search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    பாபர் அசாம் விராட் கோலி கிடையாது.. ஆனால்.. முன்னாள் வீரர்களுக்கு பதிலடி கொடுத்த சல்மான் பட்
    X

    பாபர் அசாம் விராட் கோலி கிடையாது.. ஆனால்.. முன்னாள் வீரர்களுக்கு பதிலடி கொடுத்த சல்மான் பட்

    • கோலி தான் கிரிக்கெட்டின் உண்மையான கிங் என்றும் பாபர் அசாம் கிடையாது எனவும் சோயப் அக்தர், ஹபீஸ் கூறினர்.
    • விராட் கோலியுடன் மேட்ச் வின்னர்களாக தோனி, ரோகித் சர்மா இருந்தார்கள்.

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நடப்புச் சாம்பியனாக களமிறங்கிய பாகிஸ்தான் அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது.

    அந்தத் தோல்விக்கு நம்பிக்கை நட்சத்திரம் பாபர் அசாம் சுமாராக விளையாடியது முக்கிய காரணமானது. அதனால் விராட் கோலி தான் கிரிக்கெட்டின் உண்மையான கிங் ஆனால் பாபர் அசாம் ஃபிராடு என சோயப் அக்தர், ஹபீஸ் போன்ற நிறைய முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

    இந்நிலையில் பாபர் அசாம் விராட் கோலி கிடையாது தான், அதற்காக இப்படி விமர்சிக்கும் அளவுக்கு பாபர் அசாம் மோசமானவர் கிடையாது என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    டெஸ்ட் கிரிக்கெட்டில் 9 சதங்களை அடித்துள்ள பாபர் 26 அரை சதங்களுடன் 44.5 சராசரியை கொண்டுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 19 சதங்கள் 32 அரை சதங்கள் அடித்துள்ள அவர் 56.72 சராசரியைக் கொண்டுள்ளார். டி20-யில் 129 ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் 41 சராசரியைக் கொண்டுள்ளார்.

    இப்போது கடந்த 20 வருடங்களில் பாகிஸ்தானுக்காக விளையாடி பாபர் அசாமின் இந்தப் புள்ளி விவரங்களை முந்திய வீரர் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள். நீங்கள் கோலி அல்லது வில்லியம்சனாக இருக்க வேண்டியதில்லை. பாபர் விராட் கோலி கிடையாது. ஆனால் பாபர் நாம் கொண்டிருக்கும் சிறந்த பேட்ஸ்மேன். தற்போது ரன்கள் அடிக்க முடியவில்லையெனில் அவருக்கு நாம் ஆதரவு கொடுக்க வேண்டும். அவர் நன்றாக விளையாடும் போது நீங்கள் விரும்பவில்லை என்றாலும் உலகுடன் சேர்ந்து பாராட்ட வேண்டும்.

    விராட் கோலி கூட அவ்வப்போது ஃபார்மை இழக்கிறார். ஆனாலும் முக்கியமான போட்டிகளில் 50 ரன்களை அடித்து விடுகிறார். விராட் கோலி தன்னுடன் யாரைக் கொண்டிருந்தார்? ரோகித் சர்மா, எம்எஸ் தோனி. அந்த வகையில் விராட் கோலியுடன் மேட்ச் வின்னர் இருந்தார்கள். ஆனால் பாபர் அசாமுடன் பாகிஸ்தான் அணியில் யார் இருக்கிறார்கள்? அதாவது பாபர் அசாமுக்கு ஆதரவு கொடுக்கும் அளவுக்கு பாகிஸ்தான் அணியில் நல்ல வீரர்கள் இல்லை.

    என்று சல்மான் கூறினார்.

    Next Story
    ×