என் மலர்
நீங்கள் தேடியது "Sarkar"
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் குலாளர் சமுதாயம் சார்பாக பொங்கல் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கும், அரசு தேர்வுகளில் சாதனை படைத்த பள்ளி மாணவர்களுக்கும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. அம்மா பேரவை வார்டு கழக செயலாளர் பிச்சை ராஜ் தலைமை வகித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா முன்னிலை வகித்தார். தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
குலாளர் சமுதாயத்திற்கு அ.தி.மு.க. அரசு என்றும் உறுதுணையாக இருந்து வருகிறது. ஸ்ரீவில்லி புத்தூரில் செயல்படும் குலாளர் சமுதாய பள்ளி தரம் உயர்த்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஏராளமான விலையில்லா திட்டங்களை நிறைவேற்றினார். இலவசம் என்று சொல்லக்கூடாது என்பதற்காக விலையில்லா மிக்சி, விலையில்லா அரிசி, விலையில்லா கிரைண்டர், விலையில்லா மின்விசிறி என்று கூறினார்.
இலவசம் வேண்டாம் என்று சொன்னால் இன்றைக்கு பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு பஸ் பாசை நிறுத்தி வைக்க முடியுமா?
விலையில்லாமல் கொடுக்கும் சைக்கிள், லேப்டாப் திட்டத்தை நிறுத்த முடியுமா. இன்று சைக்கிள் கொடுப்பதால் ஏழை எளிய மக்களின் பிள்ளைகள் நகரில் வந்து படிக்க முடிகின்றது. வசதி படைத்தவர்கள் மட்டும் தமிழகத்தில் இருக்கின்றனர் என்று சொல்லிவிட முடியாது.
தமிழகத்தில் இன்றும் 1கோடியே 80 லட்சம் குடும்பம் விலையில்லா அரிசி வாங்கி சாப்பிட்டுதான் வருகின்றனர்.
ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திருமண உதவித்தொகை கொடுத்து ஒளியேற்றியவர் ஜெயலலிதா என்பதை யாராலும் மறுக்க முடியாது.
தமிழகம் பெரிய பொருளாதார வளர்ச்சியை இன்னும் எட்டவில்லை. ஏழைகளை இழிவு படுத்தும் வகையில் யாரும் பேசக்கூடாது செயல்படக்கூடாது. இலவச திட்டங்களை விட்டு விடுங்கள் என்று சொல்பவர்களுக்கு எல்லா வசதிகளும் இருக்கும். ஆனால் இலவச திட்டங்கள் இல்லை என்று சொன்னால் எத்தனை குடும்பங்கள் பசியோடு இருக்கும் என்று அவர்களுக்கு தெரியாது.
20 கிலோ அரிசியை வாங்கி சாப்பிடும் குடும்பங்கள் இன்றளவும் இருகின்றனர். ஏழை எளியவர்களுக்கு, இல்லாதவர்களுக்கு, பாட்டாளி, படைப்பாளிகளுக்காகதான் எங்களது அரசாங்கம் செயல்படுகின்றது. 1 1/2 மணி நேரம் ஓடும் திரைப்படத்தில் இலவச பொருட்களை தூக்கி வீசி எரிந்தால் கை தட்டலாம். பசி பட்டினியோடு வாழும் குடும்பங்களுக்கு அவர்களால் பதில் சொல்ல முடியாது.
பணக்காரர்களுக்கு எங்களது அரசாங்கம் செயல் படவில்லை. ஏழைகளுக்கு தான் எங்களது அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. ஒருநாள் முதல்வர் சினிமாவில் வேண்டுமானால் ரசித்து பார்க்கலாம். நடைமுறைக்கு ஒத்துவராது. சினிமா வேறு நடைமுறை வாழ்க்கை வேறு.
மேற்கண்டவாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் மயில்சாமி, புதுப்பட்டி கருப்பசாமி, முன்னாள் கவுன்சிலர் முத்தையா, உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #ministerrajendrabalaji #admkgovernment

மதுரையில் ‘சர்கார்’ சினிமா திரையிடப்பட்ட தியேட்டர் முன்பு மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தலைமையில் அ.தி.மு.க. வினர் நேற்று மதியம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மீதான ‘சர்கார்’ காட்சிகள் அனைத்தையும் நீக்கம் செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றும் அந்தக்காட்சிகள் நீக்கம் செய்த பின்னர் சினிமாவில் திரையிட வேண்டும் என்றும் தியேட்டர் மானேஜரை சந்தித்து ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வற்புறுத்தினார். இதையடுத்து நேற்று மதிய காட்சியும் ரத்து செய்யப்பட்டது.
‘சர்கார்’ படத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ள சர்ச்சை காட்சிகள் நீக்கம் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.
இன்று மதியம் முதல் திரையிடப்படும் ‘சர்கார்’ படத்தில் சர்ச்சை காட்சிகள் இருக்காது என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறியதாவது:-
மறைந்த தலைவர் குறித்தும், அரசின் நலத் திட்டங்கள் குறித்தும் சினிமாவில் விமர்சனங்கள் செய்வது கண்டனத்துக்குரியது.
தமிழக மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அ.தி.மு.க. அரசு செய்துள்ள சாதனை திட்டங்களை வேண்டுமென்றே உள் நோக்கத்தில் கொச்சைப்படுத்த சர்கார் திரைப்படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை தான் அ.தி.மு.க. சார்பில் எதிர்ப்பு தெரிவித்தோம். இப்போது சர்கார் படக்குழு சர்ச்சை காட்சிகளை நீக்க முன் வந்திருப்பது வரவேற்கத்தக்கது.
இது போன்று இனி மேலும் நடக்காதவாறு திரையுலகினர் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மதுரை அண்ணாநகர் பகுதியில் ரூ.22 லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் அனீஷ்சேகர், நிர்வாகிகள் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், அண்ணாநகர் முருகன், ஜெயவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Sarkar #ADMK #RajanChellappa
மதுரை:
நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டது.
இந்த திரைப்படத்தில் முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா குறித்தும், அ.தி.மு.க. அரசின் நலத்திட்ட உதவிகளை விமர்சித்தும் சர்ச்சை காட்சிகள் இடம் பெற்றிருந்ததாக கூறி அ.தி.மு.க.வினர் சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தியேட்டர் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டது.
இதையொட்டி படக்குழுவினர் சர்ச்சை காட்சிகளை நீக்கி இன்று மதியம் திரையிடப்படும். சர்கார் திரைப்படத்தில் அ.தி.மு.க.வினர் தெரிவித்துள்ள சர்ச்சை காட்சிகள் இடம் பெறாது என்று அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மதுரையில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களின் இதய தெய்வமாக வாழ்ந்து மறைந்த முன்னாள் முதல் -அமைச்சர் அம்மாவின் அரசு மீது களங்கத்தை ஏற்படுத்துகிற வகையில் தீபாவளிக்கு திரைக்கு வந்த ‘சர்கார்’ திரைப்படத்தில் காட்சி அமைப்புகள் இடம் பெற்றிருப்பதை அறிந்து மனவேதனை அடைந்தோம். அந்த மன உளைச்சல் இன்றைக்கு தீர்ந்திருக்கிறது.
‘சர்கார்’ திரைப்படத்தில் நடித்த நடிகரின் ரசிகர்மன்ற நிர்வாகிகள் அனைவரது வீடுகளிலும் கூட அம்மாவின் விலையில்லா திட்டம் சென்றடைந்து உள்ளது. அவர்களும் பயன் அடைந்திருக்கிறார்கள்.
ஜாதி, இனம், மொழி, மத வேறுபாடின்றி கட்சி மாறுபாடின்றி அனைவரும் பயன்பெற்ற இந்த திட்டங்களை இனி யாரும் கொச்சைப்படுத்தக் கூடாது. விமர்சிக்கக்கூடாது.
‘சர்கார்’ படக்குழுவினர் அந்த சர்ச்சை காட்சிகளை நீக்கி விட்டு இன்று மதியம் முதல் ‘சர்கார்’ திரைப்படத்தை திரையிட இருப்பதாக அறிவித்துள்ளார்கள். அந்த அறிவிப்பால் எங்கள் மனம் குளிர்ந்து விட்டது.
எனவே படக்குழுவினருக்கு அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
1 1/2 கோடி தொண்டர்களின் தெய்வமாக போற்றப் படுகின்ற அம்மாவின் தியாகத்தை, உழைப்பை கொச்சைப்படுத்துகின்ற நோக்கில் இது போன்ற காட்சிகளை இனி எந்த திரைப்படத்திலும் எடுக்க வேண்டாம்.
இது போன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் ஏற்படாத வகையில் சினிமா துறையினர் கவனமாக செயல்பட வேண்டும்.
ஏழை எளிய மக்கள் வாழ்க்கைத்தரத்தை மேம் படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் 1 கோடியே 80 லட்சம் குடும்பதாரர்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறியை வழங்கியவர் அம்மா. விலையில்லா திட்டங்கள் சமூக பாதுகாப்புக்காக செயல்படுத்தப்பட்டதாகும்.
இந்த திட்டத்தால் பயனடைந்தவர்கள் ஏராளம். இந்த திட்டம் வரலாற்று சிறப்பு மிக்க திட்டமாகும். இதனை இலவசம் என்ற பெயரில் சினிமாவில் கொச்சைப்படுத்தி அம்மாவின் புகழுக்கு களங்கம் ஏற்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
அந்த வகையில் தான் ‘சர்கார்’ படக்குழுவுக்கு எங்கள் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் தெரிவித்தோம். இப்போது படக்குழுவினரின் அறிவிப்பு, அவர்கள் வழங்கியுள்ள உத்தரவாதம் எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எங்கள் உள்ளத்தை குளிரச் செய்து அறிவிப்பை தந்த படக்குழுவுக்கு மீண்டும் ஜெயலலிதா பேரவை சார்பில் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். #sarkar #ministerrbudayakumar #vijay

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இன்று சசிகலாவை அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சந்தித்துப் பேசினார்கள்.
சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் டி.டி.வி.தினகரன் கூறியதாவது:-

மக்களை திசை திருப்பும் நோக்கில் ஆளும் கட்சியினர் போராட்டம் நடத்துகின்றனர். போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா வீட்டில் சோதனை நடைபெற்றபோது ஆளுங்கட்சியினர் ஏன் போராடவில்லை?
இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #Sarkar #ADMK


இந்நிலையில் சர்காரில் சர்ச்சை காட்சிகளை நீக்குவதால் மட்டும் பிரச்சனை தீர்ந்து விடாது என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.
சர்காருக்கு எதிர்ப்பு என்ற பெயரில் வன்முறை கலாச்சாரம் கட்டவிழ்ந்து விடப்பட்டுள்ளதாகவும் குஷ்பு குற்றம்சாட்டி உள்ளார். #Sarkar #Kushboo #Congress


இவ்வாறு அவர் கூறினார். #ADMK #SellurRaju #sarkar