என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "School Area"
- பல்வேறு கிராமங்களில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள் மாநில நெடுஞ்சாலையை கடந்து செல்கின்றனர்.
- நெடுஞ்சாலையை ஒட்டி பள்ளி அமைந்துள்ளதால் காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்கள் ரோட்டை கடக்க சிரமப்படுகின்றனர்.
உடுமலை:
உடுமலை பொள்ளாச்சி - தாராபுரம் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி கொங்கல்நகரம் அரசு உயர்நிலைப்பள்ளி, சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உட்பட பள்ளிகள் அமைந்துள்ளது.பல்வேறு கிராமங்களில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள் மாநில நெடுஞ்சாலையை கடந்து செல்கின்றனர்.
அப்போது ரோட்டில் வேகமாக வரும் வாகனங்களால் மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறுகிறது. இப்பிரச்சினைக்கு தீர்வாக பள்ளி மாணவ, மாணவிகள் ரோட்டை கடக்கும் இடத்தில் டிவைடர்கள் வைக்க வலியுறுத்தப்பட்டது. அதன்படி சில ஆண்டுகளுக்கு முன், சோமவாரப்பட்டியில், மாநில நெடுஞ்சாலையில் டிவைடர் வைக்கப்பட்டது. சில மாதங்களில் அங்கிருந்து அகற்றப்பட்ட டிவைடர் மீண்டும் வைக்கப்படவில்லை.
இதே போல் கொங்கல்நகரம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு பொட்டையம்பாளையம், லிங்கம்மாவூர், புதூர் உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் வருகின்றனர்.நெடுஞ்சாலையை ஒட்டி பள்ளி அமைந்துள்ளதால் காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்கள் ரோட்டை கடக்க சிரமப்படுகின்றனர். எனவே குடிமங்கலம் போலீசார், பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் மாணவர்கள் பாதுகாப்புக்காக மாநில நெடுஞ்சாலையில் டிவைடர் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- ரெட்டியார்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 350-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.
- சப்-இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் 2 தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
நெல்லை:
நெல்லையை அடுத்த ரெட்டியார்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் சுமார் 350-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் இருந்த பழமையான கட்டிடம் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு கருதி சமீபத்தில் கலெக்டரின் உத்தரவின் காரணமாக இடித்து அகற்றப்பட்டது.
தற்போது அந்த இடத்தை சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் அமைக்க பள்ளி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அதில் பாதி இடம் அங்கு உள்ள கோவில் நிர்வாகத்தினர் கொடுத்தது. அதனை திருப்பித் தரும்படி அந்த இடத்தின் முன்னாள் உரிமையாளர்கள் கேட்டனர்.
இது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பள்ளி நிர்வாகம் சார்பில் பெருமாள்புரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சப்-இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் அங்கு வந்து 2 தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். அங்கு முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் வந்து பள்ளி நிர்வாகம் மற்றும் ஊர் மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
பள்ளிக்கு கொடுத்த இடத்தை மீண்டும் கேட்பது நியாயம் இல்லை. அந்த இடத்தில் காம்பவுண்டு சுவர் கட்டி மாணவ மாணவிகள் விளையாடுவதற்கு விளையாட்டு மைதானம் அமைக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இதுதொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள பேசி முடிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்