search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Salem News: Application"

    • முகாமில் 4 லட்சத்து 4 ஆயிரத்து 449 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
    • 1541 மையங்களில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.

    சேலம்:

    தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிைம திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந் தோறும் 1000 உதவி தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பெற சேலம் மாவட்டத்தில் 2 கட்டங்களாக முகாம்கள் நடந்தது. முதல்கட்டமாக கடந்த மாதம் 24-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை 846 மையங்களில் நடந்த முகாமில் 4 லட்சத்து 4 ஆயிரத்து 449 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தொடர்ந்து 2-வது கட்டமாக கடந்த 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை 695 மையங்களில் நடந்த முகாமில் 3 லட்சத்து 9 ஆயிரத்து 213 விண்ணப் பங்கள் என மொத்தம் 1541 முகாம்கள் மூலம் 7 லட்சத்து 13 ஆயி ரத்து 662 விண்ணப் பங்கள் பெறப்பட்டுள்ளன.

    இதற்கிடையே ஓய்வூதியம் பெறும் மாற்று திறனாளிகள் தவிர அக்குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்களும் இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசிய திட்டம் முதல்-அமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் விண்ணப்பிக்கலாம் இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி சேலம் மாவட்டத்தில் இன்று (18-ந் தேதி) முதல் வரும் 20-ந் தேதி வரை 3 நாட்களுக்கு ஏற்கனவே முகாம் நடைபெற்ற அதே 1541 மையங்களில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இந்த முகாம்கள் இன்று காலை தொடங்கியது.

    ஏற்கனவே 2 கட்டங்களாக நடைபெற்ற முகாம்களில் விடுபட்டவர்களும் இந்த சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே விண்ணப்பங்களை பதிவு செய்யாதவர்கள் இன்று காலை முதல் இந்த முகாம்களில் திரண்டுள்ளனர். அவர்களிடம் விண்ணப் பங்களை பெற்று அதிகாரிகள் பதிவு செய்து வருகிறர்கள். இதனை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    ×