search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "School management"

    • சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.
    • இந்த கூட்டத்தில் பள்ளியின் வளர்ச்சிக்காக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியை செல்வி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் லோகநாதன் முன்னிலை வைத்தார்.

    இந்த கூட்டத்தில் மாணவர்கள் சேர்க்கை மற்றும் இடை நின்றல் கண்காணிப்பு குழு தலை வராக சவுடம்மாள், கற்றல் மேம்பாட்டு குழு தலைவராக சந்தியா, பள்ளி மேலாண்மை குழு தலைவராக சம்ஷாத் பானு, பள்ளி கட்டமைப்பு குழு தலைவராக நாகராஜன் ஆகியோர் தேர்வு செய்ய ப்பட்டனர்.

    ஒவ்வொரு குழுவிலும் 5 பேர் கொண்ட குழுவாக பிரிக்கப்பட்டு உள்ளது.

    இந்த கூட்டத்தில் பள்ளியின் வளர்ச்சிக்காக பள்ளியில் உள்ள கட்டிடம் மற்றும் ஜன்னல் கதவுகள் பழுது பார்த்தல், சத்துணவு மையங்களுக்கு வர்ணம் பூசுதல், மின் இணைப்பு வழங்குதல், சத்துணவு கூட்டத்துக்கு என்று தனியாக தண்ணீர் குழாய் அமைத்தல் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்த தீர்மானம் நகல் சத்தியமங்கலம் நகராட்சி ஆணையரிடம் கொடுக்கப்பட்டது.

    • சென்னிமலை ஒன்றியத்திற்குட்பட்ட குறு வளமையங்களில் உள்ள பள்ளிகளில் செயல்படும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி பள்ளி அளவில் வழங்கப்பட்டது.
    • இதில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், வார்டு உறுப்பினர்கள், கல்வியாளர்கள், சுய உதவி குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னிமலை:

    ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பாக சென்னிமலை ஒன்றியத்திற்குட்பட்ட அம்மாபாளையம், பசுவப்பட்டி, வெள்ளோடு, ஈங்கூர், காமராஜ் நகர் மற்றும் திப்பம்பாளையம் ஆகிய குறு வளமையங்களில் உள்ள அரசு தொடக்கநிலை, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் செயல்படும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி பள்ளி அளவில் வழங்கப்பட்டது.

    பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் திறம்பட செயல்படுதல் நோக்கத்துடன் பள்ளி அளவில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு பள்ளி வளர்ச்சியில் அவர்களின் முக்கிய பங்கு குறித்து விளக்கி கூறப்பட்டது.

    இதில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், வார்டு உறுப்பினர்கள், கல்வியாளர்கள், சுய உதவி குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    பயிற்சியின் போது பள்ளி செயல்பாடுகளை பள்ளி அளவில் திட்டமிட்டு பள்ளி மேம்பாட்டு திட்டம் தயாரித்தல், இலவச கட்டா யக்கல்வி உரிமைச்சட்டம் 2009, குழந்தையின் உரிமைகள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பி னர்களின் பணிகளை அறிய செய்தல், பாலினப் பிரச்சனைகள், தரமான கல்வி, பள்ளி மேலாண்மைக்குழு-பள்ளி நிதியை பயன்படுத்துதல் மற்றும் வழிகாட்டுதல், சமூக தணிக்கை, பள்ளி களில் குடிநீர், சுகாதாரம் மற்றும் சுத்தம், உள்கட்ட மைப்பு பராமரிப்பு பணிகள், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் ஆகிய செயல்பாடுகள் பற்றி கருத்தாய்வு நடைபெற்றது.

    இப்பயிற்சியில் 71 அரசு பள்ளியில் உள்ள உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். மேலும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் கோபிநாதன், நிர்மல்குமார், அம்பிகா, மைதிலி, குமுதா, கஸ்தூரி ஆகியோர் பயிற்சியளித்தனர்.

    இப்பயிற்ச்சியானது சிறப்பாக நடைபெறுவதை மாவட்ட திட்ட அலுவலக ஒருங்கிணைப்பாளர்கள் பாலகிருஷ்ணன், சோலைத்தங்கம் ஆகியோர் பார்வையிட்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

    • 1,333 அரசு, நகராட்சிப்பள்ளிகளில் மறு சீரமைப்பு செய்யப்பட்ட மேலாண்மைக்குழுக்கள் செயல்பாட்டை துவக்கி உள்ளன.
    • 20 பேரை உள்ளடக்கிய மேலாண்மை குழு அமைக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    கல்வி உரிமைச்சட்டம் 2009ன்படி அனைத்து குழந்தைகளுக்கு இலவச கட்டாய கல்வி கிடைக்கும் வகையில் அரசுப்பள்ளிகளில் மேலாண்மை குழுக்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு பள்ளியிலும் பெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மொத்தம் 20 பேரை உள்ளடக்கிய மேலாண்மை குழு அமைக்கப்படுகிறது.அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் 1,333 அரசு, நகராட்சிப்பள்ளிகளில் மறு சீரமைப்பு செய்யப்பட்ட மேலாண்மைக்குழுக்கள் செயல்பாட்டை துவக்கி உள்ளன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இக்குழு உறுப்பினர்கள் 20 பேர் எமிஸ் வலைதளத்தில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    ஓராசிரியர் பள்ளியாக இருந்தால் 19 பேருக்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் எத்தனை பேர் நியமிக்கிறீர்களோ, அத்தனை நபர்களின் விபரங்களையும் எமிஸ் வலைதளத்தில் பதிவிட வேண்டும்.கூட்டம் சார்ந்த செயல்பாடுகள், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை சார்ந்த புகைப்படங்களை செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    திருப்பூர் மாவட்ட பள்ளித்தலைமையாசிரியர்கள் கூறுகையில், மாதம்தோறும் நடக்கும் கூட்டத்தில் மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் வருகைப்பதிவு, வருகை தராத மாணவர்கள் மற்றும் அதற்கான காரணம், கடந்த 6 மாதங்களில் நடந்த கற்றல் முன்னேற்றம், அடுத்த 2 மாதத்திற்கான கற்பித்தல் செயல்திட்டம் ஆகியவை ஆய்வு செய்யப்படும் என்றனர்.

    ×