என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sankarankovil"

    • சங்கரன்கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 41 வயது பெண்.
    • சம்பவத்தன்று மலையன்குளம் பகுதியில் நின்று கொண்டிருந்தார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 41 வயது பெண். சம்பவத்தன்று சங்கரன்கோவில் அருகே மலையன்குளம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த திருவேங்கடம் அருகே உள்ள பி.ஆலங்குளத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான விஜயதுரை என்ற ரோப்(வயது 31) என்பவர் அந்த பெண்ணை அங்குள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

    பின்னர் அவரை கற்பழித்த விஜயதுரை, நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அந்த பெண் தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். உடனே அவர்கள் சங்கரன்கோவில் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விஜயதுரையை கைது செய்தனர்.

    • வேலைவாய்ப்பு கருத்தரங்கம் சங்கரன்கோவில் மனோ கல்லூரியில் நடைபெற்றது.
    • மாணவ- மாணவிகள் தாங்கள் படிக்கும் காலத்திலேயே இது போன்ற பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்,

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியும் நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மையமும் இணைந்து நடத்திய வேலைவாய்ப்பு கருத்தரங்கம் சங்கரன்கோவில் மனோ கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் தலைமை தாங்கினார்.

    வேலைவாய்ப்பு பயிற்சி ஒருங்கிணைப்பாளர் கணபதி வரவேற்றார். கல்லூரி முதல்வர் அப்துல் காதர் தனது தலைமையுரையில் மாணவ- மாணவிகள் தாங்கள் படிக்கும் காலத்திலேயே இது போன்ற பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் பயிற்சி இல்லாத முயற்சி எதிர்பார்த்த வெற்றியை தராது என்றும் கூறினார்.

    கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் உதவி இயக்குனர் மரிய சகாய ஆண்டனி மாணவர்கள் தங்களை தயார் படுத்திக் கொள்ள தேவையான வழிமுறைகளையும், படிக்க வேண்டிய புத்தகங்களையும் தெரிவித்தார். மேலும் போட்டி தேர்வில் கேட்கப்படும் வினாக்களின் தன்மையையும் உதாரணத்துடன் விளக்கினார்.

    பின்னர் மாவட்ட வேலைவாய்ப்பு இளநிலை அலுவலர் சையது முகமது, அரசு நிறுவனங்களில் உள்ள பணி வாய்ப்பினை பற்றியும், அந்த நிறுவனங்கள் நடத்தும் தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியும் விளக்கிப் பேசினார். பின்னர் மாணவ- மாணவிகள் எழுப்பிய வினாக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. கருத்தரங்கில் 2-ம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு பயிலும் மாணவ- மாணவிகள் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    முடிவில் தமிழ் துறை உதவி பேராசிரியை மேனகா நன்றி கூறினார்.

    • சங்கரன்கோவில் ஆதிமூல விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் கூலி தொழிலாளி
    • தெற்கு சங்கரன்கோவில் பகுதியில் ஒரு கோவில் அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கிடந்தார்.

    நெல்லை:

    சங்கரன்கோவில் ஆதிமூல விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன்(வயது 39). கூலி தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் சின்னகோவிலான்குளம் அருகே உள்ள தெற்கு சங்கரன்கோவில் பகுதியில் ஒரு கோவில் அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கிடந்தார். தகவல் அறிந்த சின்னகோவிலான்குளம் போலீசார் அங்கு விரைந்து சென்று முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • போட்டியில் கலைவாணி பள்ளி மாணவ-மாணவிகள் மூத்தோர் மற்றும் மிக மூத்தோர் பிரிவில் முதல் இடம் பிடித்தனர்.
    • வெற்றி பெற்றவர்களை பள்ளி முதல்வர் பொன்னழகன் என்ற கண்ணன் பாராட்டினார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்ட அளவிலான எறிபந்து போட்டி பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    இதில் திருவேங்கடம் கலைவாணி மெட்ரிக் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளனர்.மூத்தோர் மற்றும் மிக மூத்தோர் பிரிவில் முதல் இடமும், இளையோர் பிரிவில் 2-ம் இடமும், மாணவர்கள் இளையோர் மற்றும் மூத்தோர் பிரிவில் 2-ம் இடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். முதலிடம் பெற்ற 2 அணிகளும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளி முதல்வர் பொன்னழகன் என்ற கண்ணன் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரிய- ஆசிரியைகள், பொதுமக்கள் பாராட்டினர்.

    • இளம்பெண் ஒருவர் ராஜ பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை செய்து வந்தார்.
    • பெண்ணின் தலைமுடியை பிடித்து தரையில் இழுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் கரி வலம்வந்தநல்லூர் அருகே உள்ள கீழவயலியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ராஜ பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை செய்தார்.

    அதே மில்லில் வேலை செய்து வந்த குவளைக் கண்ணியை சேர்ந்த துரை என்ற ரஞ்சித் ( வயது 25) என்பவர் அந்த பெண்ணிடம், தான் 4 மாதமாக காதலிப்பதாக தெரிவித்துள்ளார்.

    சம்பவத்தன்று வேலை முடிந்து சுப்புலாபுரத்தில் பணியாளர்களை இறக்கி விட்டபோது அந்த பெண்ணிடம் சென்று துரை நான் உன்னை காதலிப்பதாக கூறுகிறேன். நீ ஒன்றும் பதில் சொல்லவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    தாக்குதல்

    இதுகுறித்து வேன் டிரைவர் குருசாமி மற்றும் கிளீனர் பாலமுருகன் ஆகியோர் துரையை தட்டி கேட்டுள்ளனர்.

    இதனால் ஆத்திரமடைந்த துரை அருகில் இருந்த கம்பியை எடுத்து அவர்களை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும், வேன் கண்ணாடியை உடைத்ததாகவும் கூறப்படு கிறது. தொடர்ந்து அந்த பெண்ணின் தலைமுடியை பிடித்து தரையில் இழுத்து சென்ற தாகவும் கூறப்படு கிறது.

    மேலும் வேனில் இருந்து உடைந்த கண்ணாடி துண்டுகளை வைத்து அந்த பெண்ணிடம் என்னை காதலிக்க வேண்டும் என சொல்லி தனக்குத்தானே கையை கிழித்து கொண்ட தாகவும் தெரிகிறது.

    இதில் முட்டியில் காயமடைந்த அந்த இளம்பெண் மற்றும் துரை ஆகியோர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர். மேலும் தாக்குதலில் காயமடைந்த வேன் டிரைவர் குருசாமி, கிளினர் பாலமுருகன் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று சென்றனர்.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்த கரிவலம்வந்த நல்லூர் போலீசார் பெண் வன்கொடுமை சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளின் கீழ் கைது செய்தனர்.

    • சங்கரன்கோவில் போலீசார் வாகன சோதனை போது அந்த வழியாக வந்த ஆட்டோவை தடுத்து நிறுத்தினர்
    • ஆட்டோவை சோதனை செய்து பார்த்தபோது 71 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன

    நெல்லை:

    சங்கரன்கோவில் அருகே அய்யாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை தடுத்து நிறுத்தினர். உடனே ஆட்டோவில் இருந்த 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இதையடுத்து போலீசார் அந்த ஆட்டோவை சோதனை செய்து பார்த்தபோது அதில் ரூ.26 ஆயிரம் மதிப்பிலான 71 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்ததில் ஆட்டோ உரிமையாளர் களப்பாகுளம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி(வயது 25) என்பது தெரியவந்தது.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அவரது கூட்டாளிகளான அதே பகுதியை சேர்ந்த பால்ராஜ், ரவி, காளிராஜ் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • மேலநீலிதநல்லூர் மேலதெருவை சேர்ந்தவர் வள்ளிநாயகம் தபால்காராக பணிபுரிந்து வருகிறார்
    • பொது இடத்தில் அவதூறாக பேசி பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் மேலதெருவை சேர்ந்தவர் வள்ளிநாயகம் (வயது46) இவர் மருக்காலங்குளத்தில் தபால்காராக பணிபுரிந்து வருகின்றார்.

    சம்பவத்தன்று மேலநீலிதநல்லூர் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது அதே ஊரைச் சேர்ந்த முத்துப்பாண்டியன் மகன் பாலமுருகன் (26) என்பவர் பொது இடத்தில் அவதூறாக பேசி பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வள்ளிநாயகம் என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பாலமுருகன் அவரை அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பனவடலிசத்திரம் போலீசார் பாலமுருகனை கைது செய்தனர்.



    • வேளாண்மை உழவர் நலத்துறை திட்டங்கள் மற்றும் மானியங்கள் தொடர்பான விளக்கம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது
    • பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

    சங்கரன்கோவில்:

    மேலநீலிதநல்லூர் வட்டாரத்தில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் மக்காச்சோளத்தில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை தொடர்பான பண்ணை பள்ளி ஈச்சந்தா பஞ்சாயத்திற்கு உட்பட்ட பெரியசாமிபுரம் கிராமத்தில் நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குனர் அறிவழகன் அறிவுரையின்படி பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

    பண்ணைப் பள்ளிக்கு துணை வேளாண்மை அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஈச்சந்தா ஊராட்சி மன்ற தலைவர் கருப்பசாமி கலந்து கொண்டார். பண்ணைப் பள்ளியின் தொடக்கத்தில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரதீஷ் கமாலின் வரவேற்று பேசினார்.பின்பு துணை வேளாண்மை அலுவலர் வேளாண்மை உழவர் நலத்துறை திட்டங்கள் மற்றும் மானியங்கள் தொடர்பான விளக்கங்களை விவசாயிகளிடையே எடுத்துக் கூறினார்.

    மேலும் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். வேளாண்மை பயிற்றுனர் தூண்டில் காளை கோடை உழவு, மக்காச்சோளத்தில் விதை நேர்த்தி, களை நிர்வாகம், உர நிர்வாகம், பூச்சி மேலாண்மை படைப்புழு கட்டுப்பாடு குறித்த தொழில் நுட்ப ஆலோசனைகளை விவசாயிகளுக்கு வழங்கினார். பண்ணைப்பள்ளி பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு மெட்டாரேஸ்யம் எனும் பூஞ்சான மருந்து இலவசமாக கொடுக்கப்பட்டது. பயிற்சி ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் ஆனந்தன் செய்திருந்தார்.

    • நொச்சிக்குளம் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • மாவட்ட கவுன்சிலர் கனிமொழி சிறந்த கிடாரி கன்றுகளுக்கும், சிறந்த கால்நடை மேலாண்மைக்கான பரிசுகளை வழங்கினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் ஒன்றியம், நொச்சிக்குளம் ஊராட்சியில் நெல்லை மண்டல இணை இயக்குநர் பொன்னுவேல் மற்றும் நெல்லை கோட்ட உதவி இயக்குநர் கலையரசி ஆகியோர் அறிவுரைப்படி நொச்சிக்குளம் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் முனியம்மாள் தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் வெள்ளத்தாய் சிறப்புரையாற்றினார்.

    மாவட்ட கவுன்சிலர் கனிமொழி சிறந்த கிடாரி கன்றுகளுக்கும், சிறந்த கால்நடை மேலாண்மைக்கான பரிசுகளை வழங்கினார். முகாமில் பசுக்களுக்கு தாது உப்புக்கலவை வழங்கப்பட்டது. முகாமில் குடற்புழுநீக்கம், சினை பார்த்தல், செயற்கை முறை கருவூட்டல், சினையுறா மாடுகளுக்கு சிகிச்சை செய்யப்பட்டது. முகாமில் 250 பசுக்கள், 172 வெள்ளாடுகள், 805 செம்மறியாடுகள், 225கோழிகள், 45வெண்பன்றிகள் பயன்பெற்றது. சங்கரன்கோவில் கால்நடை உதவி இயக்குனர் ரஹ்மத்துல்லா தொழில்நுட்ப உரையாற்றினார்.வடக்குப்புதூர் கால்நடை மருந்தக உதவி மருத்துவர் வசந்தா, பெரும்பத்தூர் உதவி மருத்துவர் மகிழன், கால்நடை பராமரிப்பு உதவியாளர் முத்துமாரியப்பன் ஆகியோர் கொண்ட மருத்துவக்குழு, முகாம் ஏற்பாடுகளை செய்து கால்நடை களுக்கு சிகிச்சை அளித்தனர்.

    • சங்கரன்கோவில் முழு நேர நூலகத்தில் மெய்நிகர் நூலக பிரிவு தொடக்க விழா நடைபெற்றது.
    • வடக்கு மாவட்ட செயலாளர், ராஜா எம்.எல்.ஏ. மெய்நிகர் நூலகப் பிரிவை தொடங்கி வைத்தார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்ட சங்கரன்கோவில் முழு நேர நூலகத்தில் மெய்நிகர் நூலக பிரிவு தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு லயன்ஸ் மாவட்ட 2-ம் துணை ஆளுநர் அய்யாத்துரை தலைமை தாங்கினார். சங்கரன் கோவில் நூலகர் முருகன் வரவேற்றார்.

    சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி, பாரதி வாசக வட்டம் கவுரவ ஆலோசகர் வெள்ளைச்சாமி என்ற செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர், ராஜா எம்.எல்.ஏ. மெய்நிகர் நூலகப் பிரிவை தொடங்கி வைத்தார்.

    மெய்நிகர் நூலக தொழில்நுட்ப கருவியின் மூலம் உலகத்தின் மிக முக்கியமான இடங்கள், நாடுகள், கண்டங்கள், மலைகள், அருவிகள், கடல்கள் உள்ளிட்ட பல செய்திகளை இதன் மூலம் 360 டிகிரியில் பார்க்க முடியும். இதை காணும் பொழுது நேரில் காண்பது போல் உணர முடியும். இதனால் மாணவர்களின் கல்வி தரமும் உயரும்.

    இந்த நிகழ்ச்சியில் மேல நீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, தி.மு.க. நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட இளைஞர் அணி சரவணன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் உதயகுமார், நூலகர் சிவகுமார், நூலக ஆய்வாளர் கணேசன், பாரதி வாசகர் வட்டம் செயலாளர் நாராயணன், ஆசிரியர் இளங்கோ கண்ணன், வேணுகோபால் என்ற கண்ணன், நூலகர்கள் சண்முகவேல், அப்துல்காதர் ஜெய்லானி, நகர துணை செயலாளர்கள் முத்துக்குமார், சுப்புத்தாய், ஆசிரியர்கள் கிருஷ்ணசாமி, கவுன்சிலர்கள் வேல்ராஜ், விஜயகுமார், நாராயணன், தி.மு.க.வை சேர்ந்த சம்பத், அன்சாரி ஜெயக்குமார், பிரகாஷ், ஆதி, பாரதிராஜா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சங்கரன்கோவிலில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • திராவிட மாடல் பாசறை கூட்டத்தை சிறப்பாக நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார்.

    தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் தங்கவேலு, சீனிவாசன், பரமகுரு, தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் சரவணன், துணைச் செயலாளர்கள் ராஜதுரை, மனோகரன், புனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார்.

    இதில் தி.மு.க. தலைவராக மீண்டும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வடக்கு மாவட்டம் சார்பில் நன்றி தெரிவிப்பது எனவும், 15-ம் கழகப் பொதுத் தேர்தலில் வடக்கு மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகளை நியமனம் செய்த முதல்-அமைச்சருக்கும், தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தும், வாக்குச்சாவடி முகவர்கள் அமைக்கும் பணியை (பிஎல் ஏ 2) சிறப்பாக செய்ய வேண்டும் எனவும், நகரம், ஒன்றியம், பேரூர் பகுதிகளில் புதிய வாக்காளர்கள் சேர்க்கும் பணியை துரித படுத்த வேண்டும் எனவும், நவம்பர் 27-ல் பிறந்தநாள் காணும் கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்த நாள் நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்த வேண்டும் எனவும், ஒன்றிய, நகர, பேரூர், கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டங்களை சிறப்பாக நடத்த வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் தி.மு.க. தலைமை அறிவித்துள்ள மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிரான கூட்டங்களை தென்காசி வடக்கு மாவட்டத்தில் சிறப்பாக நடத்த வேண்டும் எனவும், திராவிட மாடல் பாசறை கூட்டத்தை சிறப்பாக நடத்த வேண்டும் எனவும், தலைமைக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி தென்காசி வடக்கு மாவட்ட கழகத்தின் அனைத்து பணிகளையும் சிறப்பாக நடைபெற அனைத்து நிர்வாகிகளும் தீவிர முயற்சியோடு களப்பணி ஆற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் ஒன்றிய செயலாளர்கள் லாலாசங்கரபாண்டியன், கடற்கரை, பெரியதுரை, மதிமாரிமுத்து, ராமச்சந்திரன், வெற்றிவிஜயன், கிறிஸ்டோபர், சேர்மதுரை, முத்தையாபாண்டியன், பூசைபாண்டியன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் வெள்ளத்துரை, தேவதாஸ், மாரிச்சாமி, பராசக்தி, பா.மாரிச்சாமி, சாகுல்ஹமீது, வேல்சாமிபாண்டியன், நகர செயலாளர்கள் சங்கரன்கோவில் பிரகாஷ், புளியங்குடி அந்தோணிசாமி, பேரூர் கழகச் செயலாளர்கள் திருவேங்கடம் மாரிமுத்து, ராயகிரி குருசாமி, வாசுதேவநல்லூர் ரூபி பாலசுப்பிரமணியன், நகராட்சி சேர்மன்கள் சங்கரன்கோவில் உமா மகேஸ்வரி, புளியங்குடி விஜயா, ராயகிரி சேர்மன் இந்திரா விவேகானந்தன், சிவகிரி சேர்மன் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • டெனிகாய்ட் போட்டி பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
    • முதலிடம் பெற்ற 7 அணிகளும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்

    சங்கரன்கோவில்:

    தென்காசி வருவாய் மாவட்ட அளவிலான டெனிகாய்ட் போட்டி பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    இதில் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் பள்ளி மாணவ- மாணவிகள் சாதனை படைத்துள்ளார்கள். மாணவர்கள் இளையோர் மற்றும் மூத்தோர் பிரிவில் ஒற்றையர், இரட்டையர் பிரிவில் முதலிடமும், மூத்தோர் பிரிவில் இரட்டையர் பிரிவில் முதலிடமும், ஒற்றையர் பிரிவில் 2-ம் இடமும், மாணவிகள் இளையோர் பிரிவில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் முதலிடமும், மிக மூத்தோர் பிரிவில் இரட்டையர் பிரிவில் 2-ம் இடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

    முதலிடம் பெற்ற 7 அணிகளும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளை பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகி பொன்னழகன் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் ஊர் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

    ×