search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Santhaiyadiyoor Narayana swami Temple"

    • திருவிழாவையொட்டி அய்யா அன்னவாகனத்தில் பவனி, நள்ளிரவு 12 மணிக்கு குதிரை வாகனத்தில் பவனி ஆகியவை நடைபெற்றது.
    • ஆயிரக்கணக்கான மக்களுக்கு இன்று காலை உம்பான் அன்னதர்மம் வழங்கப்பட்டது,

    உடன்குடி:

    உடன்குடி சந்தையடியூரில் தாகம் தணிந்த பதி என்றழைக்கப்படும் அய்யா நாராயணசுவாமி கோவிலில் பால்முறைத் திருவிழா தொடங்கியது.

    இதையொட்டி நேற்று முன்தினம் இரவு அய்யா அன்னவாகனத்தில் பவனி நேற்று பகல் 11 மணிக்கு நாக வாகனத்தில் பவனி, பிற்பகல் 3 மணிக்கு தருமம் எடுத்தல், மாலை 6மணிக்கு திருவிளக்கு தீப வழிபாடு, நள்ளிரவு 12 மணிக்கு அய்யா குதிரை வாகனத்தில் பவனி ஆகியவை நடைபெற்றது. இன்று காலை 6 மணிக்கு ஆயிரக்கணக்கான மக்களுக்கு உம்பான் அன்னதர்மம் வழங்கப்பட்டது, தொடர்ந்து அய்யா கருட வாகனத்தில் பவனி நடந்தது. நாளை அனுமார் வாகனத்தில் அய்யா பவனி, நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) பால் வைத்தல், அலங்கரிக்கப்பட்டபூஞ்சப்பரத்தில் அய்யா பவனி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சந்தையடியூர் அய்யா வழி இறைமக்கள் செய்துள்ளனர்.

    ×