என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Sai Sudarsan"
- திருச்சி அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்களை எடுத்து
- 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷாருக்கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கோவை:
கோவையில் நடைபெற்று வரும் டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற கோவை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் இறங்கிய திருச்சி அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கோவை அணியினரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் 35 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டை இழந்து திருச்சி அணி தத்தளித்தது.
சஞ்சய் யாதவ், ஜாபர் ஜமால் ஜோடி நிதானமாக ஆடியது. 7வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்த நிலையில் சஞ்சய் யாதவ் 34 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்களை எடுத்தது. ஜாபர் ஜமால் அதிரடியாக ஆடி 41 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
கோவை அணி சார்பில் கேப்டன் ஷாருக் கான் மற்றும் முகமது ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 125 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை அணி களமிறங்கியது. ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய சுரேஷ்குமார் டக் அவுட்டாகி வெளியேற அடுத்ததாக வந்த சாய் சுதர்சன் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். 7 ரன்னிற்குள் 2 விக்கெட்டுகளை இழந்து கோவை தடுமாறியது. அப்போது களத்தில் இருந்த சுஜய் - முகிலேஷ் ஜோடி நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர்.
16.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களை சேர்த்து கோவை அணி எளிதாக இப்போட்டியில் வென்றது. நிதானமாக விளையாடிய முகிலேஷ் 63 ரன்களும் சுஜய் 48 ரன்களும் அடித்தனர்.
சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷாருக்கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- இளம் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி 47 பந்தில் 96 ரன்கள் குவித்தார்.
- சென்னை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சாய் சுதர்சனின் அதிரடி ஆட்டத்தை கண்டு மகிழ்ந்த சச்சின்.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடந்தன.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
போட்டியின்போது முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.
குஜராத் பேட்டிங்கில், சுப்மான் கில்தான் அதிகமாக ரன் குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இளம் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி 47 பந்தில் 96 ரன்கள் குவித்தார். இதன் மூலம் பல்வேறு சாதனைகளை பதிவு செய்துள்ளார் சாய் சுதர்சன்.
இந்நிலையில் சென்னை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சாய் சுதர்சனின் அதிரடி ஆட்டத்தை இந்திய முன்னாள் நட்சத்திர வீரரும், லெஜண்ட்டுமான சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், "இன்றிரவு என் கண்களுக்கு விருந்து படைத்தார் சாய் சுதர்சன்.. நன்றாக விளையாடினாய் சாய்" என்று பதிவிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்