என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sapparabhavani"

    • கயத்தாறில் புதுமை புனித சந்தன மாதா கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • சந்தனமாதா சப்பரபவனி இரவு 10 மணிக்கு தொடங்கி முக்கிய ரதவீதிகள் வழியாக பவனி வந்தது.

    கயத்தாறு:

    கயத்தாறில் புதுமை புனித சந்தன மாதா கோவில் திருவிழா கடந்த 9-ந்தேதி கயத்தாறு பங்குத்தந்தை எரிக் ஜோ தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று மாலை ஜெபவழிபாடு நடைபெற்றது. 10-ந்தேதி விளக்கு பூஜை, நேற்று அன்னையின் திருச்சபை முன்பு சிறப்பு வழிபாடும், மன்றாடுதல், வேண்டுதலும், ஜெபம் பிரார்த்தனை, சப்பரபவனி ஆகியவை நடைபெற்றன.

    திருவிழாவிற்கு கயத்தார், தஞ்சாவூர், சென்னை, சிவகாசி, நெய்வேலி, விருதுநகர், நெல்லை, கோவில்பட்டி ஊர்களில் இருந்து இறைமக்கள் வந்திருந்தனர். கோவிலில் கடந்த 3 நாட்களும் அன்னதானம் நடைபெற்றன. மூன்றாம் நாளன்று சந்தனமாதாவிற்கு இறைமக்கள் மற்றும் கிராம மக்கள் வீடுகளில் இருந்து கொண்டு வந்து பால் அபிஷேகமாக அனைவரும் ஊற்றினார்கள்.

    தொடர்ந்து இனிப்பு கலந்த ஆயிரம் கிலோ துல்லுமாவு மற்றும் பழங்கள் வழங்கினார்கள். இதனை தொடர்ந்து சந்தனமாதா சப்பரபவனி இரவு 10 மணிக்கு தொடங்கி முக்கிய ரதவீதிகள் வழியாக பவனி வந்தது. வழிநெடுக இறைமக்கள் வழிபாடு செய்தனர். சப்ரம் 12.30 மணிக்கு கோவில் வந்து சேர்ந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியார் மற்றும் இறை மக்கள் செய்திருந்தனர்.


    ×