என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "sayerpuram"
- சித்தி விநாயகர் கோவில் 20-வது வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
- மகா கணபதி ஹோமம், நவகிரக சாந்தி ஹோமம், விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றுதல் நிகழ்வுகள் நடைபெற்றன.
சாயர்புரம்:
சாயர்புரம் அருகே உள்ள சுப்பிரமணிய புரம் ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் 20-வது வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
இதில்விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாஜ நம்,கும்ப பூஜை,மகா கணபதி ஹோமம், நவகிரக சாந்தி ஹோமம்,தீபாராதனை, சிறப்பு அபிஷேகம், விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றுதல், பிரசாதம் வழங்குதல், திருவிளக்கு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.
விழா ஏற்பாடுகளை சித்தி விநாயகர் கோவில் நிர்வாக பொறுப்பாளர் ஜெயக்குமார் மற்றும் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.
- ரூ.10 லட்சம் மதிப்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தேவையான 2 சிறிய பாலம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
- பேரூராட்சி மன்றத் தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி தலைமை தாங்கினார்.
சாயர்புரம்:
சாயர்புரம் பேரூராட்சியில் உள்ள 6 வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.10 லட்சம் மதிப்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தேவையான 2 சிறிய பாலமும், சோலை புதூர் பகுதியில் புது சுப்பிரமணியபுரம் மயானத்திற்கு செல்லும் வழியில் சிறிய பாலத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்றத் தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் , சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் அறவாழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாயர்புரம் வார்டு கவுன்சிலர் முத்துமாரி, சாயர்புரம் பேரூராட்சி மேற்பார்வையாளர் நித்திய கல்யாண் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் ஆதரவில் செபத்தையாபுரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
- 100-க்கும் அதிகமானோர் முகாமில் பங்கேற்று கண்பரிசோதனை செய்து கொண்டனர்.
சாயர்புரம்:
சாயர்புரம் செபத்தை யாபுரம் லயன்ஸ் சங்கம் மற்றும் பேய்க்குளம் நிலச்சு வான்தார்கள் விவசாயிகள் அபிவிருத்தி சங்கம் இணைந்து டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் ஆதரவில் செபத்தையாபுரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
சாயர்புரம் செபத்தை யாபுரம் லயன்ஸ் சங்க தலைவர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். வட்டாரத் தலைவர் டாக்டர் ஆலயமணி முகாமை தொடங்கி வைத்தார். விவசாய சங்க செயலர் ஜெய பொன்ராஜ் மற்றும் பொருளாளர் கார்த்திக் குணசேகரன் முன்னிலை வகித்தனர். நல்லா சிரியர் ஞானராஜ் மருத்துவ குழுவினரை வரவேற்றார்.
100-க்கும் அதிகமானோர் முகாமில் பங்கேற்று கண்பரிசோதனை செய்து கொண்டனர். மேலும் கண் மருத்துவ சிகிச்சை தேவையுற்ற 10 பேர் மாலை தூத்துக்குடி டாக்டர் அகர்வால் கண் மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்டு கண் சிகிச்சை செய்யப்பட்டு மருந்துகள் மற்றும் கண் கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட் டன. விவசாய சங்க தலைவர் குணசேகரன் மற்றும் செபத் தையாபுரம் ஊர் நலத்த லைவர் லயன் அமிர்தராஜ் ஆகியோர் இணைந்து முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்த னர்.
- சாயர்புரம் அருகே உள்ள நட்டாத்தி ஊராட்சிக்குட்பட்ட பட்டான்டிவிளை கிராமத்தில் பகுதி நேர ரேசன் கடையில் வாரம் ஒரு நாள் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது.
- கூடுதலாக மேலும் ஒருநாள் பொருட்கள் வழங்க வேண்டும் என அப்பகுதியினர் தொடர்ந்து கோரிக்கைவிடுத்து வந்தனர்
சாயர்புரம்:
சாயர்புரம் அருகே உள்ள நட்டாத்தி ஊராட்சிக்குட்பட்ட பட்டான்டிவிளை கிராமத்தில் பகுதி நேர ரேசன் கடையில் வாரம் ஒரு நாள் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது.
மாலைமலரில் செய்தி
இந்நிலையில் கூடுதலாக மேலும் ஒருநாள் பொருட்கள் வழங்க வேண்டும் என அப்பகுதியினர் தொடர்ந்து கோரிக்கைவிடுத்து வந்தனர். இது தொடர்பாக கடந்த 9-ந்தேதி மாலை மலரில் செய்தி வெளியானது.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் வாரத்தில் 2 நாட்கள் ரேசன் பொருட்கள் வழங்க பரிந்துரை செய்தார். அதன்படி தற்போது செவ்வாய், வியாழன் என வாரத்தில் 2 நாட்கள் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அமைச்சருக்கு நன்றி
இதனை சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கித் தலைவர் அறவாழி பொருட்கள் வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு பட்டான்டிவிளை தி.மு.க. கிளை செயலாளர் தளபதி நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தங்கள் கோரிக்கையை நிறைவேற்றியதற்காக பட்டான்டிவிளை ஊர் பொதுமக்கள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனனுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
- சாயர்புரம் அருகே உள்ள சேர்வைகாரன்மடம் பஞ்சாயத்து காமராஜ் நகரில் இளைஞர் மன்றத்தினர் நடத்தும் 4-ம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
- காமராஜ் நகர் இளைஞர் மன்றத்தினர் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
சாயர்புரம்:
சாயர்புரம் அருகே உள்ள சேர்வைகாரன்மடம் பஞ்சாயத்து காமராஜ் நகரில் இளைஞர் மன்றத்தினர் நடத்தும் 4-ம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற அணியினருக்கு சேர்வைக் காரன்மடம் பஞ்சாயத்து தலைவர் ஜெபக்கனி ஞானசேகர் தலைமை தாங்கி கோப்பைகளையும் பரிசுகளையும் வழங்கினார்.
தூத்துக்குடி மாதாநகர் அணிக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரமும், காமராஜ் நகர் அணிக்கு 2-வது பரிசு ரூ. 8 ஆயிரமும், பண்டாரவிளை அணிக்கு 3-வது பரிசு ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டது.
போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்ப ட்டது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஞானசேகர் முன்னி லை வகித்தார். காமராஜ் நகர் இளைஞர் மன்றத்தினர் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
- சாயர்புரம் அருகே உள்ள சிவத்தையாபுரம் கோபாலகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 50).
- சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக கூறப்படுகிறது.
சாயர்புரம்:
சாயர்புரம் அருகே உள்ள சிவத்தையாபுரம் கோபாலகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 50). இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் இரவு 9மணி அளவில் நந்தகோபாலபுரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி உள்ளே இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
இது குறித்து செல்வராஜின் மனைவி வேல்கனி அளித்த புகாரின் பேரில் ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா வழக்குப் பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்