search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Saturday of Puratasi"

    • ஸ்ரீவில்லிபுத்தூர் சீனிவாச பெருமாள் கோவில் புரட்டாசி 2-வது சனிக்கிழமையில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    • மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவார்கள்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தென்திருப்பதி என்று அழைக்கப்படும் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள்கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த வாரம் தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலை ஏறி தரிசனம் செய்தனர்.

    தமிழகத்தின் தென்திருப்பதி என்று அழைக்கப்படும் மலைக்கோவிலான ஸ்ரீவில்லி புத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ விழா விமரிசையாக கொண்டாடபடுகிறது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்வார்கள்.

    புரட்டாசி மாத 4 வார சனிக்கிழமைகளில் 2-வது வார சனிக்கிழமையான இன்று அதிகாலை சீனிவாச பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்று அதை தொடர்ந்து அதிகாலை காலசாந்தி என்னும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    ஆந்திர மாநிலம் திருப்பதி கோவிலுக்கு செல்ல முடியாத பக்தர்கள் அங்கு காணிக்கைகளை வழங்க முடியாதவர்கள் இந்த கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து ஆடு, மாடுகள், விவசாய பொருள்கள், தானிய பொருள்கள் போன்ற வற்றை சீனிவாசபெரு மாளுக்கு காணிக்கையாக வழங்குவார்கள்.

    இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு பஸ் வசதிகள், மருத்துவ வசதிகள், குடிநீர் வசதிகள், கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் டி.எஸ்.பி. சபரிநாதன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டனர். 30-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு காமிராக்கள் மூலம் பக்தர்கள் கண்கா ணிக்கபட்டு வருகி ன்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள காட்டழகர் கோவிலிலும் 2-வது சனிக்கிழமை பிரமோற்சவ விழா நடைபெற்று வருகிறது. அங்கும் திரளான பக்தர்கள் சென்று காட்டழகரை தரிசித்து வருகின்றனர்.

    ×