என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Sathai"
- புது வேத கோவில் தெரு ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டும் வாகன ஓட்டுனர்கள் சரியாக கடைபிடிக்கவில்லை.
- சாத்தான்குளம் பேரூராட்சியில் குறிப்பிட்ட சாலைகளில் போக்குவரத்து போலீசார் நிறுத்தி போக்குவரத்தை சரி செய்ய வேண்டும்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் பஜாரில் மேலசாத்தான்குளம் ரோடு, இட்டமொழி ரோடு, நாசரேத் ரோடு, முதலூர் ரோடு மற்றும் வாசக சாலை பஜார் உள்ளிட்ட சாலைகளில் தினசரி சிறிய வாகனங்களும் கனரக வாகனங்களும் சென்று வந்து கொண்டிருக்கிறது.
இப்பஜார்களில் இருபுறமும் வியாபார கடைகள் உள்ளன. புது வேத கோவில் தெரு ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டும் வாகன ஓட்டுனர்கள் சரியாக கடைபிடிக்கவில்லை. அனைத்து பஜார்களிலும் வியாபார கடைகளில் பொதுமக்கள் பொருட்கள் வாங்க சென்றால் இரு பக்கமும் வாகனங்கள் சூழ்ந்து கொண்டு வெளியேவர முடியாத சூழ்நிலை உள்ளது. இருசக்கர வாகனங்களிலும் சைக்கிளில் செல்பவர்களும் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இது குறித்து நகர ம.தி.மு.க. சார்பில் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
வாசக சாலை பஜாரில் இருந்து முதலூர் ரோடு வரையிலும் கிறிஸ்தவ ஆலயம் முன்பு சந்தித்து இடது பக்கமும் வலது பக்கம் சாலைகளில் வாகன ஓட்டுநர்கள் அதிக பாரங்களை ஏற்றி செல்வதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே சாத்தான்குளம் பேரூராட்சியில் குறிப்பிட்ட சாலைகளில் போக்குவரத்து போலீசார் நிறுத்தி போக்குவரத்தை சரி செய்ய வேண்டுமென மனுவில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் சதாசிவன் கூறுகையில், சாத்தான்குளம் வாசசாலை பஜாரில் இருந்து குமரி மாவட்ட பஸ்களும் வாகனங்களும் மற்றும் முதலூர், உவரி,திசையன்விளை வரை உடன்குடி, பெரியதாழை போன்ற ஊர்களுக்கும் செல்வதற்கு சிரமம் ஏற்படுகிறது. முதலில் இந்த பஜார்களில் வாகனங்களை போலீசார் காலை, மாலை, இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு ஒழுங்குபடுத்த வேண்டும் என்றார்.
- மருத்துவமனைக்கு தாலுகாவை சேர்ந்த சுமார் 400 பேர் தினசரி வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
- சாத்தான்குளம் அரசு மருத்துவமனை புறக்கணிக்கப்பட்ட மருத்துவமனையாக உள்ளது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் ஒன்றியத்தில் 24 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. தாலுகா தலைநகரமான சாத்தான்குளத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மகப்பேறு பெண் மருத்துவர் இன்னும் நியமிக்கப்படவில்லை. பெண் மருத்துவர் நிரந்தரமாக நியமிக்க வேண்டும் என அரசுக்கு அரசியல் கட்சியினரும் தாலுகா பகுதி பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து முதல்-அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கும் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுக்கும், மாவட்ட ம.தி.மு.க. கலைப் பிரிவு செயலாளரும் முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினருமான மகாராசன் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை மனுக்கள் அனுப்பி உள்ளனர்.
அம்மனுவில் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையானது 27 கிராமங்களை உள்ளடக்கியதாகும். இந்த மருத்துவமனையில் 50 படுக்கை வசதிகள் உள்ளன. மருத்துவமனைக்கு தாலுகாவை சேர்ந்த சுமார் 400 பேர் தினசரி வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆனால் இங்கு 2 ஆண்கள் மருத்துவர்களே உள்ளனர். மகப்பேறு மருத்துவமனையில் ஒரு மாத காலமாக பெண் டாக்டர் இல்லை. இதனால் கருவுற்ற பெண்கள் சிரமப்படுகின்றனர். மருத்துவமனையில் பிரசவம் நடைபெறவில்லை. சாத்தான்குளம் அரசு மருத்துவ மனை புறக்கணிக்கப்பட்ட மருத்துவமனையாக உள்ளது. எனவே தாலுகா அளவில் உள்ள இந்த மருத்துவ மனையில் கர்ப்பிணி பெண்கள் பயன் பெறும் அளவில் உடனடியாக பெண் மருத்துவர் நியமிக்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- இந்திய அஞ்சல் துறை தூத்துக்குடி அஞ்சல் கோட்டம் சார்பாக நடைபெற்றது.
- பள்ளி தாளாளர் நோபில் ராஜ் மாணவர்களுக்கு திட்டத்தில் சேர்வதால் ஏற்படும் நன்மைகளை பற்றி சிறப்புரை ஆற்றினார்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இந்திய அஞ்சல் துறை தூத்துக்குடி அஞ்சல் கோட்டம் சார்பாக செல்வமகள் சேமிப்பு திட்டம் குறித்து மாணவர்களுக்கு விளக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட துணை அஞ்சல் துறை அதிகாரி டென்னிஸ் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் மற்றும் அதனால் ஏற்படும் பலன்கள் பற்றி கூறி மாணவர்களை திட்டத்தில் சேர்ந்து பயன் அடைய வழிமுறைகளை கூறினார்.
பள்ளி தாளாளர் நோபில் ராஜ் மாணவர்களுக்கு அத்திட்டத்தில் சேர்வதால் ஏற்படும் நன்மைகளை பற்றி சிறப்புரை ஆற்றினார். தலைமை ஆசிரியர் சாந்தி மற்றும் ஆசிரியர் லிங்க துரை, சாந்தி, உமா, பிரிட்டோ, ராஜேஸ்வரி, பிரிஜித், சுவினா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் சங்கர நாராயணன் செய்திருந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்