search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sakshi Malik"

    • வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் இந்திய மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
    • இந்தியா வந்தடைந்த வினேஷ் போகத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பாரீஸ் ஒலிம்பிக்ஸ் பெண்கள் மல்யுத்த இறுதிப்போட்டியில் [50 கிலோ எடைப் பிரிவு] இந்திய வீராங்கனை வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

    எடை அதிகரித்ததால் வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று இந்திய ஒலிம்பிக் சமேளனமும் கைவிரித்துவிட்டது. வெள்ளிப் பதக்கம் கேட்டு வினேஷ் அளித்த மனுவையும் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் ஆகஸ்ட் 14 அன்று தள்ளுபடி செய்தது.

    மல்யுத்தத்தில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள வினேஷ் பாரீஸ் ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து நாடு திரும்பினார். இன்று, வினேஷ் போகத் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வினேஷ் போகத்தை வரவேற்க அவரது சகோதரர் ஹரிந்தர் சிங் வந்திருந்தார்.

    விமான நிலையத்திற்கு வந்திருந்த மல்யுத்த வீரர்களான சாக்க்ஷி மாலிக், பஜ்ரங் புனியாவை பார்த்ததும் வினேஷ் போகத் கட்டிப்பிடித்து கண்ணீர் வடித்தார்.

    இந்நிலையில், மல்யுத்த வீராங்கனை சாக்க்ஷி மாலிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வினேஷ் போகத்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

    அந்த பதிவில், 'வெல்கம் சாம்பியன் வினேஷ் போகத்' என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    • டெல்லியில் உள்ள ஜந்தர் மந்திரில் 100-க்கும் மேற்பட்ட இளம் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பஜ்ரங் புனியா, சாக்‌ஷி மாலிக் ஆகியோர் எங்கள் வாழ்க்கையில் ஓராண்டை வீணாக்கி விட்டனர் என்றனர்.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது. இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முன்னணி வீரர்களான சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் டெல்லி ஜந்தர்மந்தர் மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டத்துக்கு சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், மகளிர் அமைப்பினர் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர்.

    இதையடுத்து, இந்திய மல்யுத்த கூட்டமைப்பு 2 முறை இடைநீக்கம் செய்யப்பட்டு, கூட்டமைப்பை தற்காலிகக் குழு நிர்வகித்து வருகிறது. கடந்த 2023 ஜனவரியிலிருந்து தேசிய சாம்பியன்கள் மற்றும் பிற போட்டிகள் எதுவும் நடத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்திரில் 100-க்கும் மேற்பட்ட இளம் மல்யுத்த வீரர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் ஆகியோர் எங்கள் வாழ்க்கையில் ஓராண்டை வீணாக்கி விட்டனர் என்றனர்.

    இம்மூன்று மல்யுத்த சாம்பியன்களும் தங்களின் வாழ்க்கையை அழித்துவிட்டதாகக் கூறி, அவர்களுக்கு எதிராக இளம் மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    மேலும், 'சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பே.. எங்களை இந்த 3 வீரர்களிடம் இருந்து காப்பாற்றுங்கள்' என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்

    இந்தப் போராட்டத்தில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகித்து வரும் தற்காலிகக் குழுவை கலைத்துவிட்டு, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் இடைநீக்கம் செய்திருக்கும் கூட்டமைப்பு நிர்வாக அமைப்பை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஜாக்ரெப் ஓபன் மல்யுத்த போட்டி குரோஷியாவில் வரும் 10-ம் தேதி தொடங்குகிறது.
    • இந்திய அணியில் 13 வீரர், வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    முதலாவது உலக ரேங்கிங் போட்டியான ஜாக்ரெப் ஓபன் மல்யுத்த போட்டி குரோஷியாவில் வரும் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடக்கிறது.

    இந்தப் போட்டியில் பங்கேற்கும் இந்திய மல்யுத்த அணியை இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் நியமிக்கப்பட்ட பூபிந்தர் சிங் பஜ்வா தலைமையிலான இடைக்கால கமிட்டி அறிவித்துள்ளது. இந்திய மல்யுத்த சம்மேளனம் இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகு அறிவிக்கப்பட்ட முதல் அணி இதுவாகும். அணியில் 13 வீரர், வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.

    ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற வீரருமான பஜ்ரங் பூனியா, சீனியர் உலக போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இளம் வீராங்கனை அன்திம் பன்ஹால் ஆகியோர் இடம் பெறவில்லை.

    இந்நிலையில், மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் கூறுகையில், சஞ்சய் சிங்குடன் தான் எங்களுக்கு பிரச்சனை ஏற்பட்டது. புதிய கூட்டமைப்பு அமைப்பு அல்லது தற்காலிகக் குழுவுடன் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. சஞ்சய் சிங்கிற்கு மல்யுத்த கூட்டமைப்பு ஆணையத்தில் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை உறுதி செய்யுமாறு பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரை கேட்டுக் கொள்கிறேன். பிரிஜ் பூஷன் என் குடும்பத்தைக் குறிவைக்கிறார். எங்கள் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் பொறுப்பு என தெரிவித்தார்.

    • பிரிஜ்பூஷன் உறவினர் தலைவராக தேர்வானதைக் கண்டித்து மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன் என்றார் சாக்‌ஷி மாலிக்.
    • மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக்கின் முடிவுக்கு நடிகை ரித்திகா சிங் வேதனை தெரிவித்துள்ளார்.

    இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் முன்னாள் தலைவரின் உறவினரான சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

    இதற்கிடையே, டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், புதிய தலைவராக ஒரு பெண் தான் வரவேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம். ஆனால், தலைவர் பதவிக்கான போட்டியாளர்கள் பட்டியலில் ஒரு பெண்கூட இல்லை. பிரிஜ் பூஷனின் உறவினரை தான் தலைவராக தேர்ந்தெடுத்து உள்ளனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே நான் மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன் என தெரிவித்தார்.


    இந்நிலையில், நடிகை ரித்திகா சிங் தனது எதிர்ப்பை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

    அதில், வீராங்கனை சாக்ஷி மாலிக்கை இப்படி பார்க்கும்போது இதயம் உடைகிறது. ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பெருமை பெற்றுத் தந்த சாக்ஷி மாலிக் இவ்வளவு ஆண்டுகள் கடின உழைப்பினை, கனவுகளை நம்பிக்கைகளை கைவிட்டு 'நான் விலகுகிறேன்' என கூறுவது பேரழிவானது. தற்போதும், போராட்டத்தின் போதும் சாக்ஷி மாலிக் எதிர்கொண்ட அவமரியாதை கொடுமையானது என பதிவிட்டுள்ளார்.

    நடிகை ரித்திகா சிங் 'இறுதிச்சுற்று' திரைப்படத்தில் மல்யுத்த வீராங்கனையாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாங்கள் ஆசிய விளையாட்டு போட்டிக்கு தயாராவதற்கு அரசாங்கத்திடம் கூடுதல் அவகாசம் கேட்டு இருந்தோம்.
    • தகுதி தேர்வில் பங்கேற்காமல் நேரடியாக போட்டிக்கு தகுதி பெற நான் விரும்பவில்லை.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா. ஜனதா எம்.பி.யுமான பிரிஜ்பூஜன் சரண் சிங் மீது வீராங்கனைகள் பாலியல் புகார்களை தெரிவித்து டெல்லியில் மல் யுத்த வீரர்-வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    முன்னணி வீரர்-வீராங்கனைகள் நடத்தி வரும் இப்போராட்டம் தொடர்ந்தபடி இருந்து வருகிறது. இந்நிலையில் சீனாவில் செப்டம்பர் மாதம் தொடங்கும் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்று பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் ஆகியோருக்கு தகுதி தேர்வில் இருந்து விதி விலக்கு அளிக்கப்பட்டு நேரடியாக கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

    டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் இருவருக்கும் இந்த சலுகையை இந்திய மல்யுத்த சம்மேளனத்தை நிர்வகிக்கும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இடைக்கால கமிட்டி வழங்கியது. இதற்கு இளம் வீரர், வீராங்கனைகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    அவர்கள் டெல்லியில் உள்ள இந்திய ஒலிம்பிக் சங்க அலுவலகம் முன்பு நேற்று போராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் போராட்டத்தில் பங்கேற்றுள்ள மற்றொரு வீராங்கனையான சாக்ஷி மாலிக் கூறியதாவது:-

    நாங்கள் ஆசிய விளையாட்டு போட்டிக்கு தயாராவதற்கு அரசாங்கத்திடம் கூடுதல் அவகாசம் கேட்டு இருந்தோம். ஆகஸ்டு 10-ந் தேதிக்கு பிறகு தகுதியை சோதிக்குமாறு கோரியிருந்தோம். இதையடுத்து அரசாங்கம் கால அவகாசம் வழங்கியது.

    வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோருக்கு ஆசிய விளையாட்டு தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் அரசாங்கத்தின் முடிவு, மல்யுத்த வீரர்களின் ஒற்றுமையை உடைக்கும் முயற்சியாகும். ஒலிம்பிக் பதக்கம் வென்றவர் என்ற காரணத்திற்காக எனது பெயரும் பரிசீலிக்கப்படும் என்று எனக்கு மின்னஞ்சல் வந்தது. ஆனால் நான் மறுத்து விட்டேன். தகுதி தேர்வில் பங்கேற்காமல் நேரடியாக போட்டிக்கு தகுதி பெற நான் விரும்பவில்லை.

    அனைவருக்கும் நீதியும் நியாயமான தேர்வுக்கான வாய்ப்பும் கிடைக்க வேண்டும். மல்யுத்த வீரர்களின் பெயர்களை நேரடியாக அனுப்புவதன் மூலம் அவர்களுக்கு இடையிலான ஒற்றுமையை உடைக்க அரசாங்கம் முயற்சித்துள்ளது.

    அரசாங்கத்தின் இந்த செயலுக்கு பின்னால் உள்ள நோக்கங்கள் குறித்து நான் கவலைப்படுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று 15-ந்தேதி வரை போராட்டத்தை மல்யுத்த வீராங்கனைகள் ஒத்தி வைத்தனர்.
    • பிரிஜ்பூஷன் சிங் தனது செல்வாக்கை பயன்படுத்தி விசாரணையில் தலையிடுகிறார்.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் கூறி உள்ளனர். அவர் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தாலும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

    இதனால் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங்புனியா, வீராங்கனை சாக்ஷி மாலிக் மற்றும் ஆசிய, காமன் வெல்த்தில் பதக்கம் வென்ற வினேஷ் போகத் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களுடன் மத்திய விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் தாக்கூர் கடந்த 7-ந்தேதி நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று 15-ந்தேதி வரை போராட்டத்தை மல்யுத்த வீராங்கனைகள் ஒத்தி வைத்தனர்.

    அன்றைய தேதியில் பாலியல் புகார் விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதனால் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கமாட்டோம் என்று சாக்ஷி மாலிக் மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்தால் தான் நாங்கள் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்போம். தீர்வு கிடைக்காவிட்டால் புறக்கணிப்போம். இது எவ்வளவு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியாது.

    நான், பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோர் ஒன்றாகவே இணைந்து நிற்கிறோம். ஒன்றாகவே இணைந்து நிற்போம். 15-ந் தேதிக்கு பிறகு போராட்டத்தை எங்கிருந்து தொடங்குவது என்பது குறித்து முடிவு செய்வோம். எங்களை சமாதானப்படுத்த தொடர்ந்து நெருக்கடி கொடுக்கப்படுகிறது.

    இவ்வாறு சாக்ஷி மாலிக் கூறியுள்ளார்.

    பஜ்ரங் புனியா நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரிஜ்பூஷன் சிங்கை வருகிற 15-ந்தேதிக்குள் கைது செய்யாவிட்டால் எங்களது போராட்டம் மீண்டும் நடைபெறும் ஜந்தர்மந்தரில் இருந்து 17-ந்தேதி போராட்டத்தை மீண்டும் தொடங்குவோம். புகார் கொடுத்தவர்களுக்கு நெருக்கடி அளிக்கப்படுகிறது. பிரிஜ்பூஷன் சிங் தனது செல்வாக்கை பயன்படுத்தி விசாரணையில் தலையிடுகிறார். மிரட்டல் காரணமாக புகார் கொடுத்த மல்யுத்த வீராங்கனைகள் அச்சத்தில் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பெண்களின் நலனுக்காக போராடும் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் சாக்ஷி மாலிக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • பிரிஜ் பூஷனை சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று மல்யுத்த வீரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண்சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த பாலியல் குற்றச்சாட்டு குறித்து டெல்லி போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே பிரிஜ் பூஷனை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 23-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த போராட்டம் நேற்று 18-வது நாளாக நீடித்தது.

    இந்த நிலையில் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை மறுக்கும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண்சிங்கை சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நேற்று வேண்டுகோள் விடுத்தனர்.

    இது குறித்து ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற வீராங்கனை சாக்ஷி மாலிக் கூறுகையில்,

    'இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷனை சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். அதேபோல் புகார் கூறிய 7 வீராங்கனைகளுக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தலாம். அப்போது தான் யார் குற்றவாளி, யார் குற்றவாளியில்லை என்பது தெரியவரும். குற்றவாளி யாராக இருந்தாலும் அவர்களை தூக்கில் போடுங்கள். பெண்களின் நலனுக்காக போராடும் எங்களுக்கு அனைத்து பெண்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்' என்றார்.

    'அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து நாளை (இன்று) கருப்பு பட்டை அணிந்து போராட்டம் செய்ய இருக்கிறோம்' என்று ஆசிய போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனையான வினேஷ் போகத் கூறினார்.

    டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற வீரரான பஜ்ரங் பூனியா கூறுகையில், 'மல்யுத்த போட்டிகளை நடத்துவதற்கு நாங்கள் எந்தவகையிலும் எதிர்ப்பு காட்டவில்லை. எல்லா மல்யுத்த போட்டிகளையும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் நியமிக்கப்பட்டு இருக்கும் இடைக்கால கமிட்டி நடத்த வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கையாகும். போட்டிகளை நடத்தும் விஷயத்தில் பிரிஜ் பூஷனின் தலையீடு எந்த வகையில் இருந்தாலும் அதனை நாங்கள் எதிர்ப்போம்' என்றார்.

    துருக்கில் நடைபெற்ற யாசர் டோகு சர்வதேச மல்யுத்தம் தொடரில் இந்தியாவின் பஜ்ரங், புனியாக தங்கப்பதக்கம் வென்றனர். #BajrangPunia
    துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் யாசர் டோகு சர்வதேச மல்யுத்த தொடர் நடைபெற்றது. இதில் பெண்களுக்கான 55 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை பிங்கி உக்ரைனின் ஒல்கா ஷ்னைடரை எதிர்கொண்டார். இதில் பிங்கி 6-3 என வெற்றி தங்கப்பதக்கம் வென்றார்.

    ஆனால் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக் 62 கிலோ எடைப்பிரிவில் ஏமாற்றம் அடைந்தனர்.

    ஆண்களில் பஜ்ரங் புனியா தங்கப்பதக்கம் வென்றார். 70 கிலோ எடைப்பிரிவில் அவருன் மோதக்கூடிய வீரர் காயத்தால் போட்டியில் இருந்து விலகியதால், போட்டியிடாமல் வெற்றி பெற்றார். இந்த தொடரில் இந்தியா மொதம் 10 பதக்கங்களை கைப்பற்றியது. இதில் பெண்கள் ஏழு பதக்கங்களை வென்றனர்.
    ×