என் மலர்
நீங்கள் தேடியது "Samit Dravid"
- மைசூர் வாரியர்ஸ் அணிக்காக விளையாட சமித் டிராவிட் ரூ.50 ஆயிரத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
- சமித் டிராவிட்டின் அந்த சிக்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பெங்களூர்:
கர்நாடகா கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்பட்டு வரும் மகாராஜா டி20 கிரிக்கெட் தொடரில் மைசூர் வாரியர்ஸ் அணிக்காக விளையாட சமித் டிராவிட் ரூ.50 ஆயிரத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆல்ரவுண்டரான இவரை வாங்க சில அணிகள் விருப்பப்பட்டாலும், மைசூர் வாரியர்ஸ் அணி முந்திக் கொண்டது.
நேற்று நடந்த ஆட்டத்தில் பெங்களூர் பிளாஸ்டர்ஸ் அணியை எதிர்த்து மைசூர் வாரியர்ஸ் அணி விளையாடியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மைசூர் வாரியர்ஸ் அணி 18 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக மனோஜ் பண்டாகே 33 பந்துகளில் 58 ரன்களை விளாசினார்.
இதன்பின் களமிறங்கிய பெங்களூர் பிளாஸ்டர்ஸ் அணி 17.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது. சிறப்பாக ஆடிய புவன் ராஜு 24 பந்துகளில் 51 ரன்களை விளாசினார். இந்த போட்டியில் முதலில் ஆடிய மைசூர் அணியில் இடம் பெற்ற ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட் 7 ரன்னில் அவுட் ஆனார். அதில் ஒரு சிக்சரை அபாரமாக விளாசி அசத்தினார்.
Rahul Dravid's son, Samit, in the KSCA Maharaja Trophy.
— Sann (@san_x_m) August 17, 2024
He stands exactly like Dravid, though I'm not sure about his shot selection yet. ?#RahulDravid #SamitDravidpic.twitter.com/0qkC6pvLlT
சமித் டிராவிட்டின் அந்த சிக்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நவீன் வீசிய பந்தில் அபாரமாக புல் ஷாட் மூலமாக டீப் மிட் விக்கெட் திசையில் சிக்சரை அடித்தார். ஆல்ரவுண்டரான சமித் டிராவிட் முதல் போட்டியிலேயே பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதன் மூலமாக சமித் டிராவிட்டுக்கு ஐபிஎல் தொடருக்கான ஒப்பந்தம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
- மகாராஜா டிராபி என்பது கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் இந்திய உள்நாட்டு டி20 போட்டியாகும்.
- சமித் டிராவிட்டை மைசூர் வாரியர்ஸ் அணி 50 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தது.
மகாராஜா டிராபி KSCA T20 என்பது கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் இந்திய உள்நாட்டு டி20 போட்டியாகும். லீக் போட்டியில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பல்வேறு மண்டலங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு அணிகள் போட்டியிடுகின்றன.
குல்பர்கா மிஸ்டிக்ஸ், பெங்களூரு பிளாஸ்டர்ஸ், ஹூப்ளி டைகர்ஸ், மைசூர் வாரியர்ஸ், மங்களூர் டிராகன்கள், ஷிவமொக்கா சிங்கங்கள் ஆகிய அணிகள் இந்த தொடரில் இடம் பெற்றுள்ளன.
இந்த தொடருக்கான ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மகனான சமித் டிராவிட்டை மைசூர் வாரியர்ஸ் அணி 50 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தது.
18 வயதான இவர் ஆல்ரவுண்டராக திகழ்கிறார். வலது கை வேகப்பந்து வீச்சாளர் மட்டும் மிடில் ஆர்டர் பேட்டராக விளையாடுகிறார். இவர் கருண் நாயர் தலைமையில் மைசூர் அணிக்காக விளையாட உள்ளார். மைசூரு அணியில், கே.கௌதம் மற்றும் ஜே.சுசித் போன்ற ஆல்ரவுண்டர்களை முறையே ரூ.7.4 லட்சத்துக்கும், ரூ.4.8 லட்சத்துக்கும் ஏலம் எடுக்கப்பட்டனர். வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ரூ. 1 லட்சத்திற்கு ஏலம் போனார்.
2023-24 கூச் பெஹார் டிராபியை வென்ற கர்நாடகா 19 வயதுக்குட்பட்ட அணியில் சமித் டிராவிட் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- டிராவிட் மகனான சமித் ஜூனியர் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
- 3 அரைசதங்கள் உள்பட 370 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் இருப்பவர் ராகுல் டிராவிட். இவரது மகனான சமித் ஜூனியர் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆல்ரவுண்டராக கலக்கும் அவர் 7 போட்டிகளில் விளையாடி 37.78 சராசரியுடன் 3 அரைசதங்கள் உள்பட 370 ரன்கள் எடுத்தார். மேலும், பந்து வீச்சில் வலது கை வேகப்பந்து வீச்சாளரான சமித் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இந்நிலையில் தனது மகன் சமித்துக்கு பயிற்சியளிப்பது குறித்த தனது கருத்துக்களை டிராவிட் பகிர்ந்து கொண்டார்.
அதில் ராகுல் டிராவிட் கூறியிருப்பதாவது:
பெற்றோர் மற்றும் பயிற்சியாளராக இருப்பது கடினம் என்பதால் எனது மகன் சமித்திற்கு நான் பயிற்சி அளிக்கவில்லை. நான் தந்தையாகவே இருப்பதில் தான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், ஒரு பயிற்சியாளராக நான் என்ன செய்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை.
என்று அவர் கூறியுள்ளார்.
இவரது மகன் சமித். 12 வயதான சமித் அதிதி இன்டர்நேஷனல் பள்ளியில் படித்து வருகிறார். இந்த பள்ளிக்கும் கேம்ப்ரிட்ஜ் பப்ளிக் ஸ்கூலுக்கும் இடையில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் சமித் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். அத்துடன் பேட்டிங்கில் அரைசதம் அடித்தார். இவரது ஆட்டத்தால் அதிதி இன்டர்நேஷனல் பள்ளி வெற்றி பெற்றது.
ராகுல் டிராவிட்டின் மகன் சமித் சிறப்பாக விளையாடுவது இதுதான் முதல் முறையல்ல. இந்த வருட தொடக்கத்தில் பள்ளிகளுக்கு இடையிலான தொடரில் விவேகானந்தா பள்ளிக்கு எதிராக 150 ரன்கள் குவித்திருந்தார்.
பெங்களூர் யுனைடெட் கிரிக்கெட் கிளப் சார்பில் 14 வயதிற்கு உட்பட்டோருக்கான தொடரில் விளையாடியுள்ளார். 2015-ல் தொடர்ச்சியாக மூன்று அரைசதம் அடித்ததற்காக கோபாலன் கிரிக்கெட் சேலஞ்ச் விருதை பெற்றுள்ளார்.