என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "Santhanakappu"
- தீமிதி திருவிழா கடந்த மாதம் 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- அம்மனுக்கு சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை தெற்குகாடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற தர்மகோவில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் தீமிதி திருவிழா கடந்த மாதம் (ஜூலை) 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்க ளில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதிஉலா நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
கோவில் முன்பு அமைக்க ப்பட்டிருந்த குண்டத்தில் விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவை முன்னிட்டு முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.