என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Sayarpuram"
- செபத்தையாபுரம் அம்மன் கோவில் அருகில் ஆர்.ஓ. சிஸ்டம் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைக்கும் பணி தொடக்க விழா பூஜை நடந்தது.
- பேரூராட்சி தலைவர் பாக்கிய லட்சுமி அறவாழி தலைமை தாங்கி பணியை தொடங்கி வைத்தார்
சாயர்புரம்:
சாயர்புரம் பேரூராட்சி 4-வது வார்டு செபத்தையாபுரம் அம்மன் கோவில் அருகில் பேரூராட்சி 15-வது நிதிக்குழு மானியத்தில் ரூ.8 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் ஆர்.ஓ. சிஸ்டம் அமைத்து பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கிடுவதற்கான பணி தொடக்க விழா பூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் பாக்கிய லட்சுமி அறவாழி தலைமை தாங்கி பணியை தொடங்கி வைத்தார்.
சாயர்புரம் பேரூராட்சி செயல் அலுவலர் பாபு, செபத்தையாபுரம் இந்து நாடார் உறவின் முறை தர்மகர்த்தா பால்ராஜ், ஊர் தலைவர் அமிர்தராஜ், சாயர்புரம் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் அறவாழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் ராமமூர்த்தி, பிரவீணா, சுமதி, அமுதா, பிளாட்டினாமேரி, செபத்தையாபுரம் தொழிலதிபர் ஆர்.ஜி.சுதர்சன்ராஜா, பள்ளி கல்வி குழு துணைத் தலைவர் முரளிதரன், ஊர் பிரமுகர்கள் மாதவன், ரத்தினகுமார் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர் நித்தியகல்யாண் உட்பட ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
- அ.தி.மு.க. பூத்கமிட்டி அமைத்தல் குறித்த ஆலோசனை கூட்டம் சாயர்புரத்தில் நடந்தது.
- முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார்.
சாயர்புரம்:
அ.தி.மு.க. ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றியம், சாயர்புரம் பேரூராட்சி இளைஞர், இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகள் ஏற்படுத்துதல், பூத்கமிட்டி அமைத்தல் குறித்த ஆலோ சனை கூட்டம் சாயர்புரத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமை தாங்கினார். இதில் அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ. வுமான ராஜேந்திரன் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆலோ சனைகள் வழங்கினார். முன்னதாக சாயர்புரம் நகர செயலாளர் துரைச்சாமி ராஜா வரவேற்றுப் பேசி னார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் அழகேசன், நகர அவைத்தலைவர் ஜெயராஜ், மாவட்ட விவசாய அணி செயலாளர் சுதர்சன் ராஜா, சிவத்தையாபுரம் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் பால்ராஜ், துணை தலைவர் சரவணக்குமார், ராஜு, ஸ்ரீவைகுண்டம் யூனியன் துணை தலைவர் விஜயன் மற்றும் சாயர்புரம் பேரூராட்சி வார்டு செய லாளர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், மகளிர் அமைப்பினர் மற்றும் நிர்வா கிகள் கலந்து கொண்டனர்.
- நட்டாத்தி இ-சேவை மைய வளாகத்தில் பஞ்சாயத்து தலைவர் சுதாகலா தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
- விவசாயிகளுக்கு இடுபொருட்கள், வேளாண்மை கருவிகள், மகளிர் சுய உதவிக் கடன் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கலெக்டர் பேசினார்.
சாயர்புரம்:
நட்டாத்தி இ-சேவை மைய வளாகத்தில் பஞ்சாயத்து தலைவர் சுதாகலா தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, பஞ்சாயத்து துணை தலைவர் எஸ்.வி.பி.எஸ். பண்டாரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு பார்வையாளராக மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி கலந்து கொண்டு அரசு துறை சார்பில் அமைக்கபட்டிருந்த கண்காட்சியை பார்வையிட்டார்.
தொடர்ந்து பஞ்சாயத்து தூய்மை பணியாளர்களுக்கு மழை கோர்ட் மற்றும் சால்வை கொடுத்து கவுரவபடுத்தினார். மேலும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் தனி நபர் வேலை அடையாள அட்டை, சிறப்பாக செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுவினர்களுக்கு பாராட்டி பரிசு வழங்கினார். பலவேறு அரசு துறை சார்பில் விவசாயிகளுக்கு மரக்கன்று, விவசாயிகளுக்கு இடுபொருட்கள், வேளாண்மை கருவிகள், மருந்து மாத்திரைகள், மகளிர் சுய உதவிக் கடன் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
தொடர்ந்து ஊர் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன், ஏரல் வட்டார மருத்துவ அலுவலர் தினேஷ், ஏரல் தாசில்தார் கைலாச குமாரசாமி, ஆதிதிராவிட நலத்துறை தாசில்தார் கோபால கிருஷ்ணன், சாயர்புரம் ஆர்.ஐ. விஜய் ஆனந்த், திட்ட இயக்குநர் வீரபுத்திரன், மாவட்ட பஞ்சாயத்து உதவி இயக்குநர் உலகநாதன், செயலர் ஜெயஸ்ரீ, திருவை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவராஜன் பானு.ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சிவகலா, ஸ்ரீவை யூனியன் துணை தலைவர் விஜயன், பஞ்சாயத்து முன்னாள் தலைவர் எஸ்.வி.பி.எஸ். ஜெயக்குமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய், பற்றாளர் ஜோசப், வட்டார ஒருங்கிணைப்பாளர் சாம்துரை, திட்ட ஒருங்கிணைப்பாளர் வெள்ளைசாமி, பஞ்சாயத்து உறுப்பினர்கள் அன்னகனி, ஜான்சிராணி, சுப்புலட்சுமி, சரோஜா, கொம்புகாரன் பொட்டல் பண்டாரம், பிரியா, மணிமந்திரம் மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் பஞ்சாயத்து செயலர் முத்துராஜ் நன்றி கூறினார்.
- சாயர்புரம் பேரூராட்சி கூட்டம் தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி தலைமையில் நடந்தது.
- கூட்டத்தில் பேரூராட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
சாயர்புரம்:
சாயர்புரம் பேரூராட்சி கூட்டம் தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி தலைமையில் நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் பாபு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பேரூராட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் துணை தலைவர் பிரியா மேரி, கவுன்சிலர்கள் கண்ணன், எஸ்.வி.பி.எஸ். ஜெயக்குமார், ராமமூர்த்தி, முத்துராஜா, முருகேஸ்வரி, ப்ளாட்டினா மேரி, இந்திரா, ஜெப தங்கம், சுமதி, பிரவீனா, அமுதா, முத்துமாரி, சுகாதார மேற்பார்வையாளர் நித்ய கல்யாண் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- சாயர்புரம் போப் கல்லூரி தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
- நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
சாயர்புரம்:
சாயர்புரம் போப் கல்லூரி தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இந் நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சாந்தி பொன்இந்திரா தலைமை தாங்கி பேசினார்.
தகவல் தொழில்நுட்ப துறை பேராசிரியை ஜெயசுதா வரவேற்றார். தகவல் தொழில்நுட்ப துறை பேராசிரியை சகாய ஹென்சி ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தார். முன்னாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் ஹேமா நன்றி கூறினார். ஜெயராணி நிறைவு ஜெபம் செய்தார்.
- சேர்வைகாரன்மடம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெபக்கனி முகாமை தொடங்கி வைத்தார்.
- முகாமில் பொது மருத்துவம், ரத்த சோகை, காய்ச்சல் உட்பட அனைத்து நோய்களுக்கும் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சாயர்புரம்:
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, தூத்துக்குடி சுகாதார மாவட்டம் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் சாயர்புரம் அருகே உள்ள சேர்வைக்காரன்மடம் டி.என்.டி.டி.ஏ. பள்ளியில் நடந்தது.
சேர்வைகாரன்மடம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெபக்கனி முகாமை தொடங்கி வைத்தார். முன்னாள் தலைவர் ஞானசேகர், காமராஜ் நகர் வார்டு உறுப்பினர் ஜான்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் முடிவைத்தானேந்தல் மருத்துவ அலுவலர் டாக்டர் காளீஸ்வரி, சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் முருகேசன், புதுக்கோட்டை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஹேமலதா ஆகியோர் நோயாளிகளை பரிசோதித்து சிகிச்சை அளித்தனர்.
தூத்துக்குடி வட்டார மருத்துவமில்லா மேற்பார்வை யாளர் மதிவாணன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆறுமுக நயினார் மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி சிறப்பு மருத்துவர்கள், சமுதாய நல செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் பொது மருத்துவம், ரத்த சோகை, விட்டமின் குறைபாடுகள், காய்ச்சல், நீரிழிவு நோய், இறப்பை மற்றும் குடல் நோய், மனநோய், பால் வினை நோய், இதயம், தோல், காது, மூக்கு, தொண்டை, பல், கண் நோய், மகளிர் நலம், மகப்பேறு, குழந்தைகள் நலம் உட்பட அனைத்து நோய்களுக்கும் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, கொழுப்பின் அளவு, இரும்பு சத்து அளவு, சிறுநீரக செயல்பாட்டு சோதனை, கர்ப்பப்பை வாய் புற்று நோய் கண்டறிய பாப் தடவல், இ.சி.ஜி, கர்ப்பிணி பெண்க ளுக்கு ஸ்கேன் பரிசோதனை உட்பட பல்வேறு பரிசோத னைகள் இலவசமாக செய்யப்பட்டன. இந்த முகாமில் சேர்வைக்காரன்மடம் ஊராட்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் ஏராள மானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
- நட்டாத்தி ஊராட்சி செயலர் முத்து ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
- நட்டாத்தியின் தென்புறம் கண்ணான்டி விளை வரை நட்டாத்தி- பட்டாண்டி விளை மெயின் ரோட்டின் ஓரங்களிலும் பனை விதைகள் நடப்பட்டது.
சாயர்புரம்:
சாயர்புரம் அருகே உள்ள நட்டாத்தி பஞ்சா யத்துக்கு உட்பட்ட பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் 1,200 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீவைகுண்டம் தொகுதி செயலாளர் ஜேசுராஜ் தலைமை தாங்கினார். ஏரல் நகர செயலாளர் திரவியம், நகர தலைவர் பாஸ்கர், மாவட்ட தலைவர் சுடலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நட்டாத்தி ஊராட்சி செயலர் முத்து ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நட்டாத்தியின் தென்புறம் கண்ணான்டி விளை வரை நட்டாத்தி- பட்டாண்டி விளை மெயின் ரோட்டின் ஓரங்களிலும் பனை விதைகள் நடப் பட்டது. நிகழ்ச்சியில் ஸ்ரீவை குண்டம் வடக்கு தொகுதி தலைவர் அருண் ஆறுமுகம், தொகுதி பொருளாளர் இஸ்ரவேல், தெற்கு தொகுதி பொறுப் பாளர்கள் ஐகோர்ட் ராஜா, ஐசக், கணேசன். கருங்குளம் ஒன்றிய செயலாளர் சந்தனராஜ், மாவட்ட கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை இணை செயலாளர் பேச்சிராஜா, ஸ்ரீவைகுண்டம் நகர செயலாளர் கோபால், ஒன்றிய செயலாளர்கள் சுடலைக்கண்ணு, சுடலைமுத்து, கருங்குளம் ஒன்றிய துணை தலைவர் சண்முகவேல், ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய வீரத்தமிழர் முன்னணி செயலாளர் காசிபாண்டியன், மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் சேது, ஸ்ரீவைகுண்டம் மத்திய ஒன்றிய இணை செயலாளர் வாசிம், துணை செயலாளர் ஆறுமுகம், சாயர்புரம் நகர இணை செ யலாளர் ஆரோக்கியமணி, ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய வீரத்தமிழர் முன்னணி செயலாளர் சங்கர், சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் சிவராமமூர்த்தி, ஏரல் நகர இணைச் செயலாளர் ஆத்திராஜ், ஏரல் நகர துணைத்தலைவர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி செயலர் ஜெயக்குமார் ரூபன் உள்ளிட்டோர் பேசினர்.
சாயர்புரம்:
சாயர்புரம் போப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தென்கொரியாவிலுள்ள ஐ.என்.சி.ஹச்.இ. என்ற நிறுவனத்திற்கும், தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்தின் கல்லூரிகளான போப் கல்லூரி, சாயர்புரம், நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி மற்றும் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன் ஆரம்ப ஜெபம் செய்தார்.
கல்லூரி முதல்வர் செல்வக்குமார் வரவேற்று பேசினார். திமோத்தி ரவீந்தர் தலைமை உரையாற்றினார். இதனையடுத்து, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தென்கொரியா ஐ.என்.சி.ஹச்.இ. இயக்குனர் கிம், போப் கல்லூரி செயலர், தநீகர் பிரின்ஸ் கிப்சன், நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி செயலாளர் பிரேம்குமார் ராஜாசிங், ஐ.என்.சி.ஹச்.இ. மண்டல ஒருங்கிணைப்பாளர் டேனியல் எழிலரசு, ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
நிகழ்ச்சியில் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி செயலர் ஜெயக்குமார் ரூபன் உள்ளிட்டோர் பேசினர். முடிவில் நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி முதல்வர் ஜவகர் சாமுவேல் நன்றி கூறினார். இம்மானுவேல் வான்ஸ்றக் இறுதி ஜெபம் செய்தார். பேராசிரியர்கள் ஜீவராணி தங்கம், பிரிங்கிள் குயின்ஸ்டா ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். இதில் போப் கல்லூரி வேதியல் துறை உதவி பேராசிரியை கரோலின் டெய்சி, உடற்கல்வி இயக்குனர் ஜோன்ஸ் ராஜன், பேராசிரியர்கள் குட்டி ஜாஸ்கர், சாந்தினி கிரேஸ், ஆசீர், தினகர், கிறிஸ்டோபர், பொன்சாம், மரிய ஜெயோன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பெண்களுக்கான பிரிவில் முதல் 3 இடங்களை காட்டுநாயக்கன்பட்டி மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கனகலட்சுமி, சங்கீதா, மகாலட்சுமி ஆகியோர் பிடித்தனர்.
- போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.
சாயர்புரம்:
சாயர்புரத்தில் தூத்துக்குடி ஈ.சி. பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடந்தது. ஆர்.எஸ். புரத்தில் தொடங்கி சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்த போட்டியில் பள்ளி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
போட்டியினை சரவணராஜா, ராம்குமார் ஆகியோர் கொடியசைக்து தொடங்கி வைத்தனர். பெண்களுக்கான பிரிவில் முதல் 3 இடங்களை காட்டுநாயக்கன்பட்டி மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கனகலட்சுமி, சங்கீதா, மகாலட்சுமி ஆகியோர் பிடித்தனர். ஆண்களுக்கான பிரிவில் முதல் 3 இடங்களை பசுபதி, அஜித்குமார் மற்றும் பார்வதிநாதன் ஆகியோர் பிடித்தனர்.
தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு ஶ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. மாயவன் தலைமை தாங்கி பரிசுகள் வழங்கி பேசினார். முதல் 3 இடங்களை பிடித்த வர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.
முன்னதாக ஈ.சி. பிட்னஸ் பயிற்சியாளர் இம்மானுவேல் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தி னர்களாக தொழிலதிபர்கள் பரமேஸ்வரன், ஜெபக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் செயல் விளக்க காட்சிகளாக போதை இல்லாத வாழ்க்கை வாழ்ந்தால் உடல் வலிமை யுடனும், மன வலிமையுடனும் வாழலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக விழிப்பு ணர்வை ஏற்படுத்தினர்.
மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அனைவரும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ், ட்ராவல் பேக் மற்றும் டி-ஷர்ட் வழங்கப்பட்டது. முடிவில் ஜெபதிலகர் நன்றி கூறினார்.
- சிவத்தையாபுரத்தில் ஆனந்த விநாயகர் கிளப் மற்றும் இளைஞர்கள் இணைந்து நடத்தும் 3 நாட்கள் மாநில அளவிலான மின்னொளி கைப்பந்து போட்டி நடக்கிறது.
- அ.தி.மு.க. தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் கலந்து கொண்டு மதுரை அமெரிக்கன் கல்லூரி- சென்னை வைஷ்ணவா கல்லூரிகளுக்கு இடையான போட்டியினை தொடங்கி வைத்தார்.
சாயர்புரம்:
சாயர்புரம் அருகே சிவத்தையாபுரத்தில் ஆனந்த விநாயகர் கிளப் மற்றும் இளைஞர்கள் இணைந்து நடத்தும் 3 நாட்கள் மாநில அளவிலான மின்னொளி கைப்பந்து போட்டி நடக்கிறது. இந்தப் போட்டியின் 2-வது நாளன்று சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் கலந்து கொண்டு மதுரை அமெரிக்கன் கல்லூரி- சென்னை வைஷ்ணவா கல்லூரிகளுக்கு இடையான போட்டியினை தொடங்கி வைத்தார். சிவத்தையாபுரம் முத்துமாலையம்மன் பள்ளிகள் கல்விக்குழு தலைவர் பரமசிவன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. தெற்கு மாவட்ட அவை தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட கவுன்சிலர் அழகேசன், தெற்கு மாவட்ட விவசாய அணி செயலாளர் சுதர்சன் ராஜா, சாயர்புரம் நகர செயலாளர் துரைசாமி ராஜா,சிவத்தையாபுரம் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் பால்ராஜ், துணைத்தலைவர் சரவணகுமார் ராஜூ, மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், பவுன்சிங், அ.தி.மு.க. வார்டு செயலாளர்கள் பாண்டியன், பார்த்திபன், செல்வ குரு, எட்வர்ட், பட்டுராஜ் மற்றும் ஊர் பிரமுகர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
- சாயர்புரம் போப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் ராகிங் எதிர்ப்பு குழு, மாணவர் படை மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் ராகிங் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- உங்கள் எதிர்காலம் நன்றாக அமையவேண்டும் என்றால் நன்றாக படித்து போட்டிகள் நிறைந்த எதிர்காலத்திற்கு இப்போதே நாம் நம்மை தயார்படுத்தி கொள்ள வேண்டும்.
சாயர்புரம்:
சாயர்புரம் போப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் ராகிங் எதிர்ப்பு குழு, மாணவர் படை மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் ராகிங் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சி க்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) செல்வ குமார் தலைமை தாங்கினார். ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதா, சாயர்புரம் சப்-இன்ஸ்பெக்டர் தேவ சகாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர் சாந்தினி இஸ்ரேல் வரவே ற்றார். இதில் சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்ட ஸ்ரீவைகுண்டம் போலீஸ் டி.எஸ்.பி. மாயவன் பேசிய தாவது:-
பெரும்பாலான பெற்றோர்கள் தங்களால் குடும்ப சூழ்நிலை காரணமாக படிக்காமல் போய்விட்டோம். ஆனால் நமது பிள்ளைகள் படித்து, பெரிய ஆளாக வரவேண்டும் என பல்வேறு கனவுகளோடு உங்களை கல்லூரி வரை படிக்க வைத்துள்ளனர். உங்கள் எதிர்காலம் நன்றாக அமையவேண்டும் என்றால் நன்றாக படித்து போட்டிகள் நிறைந்த எதிர்காலத்திற்கு இப்போதே நாம் நம்மை தயார்படுத்தி கொள்ள வேண்டும். வாழ்க்கையில் எதுவுமே கஷ்டப்படாமல் கிடைத்துவிடாது. அதற்கான முயற்சி களை படித்து கொண்டே இருக்கும் இத்தரு ணத்தில் நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்ல கூடாது. பஸ் படிக்கட்டில் தொங்கி கொண்டு பயணம் செய்ய கூடாது. மாணவிகளை கிண்டல் செய்யக்கூடாது என கேட்டுக் கொண்டார்.
தொட ர்ந்து அனைவரும் ராகிங் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்த னர். நிகழ்ச்சியை ஆங்கில த்துறை மாணவிகள் மெர்சி, ஜெய பிரதிபா ஆகியோர் தொகுத்து வழங்கினர். பொருளியல் துறை பேராசிரியர் ஜானகி மற்றும் சாம் ஆகியோர் நன்றி கூறினார். பேராசிரியர் மெர்லின் சலோமி நிறைவு ஜெபம் செய்தார்.
- முள்ளன்விளையில் நண்பர்கள் குழு சார்பில் மாவட்ட அளவிலான 24-வது மின்னொளி கபடி போட்டி நடந்தது.
- விளையாட்டு போட்டிக்கு பிரபாகர், ராஜேஷ், ஜெயசந்திரன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.
சாயர்புரம்:
சாயர்புரம் அருகே உள்ள முள்ளன்விளையில் நண்பர்கள் குழு சார்பில் மாவட்ட அளவிலான 24-வது மின்னொளி கபடி போட்டி நடந்தது. விழாக்குழு தலைவர் ஜெகன் தலைமை தாங்கினார். கருப்பசாமி கோவில் தர்மகர்த்தா பாலமோகன் முன்னிலை வகித்தார்.
இதில் 86 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதில் முதலிடம் பெற்ற முள்ளன்விளை வெண்ணிலா அணிக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் வெற்றி கோப்பை வழங்கப்பட்டது. இதேபோல் 2-வது இடம் பெற்ற வேம்பார் கடல்புறா அணிக்கு ரூ.20 ஆயிரம் மற்றும் கோப்பையும், 3-ம் இடம்பெற்ற கூட்டாம்புளி கணேசா அணிக்கு ரூ.15 ஆயிரமும், 4-வது இடம் பெற்ற முத்தையாபுரம் நேசம்மாள் அணிக்கு ரூ.10 ஆயிரமும் பரிசு வழங்கப்பட்டது. இந்த விளையாட்டு போட்டிக்கு பிரபாகர், ராஜேஷ், ஜெயசந்திரன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். இவ்விழாவில் முள்ளன்வி ளை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்