என் மலர்
நீங்கள் தேடியது "sathankulam"
- சாத்தான்குளம் அருகே மோடி நகரை சேர்ந்தவர் செல்வி திருநங்கை
- நீதிமன்றம் மற்றும் சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் தர்ணாவில் ஈடுப்பட்டார்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே மோடி நகரை சேர்ந்தவர் செல்வி (வயது45). திருநங்கையான இவரது தம்பி முத்துக்குமார் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை தாக்கியது தொடர்பாக புகாரின் பேரில் தட்டார்மடம் போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து செல்வி , சாத்தான்குளம் நீதிமன்றத்தில் முறையிட்டார். நீதிபதி, போலீசாருக்கு பரிந்துரைத்தார். ஆனாலும் போலீசார் விசாரிக்காததால் செல்வி, நீதிமன்றம் மற்றும் சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் தர்ணாவில் ஈடுப்பட்டார். போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் சாத்தான்குளம் கோர்ட்டு வளாகத்தில் இருந்த கிணற்றில் செல்வி திடீரென குதித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர் செல்வியை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- சாத்தான்குளம் தேர்வுநிலை பேரூராட்சியில் ரூ. 98 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி-பகிர்மான குழாய்கள் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.
- விழாவில் ஆதிதிராவிடர் மக்களுக்கு 57 பேருக்கு இணைய வழி இ-பட்டாக்களும் கனிமொழி எம்.பி. வழங்கினார்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் தேர்வுநிலை பேரூராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 98 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி-பகிர்மான குழாய்கள் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.
நலத்திட்ட உதவிகள்
விழாவில் 235 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்தார்.
தொடர்ந்து சமூகபாது காப்பு திட்டத்தின் கீழ் இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித ்தொகை, ஆதரவற்ற விதவை உதவிதொகை மற்றும் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் திருமண உதவித் தேவை உள்ளிட்ட அரசு நலத் திட்டங்களை 77 பேருக்கு வழங்கினார்.
வீட்டுமனைப் பட்டா
அதேபோல வருவா ய்த்துறை சார்பாக பெரிய தாழை, படுக்கப்பத்து, கட்டாரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 101 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களும், ஆதிதிராவிடர் மக்களுக்கு 57 பேருக்கு இணைய வழி இ-பட்டாக்களும் கனிமொழி எம்.பி. வழங்கி பேசினார்.
விழாவில் திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. புகாரி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மாகின் அபூபக்கர், தாசில்தார் தங்கையா, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார், அரசு மகளிர் கல்லூரி முதல்வர் சின்னத்தாய், தி.மு.க. மாணவர் அணி துணைச் செயலாளர் உமரி சங்கர், மாவட்ட அவைத் தலைவர் அருணாசலம், முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட் செல்வன், மாவட்ட ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், முதலூர் பஞ்சாயத்து தலைவர் பொன்முருகேசன், ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெயபதி, மாவட்ட தி.மு.க. பிரதிநிதி அலெக்ஸ் புருட்டோ, ஆழ்வை ஒன்றிய செயலாளர் பார்த்திபன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்ன தாக சாத்தான்குளம் பேரூராட்சி தலைவர் ரெஜினா ஸ்டெல்லாபாய் வரவே ற்றார். முடிவில் பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஜோசப் நன்றி கூறினார்.
- சாத்தான்குளம் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
- 150 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டு அனைவருக்கும் அரசு சார்பில் சீர் வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் வட்டார அளவிலான கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சாத்தான்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் ஜெயபதி தலைமை தாங்கினார். பேரூராட்சித் தலைவர் ரெஜினி ஸ்டெல்லாபாய் முன்னிலை வகித்தார். வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயாதுரைபாண்டியன் வரவேற்றார். இங்குள்ள தனியார் திருமண்டபத்தில் நடைபெற்ற விழாவிற்கு சுற்று வட்டார பகுதியில் இருந்து வந்திருந்த 150 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது. அனைவருக்கும் அரசு சார்பில் சீர் வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய ஆணையர் ராணி , வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தொடர்ந்து கர்ப்பினி பெண்களுக்கு பல வகையான அறுசுவை உணவு வழங்கப்பட்டு, அறிவுரை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திட்ட மேற்பார்வையாளர் வசந்தா, வட்டார ஒருங்கிணைப்பாளர் அருள்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வட்டார திட்ட உதவியாளர் வில்லியம் நன்றி கூறினார்.
- மெய்நிகர் நூலகம் திறப்புவிழா தூத்துக்குடி மாவட்ட ஆவின் சேர்மன் சுரேஷ் குமார் தலைமையில் நடை பெற்றது.
- விழாவில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் இராம.கோபால கிருஷ்ணர் அரசு கிளை நூலகத்தில் மெய்நிகர் நூலகம் திறப்புவிழா தூத்துக்குடி மாவட்ட ஆவின் சேர்மன் சுரேஷ் குமார் தலைமையில் நடை பெற்றது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் பெண்கள் கல்லூரி முதல்வர் சின்னத்தாய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.பொத்தக்காலன்விளை நூலகர் நல்நூலகர் விருது பெற்ற சுப்பிரமணியன் வரவேற்றார்.
பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர். மிதிவண்டி வழி விழிப்புணர்வு பரப்புரையாளர் மாடசாமி கவுரவிக்கப்பட்டார்.
வாசகர் வட்டம் தலைவர் கவிஞர் நடராசன், யோகா பயிற்றுநர் ராஜலட்சுமி, ஓய்வுபெற்ற அஞ்சலக அலுவலர் அனந்த கிருஷ்ணன்,புனித வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பவுலின்,வட்டார மனிதநேய நல்லிணக்கப் பெருமன்றம் செயலாளர் பால்துரை உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் யோகா பயிற்றுநர் கமலம், வாசகர் வட்ட துணைத்தலைவர் பொறியாளர் கனகராஜ், அ.தி.மு.க. முன்னாள் ஒன்றியச் செயலாளர் ராஜ்மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நூலகர் சித்திரைலிங்கம் மெய்நிகர் நூலகம் குறித்து செய்முறை விளக்கம் அளித்தார். வாசகர் வட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் பிரேம்குமார் நன்றி கூறினார்.
- பன்னம்பாறை விலக்கில் செட்டிகுளம் சாலையில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்
- இறந்து கிடந்த நபர், அந்த பகுதியில் சுற்றித்திரிந்தவர் என்பது தெரியவந்தது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே பன்னம்பாறை விலக்கில் செட்டிகுளம் சாலையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அவரது உடலில் ரத்த காயம் காணப்பட்டது. லுங்கி மட்டும் அணிந்து காணப்படும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் உடனடியாக தெரியவில்லை.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் முத்துராமலிங்கம், சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். எஸ்.ஐ. விஜயகுமார் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் இறந்து கிடந்த நபர், அந்த பகுதியில் சுற்றித்திரிந்தவர் என்பது தெரியவந்தது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? வாகனத்தில் சிக்கி உயிரிழந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணங்களில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் விசாரணை நடத்தி வருகிறார்.
- அனைத்துத்துறை அலுவலர்கள் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்றனர்.
- வேலன்புதுக்குளத்தில் பகுதி நேர ரேசன் கடை அமைக்கவும், விதவை உதவி தொகை பெறவும் மனுக்கள் பெறப்பட்டது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் ஒன்றியம் நெடுங்குளம் ஊராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டதை முன்னிட்டு அனைத்துறை அலுவலர் ஒருங்கிணைப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி தலைவர் சகாயஎல்பின் தலைமை தாங்கினார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் லெனின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் உதவி வேளாண்மை அலுவலர் மாரிப்பாண்டி, உதவி தோட்டக்கலை அலுவலர் முகேஷ், கிராம நிர்வாக அலுவலர் சிவகாமி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், கால்நடை உதவி மருத்துவர் சவுந்தர் உள்ளிட்ட அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டு தங்கள் துறையின் கிழ் வளர்ச்சி திட்டங்களை விளக்கி பேசினர். தொடர்ந்து அனைத்து துறை அலுவலர்கள் பொது மக்களிடமிருந்து மனுக்கள் பெற்றனர். முகாமில் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.
இதில் வேலன்புதுக்குளத்தில் பகுதி நேர ரேசன் கடை அமைக்கவும், ஆட்டுக் கொட்டை, மாட்டு கொட்டகை அமைக்கவும், விதவை உதவி தொகை பெறவும் மனுக்கள் பெறப்பட்டது. முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
முகாம் ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் ராஜா, தேசிய ஊரகவேலை உறுதி திட்டஒருங்கிணைப்பாளர் ஜான்சிஅமலாராணி மற்றும் ஊராட்சி பணியாளர்கள் செய்திருந்தனர்.
- சங்கம் தற்பொழுது கடன் வழங்குதல், டெபாசிட் சேகரித்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை வைத்து சிறந்த சங்கமாக தேர்வு செய்யப்படுகிறது.
- தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி கேடயம் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
சாத்தான்குளம்:
தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் சாத்தான்குளம் தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் சிறப்பாக செயல்பட்டு கடந்த 1990-ம் ஆண்டு முதல் தொடர்ந்து லாபத்தில் இயங்கி வருகிறது. இச்சங்கம் தற்பொழுது கடன் வழங்குதல், டெபாசிட் சேகரித்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை வைத்து சிறந்த சங்கமாக தேர்வு செய்யப்படுகிறது. மாநில அலுவலக போட்டியில் பெரம்ப லூர் மாவட்டம் முதல் இடத்திலும், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தொடக்க வேளாண்மை சங்கம் 2-ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
இதற்கான விருது வழங்கும் விழா கோவையில் நடைபெற்றது. அப்போது சாத்தான்குளம் சங்க தலைவர் பொன் முருகேசனிடம் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி கேடயம் மற்றும் பரிசுகளை வழங்கினார். விழாவில் வங்கி செயலர் எட்வின் தேவஆசிர்வாதம், பணியாளர்கள் முருகேசன், வக்கீல் கிருபா, குணசேகர் உள்ளிட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சங்க தலைவர் பொன்முருகேசன் தலைமையில் வங்கி செயலர் எட்வின் தேவ ஆசிர்வாதம் உள்ளிட்ட வங்கி அலுவலர்கள் தெற்கு மாவட்ட தி.மு.க செயலரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனை சந்தித்து கேடயத்தை காண்பித்து பாராட்டு பெற்றனர்.
- முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் எட்வர்ட் ராஜதுரை தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
- சாத்தான்குளத்தில் மட்டும் குடிநீர் கட்டணம் கூடுதலாக முன்வைக்கப்பட்டுள்ளதாக எட்வர்ட் ராஜதுரை கூறினார்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் புதிய குடிநீர் இணைப்பு திட்டத்திற்காக வைப்புத் தொகை ரூ. 8,100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உண்ணாவிரதம்
வைப்புத் தொகை கூடுதலாக உள்ளதாகவும் இதனை ரத்து செய்ய வேண்டும் என கோரி முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் எட்வர்ட் ராஜதுரை தலைமையில் சாத்தான்குளம் வாசகசாலை பஜாரில் உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
போலீசார் அனுமதி மறுத்ததால் தடையை மீறி வாசக சாலை பஜாரில் உண்ணாவிரதம் இருந்தனர். இதைத்தொடர்ந்து அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக எட்வர்ட் ராஜதுரை உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது எட்வர்ட் ராஜதுரை போலீசாருடன் வாக்குவாத்த்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
கூடுதல் கட்டணம் புகார்
சாத்தான்குளத்தில் மட்டும் தான் குடிநீர் கட்டணம் கூடுதலாக முன்வைக்கப்பட்டு ள்ளது, உடன்குடி, நாசரேத், தெந்திருப்பேரை பேரூராட்சியில் குடிநீர் வைப்புத் கட்டணம் குறைவாக உள்ளது.
எனவே கூடுதல் குடிநீர் கட்டணம் ரூ. 8 ஆயிரத்தை ரத்து செய்ய கோரி தீர்மானம் நிறைவேற்றி கலெக்டருக்கு அனுப்ப வேண்டும். கட்டணத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் நடத்துவேன் என்றார்.
- கனிமொழி எம்.பி. தனதுபாராளுமன்ற நிதியில் பள்ளியில் 6 வகுப்பறை கட்டிடம் கட்ட ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருந்தார்.
- அடிக்கல் நாட்டு விழாவுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே பெரியதாழை ஆர்.சி தொடக்க பள்ளியில் புதிய கட்டிடம் கட்ட ஊர் மக்கள் கனிமொழி எம்.பி.யிடம் முறையிட்டனர். அதன்படி அவரது பாராளுமன்ற நிதியில் பள்ளியில் 6 வகுப்பறை கட்டிடம் கட்ட ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருந்தார்.
அதன்படி கட்டிடம் கட்டுப்பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்து அதற்கான கல்வெட்டையும் திறந்து வைத்தார்.
தமிழக மீன்வளம், மீன்வர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வரவேற்றார். தொடர்ந்து கனிமொழி எம்.பி., அங்குள்ள பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தார்.
அப்போது சாத்தான்குளம் வட்ட அங்கன்வாடி மைய பணியாளர்கள், வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர், தங்களை தரக்குறைவாக பேசுவதுடன், பணி நிமித்தம் தொடர்பாக டார்சர் செய்வதாகவும் அவரை பணிமாற்றம் செய்ய வேண்டும் என கனிமொழி எம்.பி. மற்றும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் புகார் தெரிவித்தனர். உடனே அவர்கள் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். உங்களுக்கு சரியான அதிகாரி நியமிக்கப்படுவார் என உறுதி அளித்தனர்.
இதில் பெரியதாழை பங்குதந்தை சுசீலன், திருச்செந்தூர் தாசில்தார் புகாரி, சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா, ஒன்றிய ஆணையர் ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பிரம்மசக்தி, சண்முகையா எம்.எல்.ஏ., மாவட்ட ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், முன்னாள் மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம், பெரியதாழை ஊராட்சித் தலைவர் பிரதீபா, சாஸ்தாவிநல்லூர் ஊராட்சி தலைவர் திருக்கல்யாணி, தாமரைமொழி ஊராட்சி தலைவர் சாந்தா, சாத்தான்குளம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபதி உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் , காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- சாததான்குளம் ஒன்றியம் சாஸ்தாவிநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பொத்தகாலன்விளையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிரியல் துறை சார்பாக இயற்கை முறையில் காய்கனி சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி அளிக்கப்பட்டது.
- பயற்சிக்கு தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜெபத்துரை தலைமை தாங்கினார்.
சாத்தான்குளம்:
சாததான்குளம் ஒன்றியம் சாஸ்தாவிநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பொத்தகாலன்விளையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிரியல் துறை சார்பாக இயற்கை முறையில் காய்கனி சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி அளிக்கப்பட்டது.
பயற்சிக்கு தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜெபத்துரை தலைமை தாங்கினார். சாஸ்தாவிநல்லூர் விவசாய நல சங்க செயலர் லூர்து மணி பயிற்சியை தொடங்கி வைத்தார். சாஸ்தாவிநல்லூர் விவசாய நல சங்கத் துணைத் தலைவர் ரவிச்சந்திரன், சங்க செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார், சங்க பொருளாளர் ரூபேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தோட்டக்கலை விஞ்ஞானி வேல்முருகன், இயற்கை விவசாயம் பற்றி சிறப்பு பயிற்சி அளித்தார். உதவி வேளாண்மை அலுவலர் முனீஸ்வரி, பி.எம். கிசான் திட்டத்தைப் பற்றியும், அதை எவ்வாறு பதிவேற்றம் செய்வது குறித்தும் பேசினார். உதவி தோட்டக்கலை அலுவலர் அஜித்குமார் தோட்டக்கலை மானியங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.
இதில் சாஸ்தாவிநல்லூர் விவசாய சங்க செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார், விவசாய நலச் சங்க உறுப்பினர்கள் ராஜ மனோகரன், செல்வஜெகன், ஜஸ்டின், வெலிங்டன், ஜூலியன், ராஜ், பிலவேந்திரன், அலெக்ஸ், பேச்சி, மெர்சி, லிவிங்ஸ்டன். சவரிராயன் உள்ளிட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜெபக்குமார், உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் முருகன், ஜேக்கப் ஆகியோர் செய்திருந்தனர்.
- அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த 3 கிராம் பொட்டு தாலி உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர் திருடிச்சென்றார்.
- 2 கோவில்களிலும் ஒரே நபர் புகுந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள கீழகுளம் கிராமத்தில் முத்தாரம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மர்ம நபர் புகுந்து அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த 3 கிராம் பொட்டு தாலி மற்றும் 2 வெள்ளி கிரீடம் உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்றார்.
இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் கொள்ளை சம்பவம் நடந்த அதே நாளில் அருகில் உள்ள கிராமமான கீழகொம்பகுளத்தில் உள்ள மற்றொரு அம்மன் கோவிலில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
கோவிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிரா காட்சி களை கோவில் நிர்வாகிகள் ஆய்வு செய்தபோது மர்மநபர், கடப்பாரையுடன் கோவிலில் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபடுவதும், கதவை உடைக்க முடியாததால் அந்த நபர் திரும்பி செல்வதும் காமிராவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ காட்சிகள், சாத்தான்குளம் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. ஒரே நாளில் இந்த சம்பவம் நடந்துள்ளதால் 2 கோவில்களிலும் ஒரே நபர் புகுந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே காமிராவில் பதிவான காட்சி அடிப்படையில் கீழகுளம் கிராமத்தில் கோவிலில் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- ஸ்ரீவைகுண்டம் பொன்னங்குறிச்சியில் இருந்து சாத்தான்குளம், உடன்குடி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கிராமங்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
- கிராமங்களுக்கு தண்ணீர் திறந்து விடும் போதெல்லாம் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.
சாத்தான்குளம்:
ஸ்ரீவைகுண்டம் பொன்னங்குறிச்சியில் இருந்து சாத்தான்குளம், உடன்குடி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கிராமங்க ளுக்கு தண்ணீர் விநியோ கிக்கப்பட்டு வருகிறது. தற்போது போதிய மழை இல்லாததால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு குறைந்த அளவே வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
சாத்தான்குளம் அருகே பழங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட சடையன்கிணறு விலக்கு அருகில் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி சாலையோரத்தில் தேங்கி கிடக்கிறது. கிராமங்களுக்கு தண்ணீர் திறந்து விடும் போதெல்லாம் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் சடையன்கிணறு, ஆனந்த புரம், கண்டுகொண்டான் மாணிக்கம், கருவேலம்பாடு, பழங்குளம், செட்டிகுளம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவது பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.
இதனால் கடந்த 4 நாள்களாக குடிநீர் வீணாகி வருவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதனை கவனித்து நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து கிராமங்களுக்கு முறையாக தண்ணீர் வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.