என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "salman khan"

    • ஏ.ஆர் முருகதாஸ் பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்ற இந்தி படத்தை இயக்கியுள்ளார்.
    • இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித்நதியத்வாலா தயாரித்துள்ளார்.

    இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்ற இந்தி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித்நதியத்வாலா தயாரித்துள்ளார்.

    படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் மார்ச் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லர் காட்சிகள் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

     

    படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் சல்மான் கான் , அமீர் கான் மற்றும் ஏ. ஆர் முருகதாஸ் இணைந்து கலந்துரையாடல் செய்து வீடியோ உருவாக்கியுள்ளனர். தன் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் அமீர் கான் ஏ.ஆர் முருகதாஸை பார்த்து எங்கள் இருவரின் யார் உண்மையான சிக்கந்தர் என கேள்வி கேட்கிறார் அதற்கு பதி சொல்ல முடியாமல் ஏ.ஆர் முருகதாஸ் முழிக்கிறார். இதன் வீடியோ விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    அமீர் கான் நடிப்பில் இந்தியில் கஜினி திரைப்படத்தை ஏ.ஆர் முருகதாஸ் இயக்கியது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
    • திரைப்படம் ரம்ஜான் பண்டிகையையொட்டி வருகிற 31-ந்தேதி வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்ற இந்தி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித்நதியத்வாலா தயாரிக்கிறார்.

    மேலும் சல்மான்கான் 10 ஆண்டுகளுக்கு பிறகு தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலாவுடன் இணைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் ரம்ஜான் பண்டிகையையொட்டி வருகிற 31-ந்தேதி வெளியாகவுள்ளது.

    இதனை தொடர்ந்து, இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ், காஜல் அகர்வால், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் பங்கேற்று இருந்தனர்.

    அப்போது இந்நிகழ்ச்சியில் செய்தியாளர் ஒருவர் சல்மான் கானிடம், உங்களுக்கும் ராஷ்மிகாவுக்கும் 31 வயது வித்தியாசம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.

    அதற்கு சல்மான் பதிலளித்தபோது, இதில் கதாநாயகிக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை, அவரது தந்தைக்கும் எந்த பிரச்சனையும் இல்லாதபோது, உனக்கு என்ன தம்பி பிரச்சனை? நடிப்பில் ராஷ்மிகாவின் அர்பணிப்பை பார்க்கும்போது எனது குழந்தை பருவம் நினைவுக்கு வரும். அந்தளவு அர்ப்பணிப்புடன் செயல்படுவார் என்று கூறினார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் அட்லீ தற்போது ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
    • இதைத் தொடர்ந்து அட்லீ, சல்மான்கானுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

    இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஜவான். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை 'ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்' சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார்.


    அட்லீ

    இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இயக்குனர் அட்லீ தன் அடுத்த படத்தில் சல்மான் கானுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சல்மான் கானை சந்தித்து காமெடி படத்துக்கான கதையை அட்லீ கூறியுள்ளதாகவும் கதை பிடித்துப்போகவே சல்மான் கான் அவருடன் இணைந்து பணியாற்ற சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு அண்மையில் கொலை மிரட்டல் வந்தது.
    • இவருக்கு துப்பாக்கி வைத்து கொள்ளும் உரிமையை போலீசார் வழங்கியுள்ளதாக கூறப்பட்டது.

    பஞ்சாப்பில் பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா கடந்த மே மாதம் மர்ம நபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இவரது கொலைக்கு பின்னால் பஞ்சாப் தாதாவான பிரபல லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் இருப்பதாக கூறப்படுகிறது. அதேவேளை, கடந்த மாதம் பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் மற்றும் அவரது தந்தை சலீம்கானுக்கு கொலை மிரட்டல் வந்தது. அவர்களுக்கு வந்த மிரட்டல் கடிதத்தில், சித்து மூஸ்வாலாவுக்கு ஏற்பட்ட கதியை சந்திப்பீர்கள் என கூறப்பட்டு இருந்தது.


    சல்மான் கான்

    இதையடுத்து நடிகர் சல்மான் கான் தான் வழக்கமாக பயன்படுத்தும் காரை குண்டுகள் துளைக்காதவாறு புல்லட் ப்ரூப் கண்ணாடிகளைக் கொண்டு பொறுத்தியுள்ளதாக தகவல் வெளியானது. தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு மராட்டிய மாநிலம் மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் கேட்டு விண்ணப்பித்த அவருக்கு துப்பாக்கி வைத்து கொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளது என போலீஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.


    சல்மான் கான்

    இந்நிலையில், நடிகர் சல்மான் கானுக்கு 'ஒய் பிளஸ்' பாதுகாப்பு வழங்க மும்பை போலீசார் முடிவு செய்துள்ளனர். மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து மாநில அரசால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    • கை கொடுக்கும் கை, புதுமைப் பெண், வைதேகி காத்திருந்தாள், பகல் நிலவு, மௌன ராகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ரேவதி.
    • தற்போது இந்தியில் 'சலாம் வெங்கி' என்ற படத்தை ரேவதி இயக்கி வருகிறார்.

    1983-ஆ ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான மண்வாசனை படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ரேவதி. அதன்பின் கை கொடுக்கும் கை, புதுமைப் பெண், வைதேகி காத்திருந்தாள், பகல் நிலவு, மௌன ராகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து 80 மற்றும் 90களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். மேலும் மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்து பிரபலமடைந்தார். ரேவதி சில படங்களையும் இயக்கியுள்ளார்.

    தற்போது இந்தியில் 'சலாம் வெங்கி' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கஜோல், விஷால் மற்றும் ஜெத்வா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஆமீர்கான் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இப்படம் அடுத்த மாதம் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.

     

    ரேவதி - சல்மான் கான்

    ரேவதி - சல்மான் கான்

     

    அதன் ஒரு பகுதியாக சல்மான்கான் நடத்தும் நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்துகொண்ட ரேவதி, 32 வருடங்களுக்குப் பிறகு சல்மான்கானுடன் இணைந்து நடிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மணீஷ் சர்மா இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் 'டைகர் 3' படம் உருவாகிறது. இப்படத்தில் கதாநாயகியாக கத்ரீனா கைஃப் நடிக்கவுள்ளார். மேலும் ஷாருக்கான் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ரேவதி நடிக்கவிருக்கும் கதாப்பாத்திரம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • இந்தி திரைத்துறையில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சல்மான் கான்.
    • சல்மான் கான் நேற்று தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடினார்.

    இந்தி திரைத்துறையில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சல்மான் கான். இவர் திரையுலகில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் கடந்து விட்டன. இவர் நேற்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.


    சல்மான்கானை பார்க்க வந்த ரசிகர்கள் மீது தடியடி நடத்திய போலீசார்

    இதையடுத்து நடிகர் சல்மான் கானை பார்க்க மும்பையில் உள்ள அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் பெருமளவில் கூடினார்கள். வீட்டின் பால்கனியில் தனது தந்தை சலீம் கானுடன் வந்த சல்மான் கான் ரசிகர்களைப் பார்த்து கையசைத்தார். அப்போது, ரசிகர்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு முன்னே செல்ல முயன்றனர். ரசிகர்களை கட்டுப்படுத்த முடியால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை கட்டுப்படுத்தினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • நடிகர் சல்மான்கானின் அலுவலகத்திற்கு கடந்த வாரம் இமெயில் மூலம் கொலை மிரட்டல் வந்தது.
    • கொலை மிரட்டல் விடுத்ததாக லாரன்ஸ் பிஷ்னோய், கோல்டி பிரார், ரோகித் கார்க் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானின் தனிப்பட்ட உதவியாளரான பிரசாந்த் குஞ்சல்கருக்கு கடந்த வாரம் மிரட்டல் இ-மெயில் ஒன்று வந்தது. ரவுடிகளான லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளி கோல்டி பிரார் ஆகியோர் நடிகர் சல்மான்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து அனுப்பி இருந்தனர். இதுதொடர்பாக பிரசாந்த் குஞ்சல்கர் பந்த்ரா போலீசில் புகார் செய்தார்.


    சல்மான்கான்

    போலீசார் ரவுடியான பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளி கோல்டி பிரார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், சல்மானுக்கு ஒய்.பிளஸ். பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சல்மான்கானுக்கு இங்கிலாந்தில் இருந்து மிரட்டல் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இமெயில் ஐ.டி. இங்கிலாந்தை சேர்ந்த ஒரு செல்போன் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. அந்த எண் யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • அஜித் நடித்த ‘வீரம்’ திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
    • இதில் நடிகர் சல்மான்கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    கடந்த 2014-ஆம் ஆண்டு இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் 'வீரம்'. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் தற்போது இந்தியில் 'கிஸி கி பாய், கிஸி கி ஜான்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.


    என்டம்மா பாடல் -கிஸி கி பாய், கிஸி கி ஜான்

    இயக்குனர் பர்ஹத் சம்ஜி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் சல்மான்கான், வெங்கடேஷ், பூஜா ஹெக்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்திலிருந்து சமீபத்தில் 'என்டம்மா'என்ற பாடல் வெளியானது. இதில், வேட்டி கட்டிக்கொண்டு சல்மான்கான் ஆடும் நடன அசைவுகளை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.


    இந்நிலையில், இந்த பாடலில் தென்னிந்திய கலாசார உடை இழிவுப்படுத்தப்படுவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தென்னிந்திய கலாசாரத்தை இழிவுப்படுத்தும் வகையில் இந்த பாடல் உள்ளது. அது லுங்கி அல்ல, அது வேட்டி . நமது கலாசார உடையானது அருவருப்பான முறையில் காட்டப்படுகிறது" என்று பதிவிட்டுள்ளார். மேலும் அவர் அந்தப் பாடலையும் பகிர்ந்துள்ளார்.

    • நடிகர் சல்மான் கான் தற்போது கிஸி கி பாய், கிஸி கி ஜான் படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தின் நிகழ்ச்சியில் சல்மான் கான் மேடையிலேயே சட்டையை கழற்றினார்.

    கடந்த 2014-ஆம் ஆண்டு இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் 'வீரம்'. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் தற்போது இந்தியில் 'கிஸி கி பாய், கிஸி கி ஜான்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

    இயக்குனர் பர்ஹத் சம்ஜி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் சல்மான்கான், வெங்கடேஷ், பூஜா ஹெக்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு ரவி பஸ்ரூர் , ஹிமேஷ் ரேஷ்மியா , தேவி ஸ்ரீ பிரசாத் , பாயல் தேவ் , அமல் மல்லிக் ஆகிய 5 இசையமைப்பாளர்கள் பணியாற்றியுள்ளனர்.



    இந்நிலையில் கிஸி கி பாய், கிஸி கி ஜான் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் நடிகர் சல்மான் கான் சட்டையை கழற்றி அவருடைய சிக்ஸ் பேக் காட்டி ரசிகர்களை கவர்ந்தார். படத்தில் சல்மான் கான் காட்டும் சிக்ஸ் பேக் எல்லாம் வெறும் கிராபிக்ஸ் காட்சிகள் என விமர்சனம் வந்த நிலையில், சட்டையை கழற்றி "இதை பார்த்தால் விஎஃப்எக்ஸ்ல் வந்தது போல தெரிகிறதா?" என கேள்வி எழுப்பினார்.

    • பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வருபவர் சல்மான்கான்.
    • சமீபகாலமாக இவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருகிறது.

    பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானின் தனிப்பட்ட உதவியாளரான பிரசாந்த் குஞ்சல்கருக்கு சமீபத்தில் மிரட்டல் இ-மெயில் ஒன்று வந்தது. ரவுடிகளான லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளி கோல்டி பிரார் ஆகியோர் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து இ-மெயில் அனுப்பி இருந்தனர். இதுதொடர்பாக பிரசாந்த் குஞ்சல்கர் பந்த்ரா போலீசில் புகார் செய்ததையடுத்து போலீசார் ரவுடியான பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளி கோல்டி பிரார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். 

    சல்மான்கான்

    இந்நிலையில், நடிகர் சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் வந்துள்ளது. அதாவது, நேற்று மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு பாலிவுட் நடிகர் சல்மான்கானை கொன்று விடுவதாக மிரட்டல் அழைப்பு ஒன்று வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வந்தனர். இந்த விசாரணையில் மிரட்டல் விடுத்த நபர் 16 வயது சிறுவன் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து சிறுவனை கைது செய்த போலீசார் சட்ட நடவடிக்கைகளுக்காக அவர் மும்பையில் உள்ள ஆசாத் மைதான் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளனர்.

    • சல்மான்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘கிசி கா பாய் கிசி கி ஜான்’.
    • இப்படம் அஜித் நடிப்பில் வெளியான ‘வீரம்’ படத்தின் இந்தி ரீமேக்காகும்.

    கடந்த 2014-ஆம் ஆண்டு இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் 'வீரம்'. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் தற்போது இந்தியில் 'கிசி கா பாய் கிசி கி ஜான்'என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.


    கிசி கா பாய் கிசி கி ஜான்

    இயக்குனர் பர்ஹத் சம்ஜி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சல்மான்கான், வெங்கடேஷ், பூஜா ஹெக்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ள இப்படத்தை ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் கடந்த 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.


    • "ஜவான்" திரைப்படத்தை தமிழ் திரைப்பட இயக்குனர் அட்லி இயக்கியுள்ளார்
    • 2015-ல் சல்மான்கான் கதாநாயகனாக நடித்து வெளியானது "பஜ்ரங்கி பாய்ஜான்"

    தமிழ் திரைப்பட இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த "ஜவான்" திரைப்படம் நாடு முழுவதும் வெளியானது. வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் குறித்து பல பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மற்றொரு பிரபல இந்தி நடிகரான அமிர்கான், "ஜவான்" திரைப்படத்தையும், அதன் கதாநாயகன் ஷாருக்கானின் நடிப்பையும் பாராட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவலானது. அந்த வீடியோவில் நடிகர் அமிர்கான், "படத்தை பார்த்தீர்களா? மிக நல்ல திரைப்படம். அவரது நடிப்பில் இதுதான் மிக சிறப்பான படம். அனைவரும் இப்படத்தை பார்க்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன். மீண்டும் மீண்டும் பாருங்கள்" என கூறுவது தெரிகிறது.

    இதனை பகிர்ந்த பயனர்களில் ஒருவர் "அமிர்கானின் ஜவான் பட விமர்சனம்" என ஒரு குறுஞ்செய்தியையும் இத்துடன் இணைத்து பதிவிட்டுள்ளார். ஆனால், ஆய்வில் இது தவறான செய்தி என்றும் அந்த வீடியோ பொய் எனவும் தெரிய வந்துள்ளது.

    இந்தி திரையுலகின் முன்னணி நடிகர் சல்மான்கான் நடிப்பில் 2015-ல் வெளியான திரைப்படம் "பஜ்ரங்கி பாய்ஜான்." அந்த திரைப்படத்தை அப்போது கண்டு ரசித்த அமிர்கான், கதாநாயகன் சல்மான் கானையும், அத்திரைப்படத்தில் பணியாற்றிய இயக்குனரையும் தொழில்நுட்ப கலைஞர்களையும் வெகுவாக பாராட்டி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.

    அந்த நீண்ட வீடியோவில், ஒரு குறிப்பிட்ட இடத்தில், மேலே சொன்ன வாசகங்கள் இடம்பெறுகிறது. ஆய்வில், "பஜ்ரங்கி பாய்ஜான்" திரைப்படத்தை அமிர்கான் பாராட்டும் நீண்ட வீடியோவை ஆங்காங்கே வெட்டி தொகுத்து "ஜவான்" திரைப்படத்தை பாராட்டுவதை போல் உருவாக்கி வெளியிட்டுள்ளனர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    தற்போது வரை "ஜவான்" திரைப்படம் குறித்து அமிர்கான் எத்தகைய விமர்சனமும் செய்ததாக உறுதியான தகவல் இல்லை. இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

    ×