search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Scale Stamping Camp"

    • வத்தலகுண்டுவில் தராசு முத்திரை பதிக்கும் முகாம் நடந்தது.
    • இந்த முகாம் 22 -ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    வத்தலகுண்டு:

    வத்தலகுண்டு வில் தராசு முத்திரை பதிக்கும் முகாம் நடந்தது. இதற்கு நிலக்கோட்டை முத்திரை ஆய்வாளர் விஜயராகவன் தலைமை தாங்கினார்.

    வர்த்தக சங்கத் தலைவர் முருகேசன், செயலாளர் பாலசாயிகுமார், பொருளாளர் நிஜாம்கரீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் வியாபாரிகள் கொண்டு வந்த தராசுகளில் முத்திரை பதிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    இந்த முகாம் 22 -ம் தேதி வரை நடைபெற உள்ளது. எனவே வத்தலக்குண்டு, கணவாய்பட்டி, எம். வாடிப்பட்டி, விருவீடு ஆகிய பகுதிகளை சேர்ந்த வணிகர்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தராசு முத்திரை அதிகாரி தெரிவித்தார்.

    ×