என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "school ground"
- கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தனித்திறன்களை வெளிப்படுத்தும் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
உடுமலை:
உடுமலை கல்வி மாவட்ட அரசு பள்ளிகளில், மாணவர்களின் சிந்தனைத்திறனை மேம்படுத்தும் விதமாக கல்வி இணை செயல்பாடுகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டு, கலைநிகழ்ச்சிகள் நடத்தும் பொருட்டு, பள்ளி வளாகத்தில் உள்ள மைதானங்கள், முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் ராஜேந்திரா ரோடு, அரசு மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானம் பராமரிக்கப்படாமல் புதர் மண்டிக்காணப்படுகிறது. கூடைப்பந்து மைதான தரைதளம் சேதமடைந்துள்ளது. தவிர இரவு நேரத்தில், விஷமிகள் சிலர் அத்துமீறி உள்ளே நுழைந்து மது அருந்துவதாகவும் புகார் எழுந்துள்ளது.
அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் மாணவர்களுக்கு வசதிகள் செய்து தர கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது. இது குறித்து தன்னார்வலர்கள் கூறுகையில், மைதானம் பராமரிப்பின்றி புதர்மண்டிக்கிடப்பதால் மாணவர்கள் விளையாட முடியாமல் அவதிப்படுகின்றனர். மாணவர்களுக்கு, பாடப்புத்தக கல்வியோடு, தனித்திறன்களை வெளிப்படுத்தும் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அவ்வகையில் பள்ளி விளையாட்டு மைதானத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது.
சம்பவத்தன்று இப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த மாணவர்கள் மோதலில் ஈடுபட்டு ஒருவரையொருவர் அடித்து உதைத்து தாக்கிக் கொண்டனர்.
இதையறிந்த தலைமை ஆசிரியர் சிவன்ராஜ், மோதலில் ஈடுபட்ட மாணவர்களிடம் விசாரித்தார். அவர்களின் பெற்றோர்களையும் அழைத்து பேசினார். பின்னர் மாணவர்களின் பெற்றோர்கள் இனிமேல் இதுபோன்று நடக்காது என எழுத்து மூலம் தெரிவித்தனர்.
இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு போலீசாரின் உதவியுடன் உரிய அறிவுரைகள் வழங்கி அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. இருந்தாலும் பிற மாணவர்களுக்கு கட்டுப்பாடும், ஒழுக்கமும் வர வேண்டும் என்பதற்காக பள்ளியின் சார்பில் 12 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மோதலில் ஈடுபட்ட பிளஸ்-2 மாணவர்கள் 12 பேரையும் 10 நாட்களுக்கு இடைநீக்கம்(சஸ்பெண்டு)செய்து தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் உத்தரவிட்டார்.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் கூறுகையில், பிற மாணவர்களுக்கு கட்டுப்பாடும், ஒழுக்கமும் வர வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களது தவறை உணர்ந்துள்ளதால் அடுத்த வாரம் முதல் மீண்டும் வகுப்புக்கு செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றார். #tamilnews