என் மலர்
நீங்கள் தேடியது "Salman Butt"
- நம்மிடம் இருக்கும் திறமையை அனைத்தையும் உடனே காட்ட வேண்டும் என்று நினைக்கிறார்.
- ரன் சேர்க்க வேண்டும் என்றால் களத்தில் தொடர்ந்து பேட்டிங் செய்ய வேண்டும்.
லாகூர்:
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரம் என்று ரசிகர்கள் சுப்மன் கில்லை பாராட்டி வரும் நிலையில் அதற்கு ஏற்றார் போல் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என அனைத்திலும் சிறப்பாக கில் விளையாடினார்.
ஆனால் சமீப காலமாக கில் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தடுமாறி வருகிறார். டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தமக்கு கிடைக்கும் வாய்ப்பை வீணடித்து வருகிறார்.
இந்த நிலையில் இப்படி தான் ஆடுவேன் என்று பிடிவாதம் பிடிக்கக்கூடாது என கில் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
அவரிடம் உள்ள திறமைக்கு அவர் அநியாயம் செய்து வருகிறார். கில் ஒரு நல்ல கிரிக்கெட் வீரராக திகழ்கிறார்.அவரிடம் நிறைய திறமை இருக்கிறது. ஆனால் நம்மிடம் இருக்கும் திறமையை அனைத்தையும் உடனே காட்ட வேண்டும் என்று நினைக்கிறார். 20 ரன்கள் அடித்து விட்டு அதன் பிறகு ஒரு தேவையில்லாத ஷாட் அடி ஆட்டமிழந்து விடுகிறார். கடந்த ஆண்டு கில் நன்றாக விளையாடிய போது இந்த தவறை அவர் செய்யவில்லை. ரன் சேர்க்க வேண்டும் என்றால் களத்தில் தொடர்ந்து பேட்டிங் செய்ய வேண்டும்.
எந்த ஸ்பெஷல் ஷார்ட்டும் ஆடாமல் தொடர்ந்து பேட்டிங் செய்தாலே ரன்கள் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் ஆக இருந்தாலும் அனைத்து பந்து உங்களுடைய இஷ்டத்திற்கு விளையாட கூடாது என்பதை கில் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு பந்திற்கும் எப்படி விளையாட வேண்டும் என்பதை ரியாக்ட் தான் செய்ய வேண்டும். தவிர இப்படி தான் ஆடுவேன் என்று பிடிவாதம் பிடிக்கக்கூடாது.
என்று சல்மான் பட் கூறியுள்ளார்.
- வஹாப் ரியாஸ் பாகிஸ்தான் அணியின் புதிய தேர்வு குழு தலைவராக அறிவிக்கப்பட்டார்.
- கம்ரான் அக்மல், ராவ் இப்திகார் மற்றும் சல்மான் பட் ஆகியோர் தேர்வுக் குழுவின் ஆலோசகர்களாக செயல்படுவார் என்று பாகிஸ்தான் வாரியம் அறிவித்தது.
கராச்சி:
இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. குறிப்பாக 50 ஓவர் உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து 8-வது முறையாக தோல்வியை பதிவு செய்த பாகிஸ்தான் அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக தோற்றது.
இதனையடுத்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் பாபர் அசாம் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் வஹாப் ரியாஸ் பாகிஸ்தான் அணியின் புதிய தேர்வு குழு தலைவராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு உறுதுணையாக கம்ரான் அக்மல், ராவ் இப்திகார் மற்றும் சல்மான் பட் ஆகியோர் தேர்வுக் குழுவின் ஆலோசகர்களாக செயல்படுவார் என்று பாகிஸ்தான் வாரியம் அறிவித்தது. இதில் சல்மான் பட் ஆலோசகராக நியமிக்கப்பட்டது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஏனெனில் கடந்த 2010-ம் ஆண்டு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முகமது அமீர் மற்றும் முகமது ஆசிப் ஆகியோருடன் சேர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட சல்மான் பட் ஆதாரத்துடன் பிடிபட்டதால் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு தடை பெற்றார். அவரை தேர்வு குழுவின் ஆலோசகராக நியமிப்பது பாகிஸ்தான் அணியை எவ்வாறு முன்னோக்கி எடுத்துச் செல்லும்? என்று பல தரப்பினர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள்.
இந்நிலையில் தொடர்ச்சியான விமர்சனங்கள் எழுந்ததால் பாகிஸ்தான் தேர்வுக் குழு ஆலோசகராக நியமிக்கப்பட்ட சல்மான் பட் அந்த பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. வெளியிலிருந்து வந்த விமர்சனங்களை தாண்டி பாகிஸ்தான் வாரியத்திற்குள்ளேயே அவருக்கு சில எதிர்ப்புகள் உருவானதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேர்வுக் குழு தலைவர் வஹாப் ரியாஸ் தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு பதிலாக மற்றொரு முன்னாள் வீரர் குழுவின் ஆலோசகராக நியமிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் வஹாப் ரியாஸ் கூறியுள்ளார்.
- ஒருவேளை அவர் பாகிஸ்தானியராக இருந்திருந்தால், 30 வயதுக்கு மேல் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஆட வாய்ப்பே பெற்றிருக்கமாட்டார்.
- ரமீஸ் ராஜா இருந்தபோது 30 வயதுக்கு மேல் எந்த வீரரும் அறிமுகமாக முடியாது என்ற விதியை வகுத்திருந்தார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக சூர்யகுமார் யாதவ் வெறும் ஓராண்டில் வளர்ந்துள்ளார். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை பறக்கவிடக்கூடிய வீரர் என்பதால் டிவில்லியர்ஸுக்கு பின் மிஸ்டர் 360 என அழைக்கப்படுபவர் சூர்யகுமார் யாதவ்.
இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் கடைசி ஆட்டத்தில் சதம் விளாசி ஆட்டத்தின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 1500 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மாவுக்கு (4 சதங்கள்) அடுத்து 2-வது இடத்தில் இவர் உள்ளார். விரைவில் ரோகித் சர்மாவின் சாதனையை முறியடித்துவிடுவார் என எதிர் பார்க்கபடுகிறது.
30 வயதில் இந்திய அணியில் முதல் முறையாக ஆட வாய்ப்பு பெற்றார். அதன்பின்னர் இந்த 2 ஆண்டில் மிகப்பெரிய வீரராக வளர்ந்திருக்கிறார்.
இந்நிலையில், சூர்யகுமார் யாதவை வைத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தையும், அமைப்பையும் சல்மான் பட் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து சல்மான் பட் பேசியதாவது:-
சூர்யகுமார் யாதவ் 30 வயதுக்கு மேல் தான் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடவே தொடங்கினார் என படித்திருக்கிறேன். நல்வாய்ப்பாக சூர்யகுமார் யாதவ் இந்தியராக பிறந்துவிட்டார். ஒருவேளை அவர் பாகிஸ்தானியராக இருந்திருந்தால், 30 வயதுக்கு மேல் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஆட வாய்ப்பே பெற்றிருக்கமாட்டார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக ரமீஸ் ராஜா இருந்தபோது 30 வயதுக்கு மேல் எந்த வீரரும் அறிமுகமாக முடியாது என்ற விதியை வகுத்திருந்தார்.
என்று சல்மான் பட் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பை கடுமையாக விமர்சித்தார்.