என் மலர்
நீங்கள் தேடியது "Samajwadi party"
- கும்பமேளாவில் எவ்வளவு பேர் இறந்தார்கள் என்று கேட்டால் 30 பேர் என்று சொல்கிறார்.
- கும்பமேளாவில் படகோட்டிக்கு எவ்வளவு வியாபாரம் ஆனது என்று கேட்டால் 30 கோடி என்கிறார்.
ஆளும் பாஜக அரசு இந்திய நாட்டை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பலவீனப்படுத்துவதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார்.
லக்னோவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அகிலேஷ் யாதவ், "சமூகத்தில் வெறுப்பு பரவுவதால் நாடு பலவீனமடைந்துள்ளது. பாஜக சமூகத்தை பலவீனப்படுத்தி பிளவை உருவாக்குகிறது. பாஜக நாட்டை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பலவீனப்படுத்தியுள்ளது.
நமது முதல்வர் 30 என்ற எண்ணை நேசிப்பதால் இதைச் சொல்கிறேன். (கும்பமேளாவில்) எவ்வளவு பேர் இறந்தார்கள் என்று கேட்டால் 30 பேர் என்று சொல்கிறார். (கும்பமேளாவில் படகோட்டிக்கு) எவ்வளவு வியாபாரம் ஆனது என்று கேட்டால் 30 கோடி என்கிறார். இந்த வகையான கணக்கை எங்கள் முதல்வரைத் தவிர வேறு யாராலும் கொடுக்க முடியாது" என்று தெரிவித்தார்.
கும்பமேளாவின் போது லட்சக்கணக்கான பக்தர்களை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்று இளைஞர்கள் பணம் சம்பாதித்தது தொடர்பாக பேசிய அகிலேஷ் யாதவ், "அலகாபாத்தில் அரசு வேலைகளுக்குத் தயாராகும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளதாக முதல்வர் கூறுகிறார். தனியார் வாகனங்களை வணிக வாகனங்களாகப் பயன்படுத்தலாம் என்று அரசாங்கம் எப்போது முடிவு செய்தது என்று யாராவது எனக்கு விளக்கவும்?
144 ஆண்டுகளுக்குப் பிறகு இளைஞர்களுக்கு இப்போது வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதா?" என்று மகா கும்பமேளா 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது என்ற உ.பி. அரசின் கூற்றை கேலி செய்தார்.
மேலும் பேசிய அவர், "இப்போது அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் மீது வெறுப்பைப் பரப்புகிறார்கள் என்பதை நான் அனைத்து மக்களுக்கும் சொல்ல விரும்புகிறேன். இனிமேல் எதிர்காலத்தில், பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துகள், சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பை பரப்புவார்கள். 2027 இல் சமாஜ்வாதி கட்சி உத்தரபிரதேசத்தில் ஆட்சிக்கு வரும்"
- சமாஜ்வாதி கட்சியில் முக்கிய பொறுப்பு வகிப்பவர் அசம் கான்.
- கடந்த பொதுத்தேர்தலில் பிரதமர், முதல் மந்திரி ஆகியோரை அவதூறாகப் பேசியிருந்தார்.
லக்னோ:
சமாஜ்வாதி கட்சி தலைவர் அசம் கான் கடந்த 2019ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பிரதமர் மோடி, முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோரை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அசம் கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கு உத்தர பிரதேச ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட், சமாஜ்வாதி கட்சி தலைவர் அசம் கான் மற்றும் இருவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
- அசம் கான் ராம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வந்தார்.
- சமாஜ்வாதி கட்சியில் முக்கிய பொறுப்பு வகிப்பவர் அசம் கான்.
லக்னோ:
சமாஜ்வாதி கட்சி தலைவர் அசம் கான் கடந்த 2019ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பிரதமர் மோடி, முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோரை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அசம் கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
இதற்கிடையே, இந்த வழக்கு உத்தர பிரதேச சிறப்பு ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட், சமாஜ்வாதி கட்சி தலைவர் அசம் கான் மற்றும் இருவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
இந்நிலையில், உ.பி.யின் ராம்பூர் தொகுதி எம்.எல்.ஏ பதவியில் இருந்து அசம் கானை தகுதிநீக்கம் செய்து பேரவை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
- சமாஜ்வாதி கட்சியில் முக்கிய பொறுப்பு வகிப்பவர் அசம்கான்.
- அசம்கான் ராம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருந்துவந்தார்.
லக்னோ:
சமாஜ்வாதி கட்சி தலைவர் அசம்கான் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பிரதமர் மோடி, முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோரை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அசம்கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
இந்த வழக்கு உத்தர பிரதேச சிறப்பு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட், சமாஜ்வாதி கட்சி தலைவர் அசம்கான் மற்றும் இருவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் 2,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
இதையடுத்து, உ.பி.யின் ராம்பூர் தொகுதி எம்.எல்.ஏ பதவியில் இருந்து அசம் கானை தகுதிநீக்கம் செய்து பேரவை தலைவர் உத்தரவிட்டார். அசம்கானின் ராம்பூர் சதார் தொகுதி காலியானதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் இருந்து அசம்கான் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
- தீபக் சிங்கை கடுமையாக தாக்கும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
- இரு தரப்பினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமேதி:
உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பாஜக தலைவரின் கணவரை, எதிர்கட்சியான சமாஜ்வாடி கட்சியின் எம்எல்ஏ சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமேதி மாவட்டம் கவுரிகஞ்ச் கோத்வாலி காவல் நிலையத்தில் போலீசாரின் கண்முன்னே இந்த சம்பவம் நடந்துள்ளது. சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏ ராகேஷ் பிரதாப் மற்றும் அவரது ஆதவாளர்கள், பாஜகவைச் சேர்ந்த நகராட்சி தேர்தல் வேட்பாளர் ராஷ்மி சிங்கின் கணவர் தீபக் சிங்கை கடுமையாக தாக்கும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது. இந்த தாக்குதலை தடுக்க முடியாமல் போலீசார் திணறினர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். மோதல் தொடர்பாக இரு தரப்பினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏ ராகேஷ் பிரதாப் சிங் கூறுகையில், 'நானும் எனது ஆதரவாளர்களும் காவல் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டபோது, தீபக் சிங் வந்து தகாத வார்த்தைகளால் திட்டினார். எனது ஆதரவாளர்கள் சிலரை தாக்கினார். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் பிரச்சனை ஏற்பட்டது' என்றார்.
- கடந்த ஆண்டு ஜனவரி மாதம்தான் சவுகான் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்.
- சட்டசபை சபாநாயகர் மற்றும் சட்டசபை முதன்மை செயலாளரிடம் ராஜினாமா கடிதத்தை சவுகான் வழங்கினார்.
லக்னோ:
சமாஜ்வாதி கட்சியின் மவு மாவட்டம் கோசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தாராசிங் சவுகான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சட்டசபை சபாநாயகர் சதீஷ் மகானா மற்றும் சட்டசபை முதன்மை செயலாளர் பிரதீப் துபே ஆகியோரிடம் இன்று தனது ராஜினாமா கடிதத்தை தாராசிங் சவுகான் அளித்துள்ளார்.
சவுகான் ராஜினாமா கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
மவு மாவட்டம் கோசி சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏவான தாராசிங் ஆகிய நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம்தான் சவுகான் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். சட்டசபை தேர்தலுக்கு முன் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் சவுகான் இடம்பெற்றிருந்த நிலையில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மக்களவையில் 2 பேர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
- இதேபோல் பாராளுமன்றத்திற்கு வெளியேயும் 2 பேர் புகை குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி:
பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று மதியம் மக்களவையில் பார்வையாளர் இடத்தில் இருந்து இருவர் திடீரென எம்.பி.க்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்குள் குதித்தனர். ஒருவர் சபாநாயகரை நோக்கி ஓடினார். இருவரும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் எம்.பி.க்கள் பதற்றம் அடைந்து ஓட ஆரம்பித்தனர்.
அதன்பின், பாதுகாவலர்கள் மற்றும் உறுப்பினர்கள் சேர்ந்து அவர்களை மடக்கிப் பிடித்தனர். இந்த பரபரப்பு சம்பவத்தால் மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது.
இதேபோல், பாராளுமன்றத்திற்கு வெளியே ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என 2 பேர் புகை குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர். இதனால் வெளியேயும் பதற்றம் நிலவியது.
இந்நிலையில், இதுகுறித்து சமாஜ்வாடி எம்பி டிம்பிள் யாதவ் கூறுகையில், தாக்குதல் நடத்தப்பட்ட நாளில் பாதுகாப்பு குளறுபடி காரணமாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என குற்றம் சாட்டினார்.
கடந்த 2001ல் பாராளுமன்றம் மீது நடந்த தாக்குதலில் 14 போலீசார் வீர மரணம் அடைந்தனர் என்பது நினைவு கூரத்தக்கது.
- அயோத்தி ராமர் கோவிலில் வரும் 22-ம் தேதி மூலவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
- இதில் பிரதமர் மோடி, உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
லக்னோ:
அயோத்தியில் ராமர் கோவில் அமைக்கும் பணி கடந்த இரு வருடங்களாக முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், வருகிற 22-ம் தேதி கோவிலில் மூலவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
அயோத்தி ராமர் கோவிலில் வருகிற 22-ம் தேதி குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.
இதற்கிடையே, மூலவர் ராமர் சிலை வரும் 17-ம் தேதி அயோத்தியில் நகர்வலமாக எடுத்துச் செல்லப்படும் என ஸ்ரீராம ஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சமாஜவாடி கட்சியின் தலைவரும், முன்னாள் முதல் மந்திரியுமான அகிலேஷ் யாதவ் கூறுகையில், அது கடவுளின் விழா. கடவுளை விட முதல் மந்திரி பெரியவராக இருக்கமுடியாது. ராமரால் அழைக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக செல்வார்கள் என தெரிவித்தார்.
- இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
- உத்தர பிரதேசத்தில் காங்கிரசுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என சமாஜ்வாதி தெரிவித்துள்ளது.
லக்னோ:
பாராளுமன்ற தேர்தலுக்கான தேதியை இன்னும் சில நாட்களில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
தேர்தல் குழு, தொகுதி பங்கீடு, கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை என தேர்தல் பணியில் அனைத்துக் கட்சியினரும் மும்முரம் காட்டி வருகின்றனர்
இதற்கிடையே, மத்தியில் உள்ள பா.ஜ.கவை எதிர்க்க அமைக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணியிலும் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் காங்கிரசுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
- 16 வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலை சமாஜ்வாதி கட்சி வெளியிட்டுள்ளது.
- அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ், மெயின்புரி தொகுதியில் போட்டி.
பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், சமாஜ்வாதி கட்சி 16 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 11 தொகுதிகளை, சமாஜ்வாதி கட்சி ஏற்கனவே ஒதுக்கியுள்ளது.
இந்நிலையில், 16 வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலை சமாஜ்வாதி கட்சி வெளியிட்டுள்ளது.
இதில், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ், மெயின்புரி தொகுதியில் போட்டியிடுகிறார்.
லக்னோ, கோரக்பூர், பைசாபாத் உள்ளிட்ட 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- உத்தர பிரதேசம், கர்நாடகா, இமாசல பிரதேசத்தில் மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
- வரும் 29-ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு மாநிலங்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகிறது.
புதுடெல்லி:
வருகிற ஏப்ரல் மாதம் 15 மாநிலங்களில் முடிவடைய உள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதில் சோனியா காந்தி, ஜே.பி.நட்டா உள்பட 41 பேர் போட்டியின்றி தேர்வாகினர். உத்தர பிரதேசத்தில் 10 இடங்கள், கர்நாடகாவில் 4 இடங்கள் மற்றும் இமாசல பிரதேசத்தில் ஒரு இடம் என மொத்தம் 15 இடங்களுக்கு தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கர்நாடகா, உத்தர பிரதேசம், இமாசல பிரதேசத்தில் உள்ள 15 இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. உ.பி.யில் சமாஜ்வாதி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ் லக்னோவில் தனது வாக்கைச் செலுத்தினார்.
காலை 9 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு 4 மணிக்கு நிறைவடையும். வரும் 29-ம் தேதி மாநிலங்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகிறது.
- தனிப்பட்ட ஆதாயங்களை விரும்புவோர் பா.ஜ.க.வுக்குச் செல்லலாம் என்றார் அகிலேஷ் யாதவ்.
- பா.ஜ.க.வின் அழுத்தத்தால் எம்.எல்.ஏ.க்கள் சிலர் கட்சி மாறி வாக்களிக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றார்.
லக்னோ:
உத்தர பிரதேசம், கர்நாடகா மற்றும் இமாசல பிரதேசம் என மொத்தம்15 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று நடந்து வருகிறது.
தங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு பாஜக அழுத்தம் கொடுத்து வருகிறது. இதனால் சிலர் கட்சி மாறி வாக்களிக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்நிலையில் சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ.வான மனோஜ் குமார் பாண்டே, கட்சியின் தலைமைக் கொறடா பதவியில் இருந்து இன்று ராஜினாமா செய்தார்.
இதுதொடர்பாக, செய்தியாளர்களைச் சந்தித்த அகிலேஷ் யாதவ் கூறுகையில், தனது கட்சியின் 3 வேட்பாளர்களும் உறுதியாக வெற்றி பெறுவர். தேர்தல் வெற்றிக்காக பா.ஜ.க. அனைத்து உக்திகளையும் பயன்படுத்தும். தனிப்பட்ட லாபத்தை விரும்பும் தலைவர்கள் பா.ஜ.க.வுக்குச் செல்லலாம் என தெரிவித்தார்.