கம்' என்ற எளிய ஆன்மீக பயிற்சி தமிழ் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. ஆன்லைன் வாயிலாக ஜூலை 7 முதல் ஜூலை 9 வரை 3 நாட்கள் நடைபெறும் இந்த யோகா வகுப்பில் பஞ்ச பூதங்களின் உதவியுடன் ஒருவர் தனது உடல் மற்றும் மன நலத்தை மேம்படுத்திக் கொள்ளும் வழிமுறைகள் கற்றுக் கொடுக்கப்படும்.

    இவ்வகுப்பில் பங்கேற்க Isha.co/unosm என்ற இணையதள முகவரியில் ஜூலை 4-ம் தேதி நள்ளிரவுக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    • உன் உறுதியால் உன் சமூகத்திற்கும் மாநிலத்திற்கும் பெருமை சேர்த்துள்ளாய்.
    • டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைகழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

    நாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவரின் மகளான ஐஸ்வர்யா, இளங்கலை மீன்வள அறிவியல் படிப்பில் 14 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். இந்த சாதனைக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், சத்குரு தனது டுவிட்டர் பக்கத்தில் ஐஸ்வர்யாவிற்கு தன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    "ஐஸ்வர்யாவுக்கு என் பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும். என் வருங்காலத்தை நானே உருவாக்க வேண்டும் என்ற உன் உறுதியால் உன் சமூகத்திற்கும் மாநிலத்திற்கும் பெருமை சேர்த்துள்ளாய். உண்மையாகவே ஊக்கமளிக்கிறது. ஆசிகள்" என சத்குரு கூறியுள்ளார்.

    டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைகழகத்தில் நேற்று நடைபெற்ற எட்டாவது பட்டமளிப்பு விழாவில் தங்கம் வென்ற மாணவி ஐஸ்வர்யா கூறுகையில், "தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தின் உதவியுடன், மீனவர் ஒதுக்கீட்டின் கீழ் படித்தேன். நுழைவுத் தேர்வின் மூலம் தேர்ச்சி பெற்று இந்த படிப்பில் இணைந்தேன்" என தெரிவித்துள்ளார்.

    • கிராம பகுதிகளில் மக்கள் சத்குருவின் படத்தை வைத்து பூஜைகள் செய்தும், இனிப்புகள் வழங்கியும், அன்னதானமிட்டும் பெரு விமர்சையாக கொண்டாடினர்.  
    • ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இந்த ஊர்வலத்தில், மலைவாழ் மக்கள் அவர்களுக்கே உரிய மேளங்கள் முழங்க நடனமாடி கொண்டாட்டத்துடன் விழாவை நடத்தினர்

    சத்குரு பிறந்தநாளான செப்.3ந்தேதியை ஆயிரக்கணக்கான மலைவாழ் மக்களும், கிராம மக்களும் ஒன்று கூடி பக்தியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

    ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் சத்குருவின் படத்தை வைத்து பூஜைகள் செய்தும், இனிப்புகள் வழங்கியும், அன்னதானமிட்டும் பெரு விமர்சையாக பக்தியுடன் கொண்டாடினர். 

    ஈஷா யோகா மையத்தை சுற்றியிருக்கும் கிராம பகுதிகளான மத்வராயபுரம், முட்டத்துவயல் ஆகிய கிராம பகுதிகளில் சத்குருவின் படத்தை வைத்து வழிபட்டு அன்னதானமிட்டு கொண்டாடினர். மேலும் தேவராயபுரம், விராலியூர், நரசிபுரம், இந்திராநகர் (விராலியூர்), காந்தி காலனி (செம்மேடு) ஆகிய பகுதியில் சத்குருவின் படம் வைத்து பூஜைகள் செய்து இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியையும் பக்தியையும் பகிர்ந்து கொண்டனர்.

    இதைப்போலவே மலைவாழ் மக்கள் வசிக்கும் பஞ்ச கிராமம் என்று அழைக்கப்படும் பட்டியார் கோவில் பதி, மடக்காடு, தாணிக்கண்டி, முள்ளங்காடு, குலத்தேரி ஆகிய கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்கள் சத்குருவின் படத்தை ரதத்தில் வைத்து ஊர்வலமாக எடுத்து வந்து ஆதியோகியின் சிலையின் முன்பாக மாலை 6.30 மணியளவில் ஊர்வலத்தை நிறைவு செய்தனர்.  இந்த கொண்டாட்டங்களில் சிங்கப்பதி, சர்கார் போரத்தி, நல்லூர்பதி, சந்தேகவுண்டன் பாளையம் ஊர்களை சேர்ந்த மக்களும் கலந்து கொண்டனர்.

    ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இந்த ஊர்வலத்தில், மலைவாழ் மக்கள் அவர்களுக்கே உரிய மேளங்கள் முழங்க நடனமாடி கொண்டாட்டத்துடன் இந்த விழாவை நடத்தினர். இந்த ஊர்வல நிறைவை தொடர்ந்து ஆலந்துறை, தொண்டாமுத்தூர், அட்டுக்கள், சந்தேகவுண்டன் பாளையம், பூலுவாம்பட்டி மக்கள் ஒன்றிணைந்து இரவு அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

    ஈஷா யோகா மையத்தை சுற்றி இருந்த அனைத்து கிராம மற்றும் மலைவாழ் பகுதிகளும் நாள் முழுவதும் நிகழ்ந்த ஏராளமான நிகழ்ச்சிகளால்  விழா கோலம் பூண்டிருந்தது.

    • 15-வது ஈஷா கிராமோத்சவம் திருவிழாவில் 25,000 கிராமங்களில் இருந்து 60,000 வீரர்கள் பங்கேற்று விளையாடினர்.
    • கிராமங்களில் ஜாதி, மதம், வயது என பல வேறுபாடுகளை கடந்து ஒரே அணியாக ஒற்றுமையாக விளையாட இத்திருவிழா காரணமாக அமைந்தது.

    கோவை:

    தென்னிந்திய அளவில் நடத்தப்பட்ட 15-வது ஈஷா கிராமோத்சவம் திருவிழாவில் 25,000 கிராமங்களில் இருந்து 60,000 வீரர்கள் பங்கேற்று விளையாடினர்.

    குறிப்பாக, கிராமங்களில் ஜாதி, மதம், வயது என பல வேறுபாடுகளை கடந்து ஒரே அணியாக ஒற்றுமையாக விளையாட இத்திருவிழா காரணமாக அமைந்தது.

    இது குறித்து சத்குரு அளித்த பேட்டியை இந்த வீடியோவில் பார்க்கலாம்....

    https://drive.google.com/file/d/1r4Zu7lnl9l7ZRV3uCxXtHye5xbgOMTff/view?pli=1

    ×