search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SB Inspection"

    • திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சஷாங் சாய் பணியாற்றி வந்தாா்.
    • தாராபுரம் காவல் நிலையத்தில் எஸ்.பி.,சாமிநாதன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    தாராபுரம்:

    திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சஷாங் சாய் பணியாற்றி வந்தாா். அவா் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பி.சாமிநாதன் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றாா்.இந்தநிலையில் தாராபுரம் காவல் நிலையத்தில் எஸ்.பி.,சாமிநாதன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் காவல் நிலையத்தில் உள்ள உதவி ஆய்வாளர்கள், காவலர்க ளிடம் குறைகளை கேட்டறிந்து விசாரித்தார். இந்த ஆய்வின் போது டிஎஸ்பி., கலையரசன், ஆய்வாளர் மணிகண்டன் ,அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் செல்லம் உள்ளிட்டோர் பணியில் இருந்தனர்.

    • இரவு பூங்கோதை குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
    • நள்ளிரவு வீட்டுக்கு முன் புறமாக வந்த மர்ம நபர்கள், கான்கிரீட் தரையின் மீது பெட்ரோல் நிரம்பிய பாட்டில்களை வீசியுள்ளனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே கரைப்பாளையத்தைச் சேர்ந்தவர் பூங்கோதை (வயது 50). விவசாயி.

    பெட்ரோல் குண்டு வீச்சு

    நேற்று முன்தினம் இரவு பூங்கோதை குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு வீட்டுக்கு முன் புறமாக வந்த மர்ம நபர்கள், கான்கிரீட் தரையின் மீது பெட்ரோல் நிரம்பிய பாட்டில்களை வீசியுள்ளனர்.

    மர்ம நபர்கள்

    பாட்டில் உடையும் சத்தம் கேட்டு பூங்கோதை குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தனர். அப்போது அங்கு நின்றிருந்த மர்ம நபர்கள் தப்பி ஓடினர்.

    மர்ம நபர்கள் வீசிய பெட்ரோல் குண்டுகளால் தரையில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக தண்ணீரை ஊற்றி அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    மற்றொரு சம்பவம்

    இதேபோல், அதே பகுதியில் விவசாயி குழந்தைவேல் (52) வீட்டிலும் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் முன்பு பெட்ரோல் நிரப்பிய 2 பாட்டில்கள் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். குழந்தைவேல் வீட்டில் வீசப்பட்ட பெட்ரோல் குண்டு வெடிக்காததால், அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.

    போலீஸ் விசாரணை

    இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீ சாருக்கு, பூங்கோதை மற்றும் குழந்தைவேல் ஆகியோர் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு கலைச்செல்வன், பரமத்திவேலூர் டி.எஸ்.பி. கலையரசன் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது வெடிக்காத பெட்ரோல் குண்டினை போலீசார் கைப்பற்றினர். பெட்ரோல் குண்டுகளை வீசிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொடர் சம்பவம்

    ஜேடர்பாளையம் சரளை மேடு, வடகரையாத்தூர், வி.புதுப்பாளையம், கரைப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவைப்பு சம்பவங்களும், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையடுத்து, ஆங்காங்கே பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டிருந்தும் இச்சம்பவங்களை போலீசாரால் தடுக்க முடியவில்லை.

    சி.பி.சி.ஐ.டி

    மேலும் கரைப்பாளை யத்தில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட இளம்பெண் சாவுக்கு காரணமான உண்மையான குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடிக்க வேண்டும் என கோரி பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் தொடர்ந்து பதட்டம் நீடித்து வருகிறது. 

    ×