search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "saniya mirza"

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் வரும் 29-ம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன.
    • அடுத்த மாதம் ஓய்வு பெறவுள்ள நிலையில் சானியா மிர்சா தோல்வி.

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. வரும் 29-ம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற கிராண்ட்ஸ்லாம் தொடரை சானியா மிர்சா தோல்வியுடன் நிறைவு செய்தார்.

    அடுத்த மாதம் ஓய்வு பெறவுள்ள நிலையில் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரில் சானியா தோல்வி அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அடுத்த மாதம் பிப்ரவரியில் துபாயில் நடைபெறும் டபிள்யு.டி.ஏ. போட்டி அவரது கடைசி ஆட்டமாகும்.
    • ஒட்டு மொத்தமாக இரட்டையர் பிரிவில் அவர் 6 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று உள்ளார்.

    இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. 36 வயதான அவர் கடந்த ஆண்டு இறுதியில் டென்னிசில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்து இருந்தார். திடீரென அவர் தனது முடிவை மாற்றி கொண்டார்.

    இந்த நிலையில் சானியா மிர்சா தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். அடுத்த மாதம் பிப்ரவரியில் துபாயில் நடைபெறும் டபிள்யு.டி.ஏ. போட்டி அவரது கடைசி ஆட்டமாகும்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    டபிள்யூ.டி.ஏ. இறுதி போட்டிக்கு பிறகு டென்னிஸ் ஆடுவதை நிறுத்திக் கொள்ள போகிறேன். துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் பிப்ரவரி மாதம் நடக்கிறது.

    இந்த போட்டியோடு நான் ஓய்வு பெற திட்டமிட்டுள்ளேன்.

    இவ்வாறு சானியா மிர்சா கூறியுள்ளார்.

    சானியா பெண்கள் இரட்டையர் பிரிவில் 3 கிரண்ட்சிலாம் பட்டங்களை கைப்பற்றி உள்ளார். 2015ல் விம்பிள்டன், அமெரிக்க ஓபன் பட்டங்களையும், 2016-ல் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும் கைப்பற்றினார். 2011 பிரெஞ்சு ஓபன் இறுதி போட்டியில் தோற்றார்.

    கலப்பு இரட்டையர் பிரிவிலும் சானியா மிர்சா 3 கிராண்ட்சிலாம் பட்டங்களை பெற்றார். 2009-ல் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும், 2012-ல் பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும், 2014-ல் அமெரிக்க ஓபன் பட்டத்தையும் கைப்பற்றினார். ஒட்டு மொத்தமாக இரட்டையர் பிரிவில் அவர் 6 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று உள்ளார்.

    வருகிற ஆஸ்திரேலிய ஓபனில் சானியா மிர்சா, கஜகஸ்தான் வீராங்கனை அனாடேனிலாவுடன் இணைந்து ஆடுகிறார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் வருகிற 16ம் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது.

    கடந்த ஆண்டு சானியா மிர்சா ஆஸ்திரேலிய ஓபனில் முதல் சுற்றிலேயே வெளியேறினார். கலப்பு இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் ராஜூவ் ராமுடன் இணைந்து கால் இறுதி வரை முன்னேறி இருந்தார்.

    ஒற்றையர் பிரிவில் சானியா மிர்சா 2007ம் ஆண்டு 27வது வரிசையில் இருந்ததே சிறப்பான நிலையாகும். 2005ல் அமெரிக்க ஓபனில் 4வது சுற்று வரை முன்னேறியதே அவரது சிறந்த நிலையாகும்.

    இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா 24-வது வரிசையில் உள்ளார்.

    • அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், அவர்கள் தங்கள் மகன் இஷானுக்கு பெற்றோராக இருக்கிறார்கள்.
    • சானியா தனது விவாகரத்து வதந்திகளுக்கு மத்தியில் ஒரு ரகசிய இடுகையைப் பகிர்ந்துள்ளார்.

    இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை மணந்த பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் தம்பதிகள் தற்போது எல்லை தாண்டிய காதல் கதையை முடிவுக்கு கொண்டு வர உள்ளார்கள். இந்த ஜோடி விவாகரத்து செய்துகொள்ளபோவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஆறு முறை கிராண்ட் ஸ்லாம் இரட்டையர் பட்டத்தை வென்றவர், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. 2010 இல் 5 மாதங்கள் காதலித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி தற்போது முறைப்படி விவாகரத்து செய்துவிட்டதாக கிரிக்கெட் வீரருக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது.

    சானியா மிர்சா கடந்த சில நாட்களாக இந்தியாவில் வசித்து வருகிறார்.அவர்களுக்கு இஷான் என்ற மகன் உள்ளார். ஆம், அவர்கள் இப்போது அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றுள்ளனர். அதற்கு மேல் என்னால் சொல்ல முடியாது. ஆனால் அவர்கள் பிரிந்துவிட்டார்கள் என்பதை உறுதிப்படுத்த முடியும்" என்று பாகிஸ்தானில் உள்ள மாலிக்கின் நிர்வாகக் குழுவில் இருந்த ஒருவர் உறுதிப்படுத்தினார்.

    சோயப் தனக்கு துரோகம் செய்து ஏமாற்றியதை சானியா கண்டுபிடித்ததை தொடர்ந்து இது நடந்து உள்ளது. அப்போதுதான் இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்தனர். இருப்பினும், அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், அவர்கள் தங்கள் மகன் இஷானுக்கு பெற்றோராக இருக்கிறார்கள்.

    சமீபத்தில், சானியா தனது விவாகரத்து வதந்திகளுக்கு மத்தியில் ஒரு ரகசிய இடுகையைப் பகிர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராமில், "உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன? அல்லாவைக் காண!" என குறிப்பிட்டு இருந்தார்.

    இதை பார்த்த அவரது ரசிகர்கள் கவலைப்படத் தொடங்கினர். சமீபத்தில் இருவரும் தங்கள் மகனின் பிறந்த நாளை ஒன்றாக கொண்டாடினர். சோயிப் இன்ஸ்டாகிராமில் கொண்டாட்டத்தின் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டாலும், சானியா வெளியிடவில்லை.

    சோயிப் தனது இன்ஸ்டாவில் "நீங்கள் பிறந்தவுடன், நாங்கள் மிகவும் அடக்கமாகிவிட்டோம், வாழ்க்கை எங்களுக்கு சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. நாம் ஒவ்வொரு நாளும் ஒன்றாக இருப்பதில்லை, சந்திப்பதில்லை, ஆனால் பாபா உங்களைப் பற்றியும் உங்கள் புன்னகையைப் பற்றியும் ஒவ்வொரு நொடியும் நினைத்துக் கொண்டிருக்கிறார்.

    நீங்கள் கேட்கும் அனைத்தையும் அல்லா உங்களுக்கு வழங்குவார். பாபாவும் அம்மாவும் உன்னை நேசிக்கிறார்கள் என குறிப்பிட்டு இருந்தார்.

    • தனது தோல்விக்குப் பிறகு சானியா இன்ஸ்டாகிராமில் விம்பிள்டனில் இருந்து உணர்ச்சிவசப்பட்டு விடைபெற்றார்.
    • நான் உன்னை இழக்கிறேன் ? மீண்டும் சந்திக்கும் வரை என சானியா பதிவிட்டுள்ளார்.

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் சானியா மிர்சா - மேட் பாவிக் ஜோடி, டெசிரே கிராசிக் - நீல் குப்ஸ்கி ஜோடியை எதிர்கொண்டது. இதில் சானியா மிர்சா - மேட் பாவிக் ஜோடி 6-4, 5-7, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.

    இந்நிலையில், தனது தோல்விக்குப் பிறகு சானியா இன்ஸ்டாகிராமில் விம்பிள்டனில் இருந்து விடைபெறுவதை உணர்ச்சிவசப்பட்டு பதிவிட்டுள்ளார்.

    இதுகுறித்து சானியா மிர்சா குறிப்பிட்டுள்ளதாவது:-

    விளையாட்டு உங்களிடமிருந்து நிறைய எடுத்துக் கொள்கிறது.

    மனரீதியாக, உடல் ரீதியாக, உணர்வு ரீதியாக..

    வெற்றி தோல்விகள்.. மணிக்கணக்கான கடின உழைப்பு மற்றும் கடுமையான தோல்விகளுக்கு பிறகு தூக்கமில்லாத இரவுகள் ? ஆனால் பிற வேலைகள் கொடுக்க முடியாத பலனைத் இது உங்களுக்குத் தருகிறது. அதற்காக நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் ? கண்ணீர் மற்றும் மகிழ்ச்சி , சண்டை மற்றும் போராட்டம் .. நாம் செய்த உழைப்பு அனைத்தும் இறுதியில் மதிப்புக்குரியது .. இந்த முறை விம்பிள்டன் எனக்கானது இல்லை என்று நினைக்கவில்லை. கடந்த 20 வருடங்களாக இங்கு விளையாடி வெற்றி பெறுவது பெருமையாக உள்ளது ..

    நான் உன்னை இழக்கிறேன் ?

    மீண்டும் சந்திக்கும் வரை....

    இவ்வாறு அவர்பதிவிட்டுள்ளார்.

    ×