என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Science Exhibition"
- நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். என்ஜினீயரிங் கல்லூரியில் பள்ளி மாணவர்கள் திறனை ஊக்குவிப்ப தற்காக புதிய கண்டுபிடிப்பு, திட்ட மாதிரிகள் மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
- கல்லூரி அரங்கில் பள்ளி மாணவர்கள் தங்களது வியத்தகு கண்டுபிடிப்புகளையும், திட்டங்களையும் காட்சிபடுத்தினர்.
நெல்லை:
நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். என்ஜினீயரிங் கல்லூரியில் பள்ளி மாணவர்கள் திறனை ஊக்குவிப்ப தற்காக புதிய கண்டுபிடிப்பு, திட்ட மாதிரிகள் மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக மத்திய அரசின் சிறு, குறு தொழில் துறை இணை இயக்குநர் சிமியோன் (நெல்லை-மதுரை) டாடா பவர்-எனர்ஜி நிறுவன தலைமை மனிதவள மேம்பாட்டு அதிகாரி அனுபாமா ரட்டா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்.
இதனையடுத்து பொதுமேலாளர் ஜெயக்குமார், இயக்குநர் (மாணவர் சேர்க்கை) ஜான்கென்னடி ஆகியோர் மாணவர்கள் திறனை ஊக்குவிக்கும் வகையில் பேசினர். உதவி பேராசிரியர் சதீஷ் குமார் நன்றி கூறினார்.இதனையடுத்து, கல்லூரி அரங்கில் பள்ளி மாணவர்கள் தங்களது வியத்தகு கண்டுபிடிப்புகளையும், திட்டங்களையும் காட்சிபடுத்தினர். அவற்றின் செயல்பாடுகளை பற்றி பார்வையாளர்களிடம் விளக்கி கூறினர். இந்த கண்காட்சியில் இடம் பெற்ற சிறந்த படைப்புகள், கண்டு பிடிப்புகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கண்காட்சியில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில், பொது மேலாளர் கிருஷ்ணகுமார், டாடா தொழில்நுட்ப தலைமை அதிகாரி ஸ்டீபன், தொழில்முனைவோர் துறை இயக்குநர் பூபாலராயன், அப்ளைய்ட் ஆய்வக பொறுப்பா ளர் பேரா சிரியர் லட்சுமிநாராயணன், ஐ.டி. துறை தலைவர் சஜிலின் ரோலட், பேராசிரியர் டேவிட் ஐ லிங் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை வளாக மேலாளர் பேராசிரியர் சகாரியா கேப்ரியல் செய்திருந்தார்.
- கண்காட்சியில் பல்வேறு பள்ளியில் பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- மாணவர்கள் சி. கிருஷ்ணா மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் 3-ம் இடத்தை பிடித்து சாதனை படைத்தனர்.
உடன்குடி:
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நெகிழிப்பை கழிவுகளை மேம்படுத்தும் நுணுக்க திறன் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில் பல்வேறு பள்ளியில் பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர். தொழில்நுட்ப திறனைப் பயன்படுத்தி நெகிழிக் கழிவுகளை எரிப்பதின் மூலம் மின்சாரம், தார்ச்சாலை போடுவது குறித்த செயல்பாடுகள் பற்றி மாணவர்கள் செயல் விளக்கம் மூலம் காட்சிப்படுத்தினர்.
இதில் தண்டுபத்து அனிதா குமரன் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சி. கிருஷ்ணா மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்குபெற்று 3-ம் இடத்தை பிடித்து சாதனை படைத்தனர். இந்த மாணவர்களை பள்ளி ஆலோசகர் பேராசிரியர் தி. ஆழ்வார், முதல்வர் சோ. மீனா, நிர்வாக அதிகாரி கண்ணபிரான், துணை முதல்வர் சாந்தி ஜெயஸ்ரீ மற்றும் பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
- திருச்செந்தூர் வேளாண் துணை இயக்குனர் வெங்கடசுப்பிரமணியன் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
- இக்கண்காட்சி சமுதாயத்தில் திணை உணவு சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அமைந்திருந்தது.
உடன்குடி:
உடன்குடி சல்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி சயின்ஸ் எக்ஸ்போ-2023 சர்வதேச திணை ஆண்டு என்னும் தலைப்பில் நடந்தது. பள்ளி நிறுவனர் ஹசன் அப்துல் காதர் தேசியக்கொடியேற்றினார். பள்ளி தாளாளர் ரியாசுதீன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் சார்லஸ் ஸ்வீட்லி வரவேற்றார். திருச்செந்தூர் வேளாண் துணை இயக்குனர் வெங்கடசுப்பிரமணியன் கண்காட்சியை தொடங்கி வைத்தார். உடன்குடி வட்டார கல்வி அலுவலர் ஜெயவதி ரத்னாவதி கலந்து கொண்டு பேசினார். கண்காட்சியை பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு பார்வையிட்டனர். இக்கண்காட்சி சமுதாயத்தில் திணை உணவு சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அமைந்திருந்தது.
- செயின்ட் ஜோசப் பெண்கள் கல்லூரியில் நடந்த அறிவியல் கண்காட்சி விழாவில் கலந்துகொண்டனர்.
- பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி பரிசுகளை வழங்கினார்
திருப்பூர் :
திருப்பூர் கூலிபாளையம் விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் செயின்ட் ஜோசப் பெண்கள் கல்லூரியில் நடந்த அறிவியல் கண்காட்சி விழாவில் கலந்துகொண்டு தங்களது அறிவியல் படைப்புகளை காட்சிக்கு வைத்தனர். இதில் விகாஸ் வித்யாலயா பள்ளி மாணவிகள் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்றனர். பரிசு பெற்ற மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி பரிசுகளை வழங்கினார்.
விழாவில் செயலாளர் ராமசாமி மாதேஸ்வரன், துணை செயலாளர் சிவப்பிரியா மாதேஸ்வரன், பள்ளியின் முதல்வர் அனிதா ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
- தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு கண்காட்சி நடைபெற்றது.
- மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
திருப்பூர் :
தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு திருப்பூர் தி பிரண்ட்லைன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தேசிய குழந்தைகள் அறிவியல் காங்கிரசின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ. ஈஸ்வரன் , தி பிரண்ட்லைன் பள்ளி தாளாளர் டாக்டர் கே.சிவசாமி மற்றும் இணை செயலாளர் வைஷ்ணவி நந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்ட அறிவியல் கண்காட்சியை பார்வையிட்டு சிறந்த அறிவியல் படைப்புகளை தேர்வு செய்து மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
கண்காட்சியில் மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தி அசத்தினர். கண்காட்சியில் கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியிலிருந்து ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பங்கேற்று ட்ரோன் மற்றும் ரோபோடிக்ஸ் காட்சிப்படுத்தி மாணவர்களை உற்சாகப்படுத்தினர். மேலும் பரிசளிப்பு விழாவில் பள்ளியின் இணைச்செயலாளர் வைஷ்ணவி நந்தன் மற்றும் பள்ளியின் முதல்வர் வசந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- இளம் விஞ்ஞானிகள் அறிவியல் கண்காட்சி மசூதைக்கா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் மாணவர்கள் பல்வேறு அறிவியல் செய்முறை விளக்கத்தை செய்து காண்பித்தனர்
கடையநல்லூர்:
கடையநல்லூர் அரசு உதவி பெறும் மசூதைக்கா மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகள் பல்வேறு கண்டுபிடிப்புகளை செய்து காண்பித்தனர். இதற்கான இளம் விஞ்ஞானிகள் அறிவியல் கண்காட்சி அரங்குகள் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் மவுலவி, ஹாபீஸ், ஹஸன் மக்தும் சாஹிபு தலைமை தாங்கினார். நைனா முஹம்மத் பெரிய குத்துபா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் வாஹித் சாஹிப், கடையநல்லூர் நகர மன்ற உறுப்பினர் முகமது அலி, பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர்கள் முகமது அனிபா, முகமது அலி, முகமது புகாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் முகம்மது உசேன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கடையநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் சவுந்தர பாண்டியன் மற்றும் வனவர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு இளம் விஞ்ஞானிகளின் கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்தனர்.
அப்போது மாணவ- மாணவிகளின் பல்வேறு அரிய வகை கண்டுபிடிப்புகளை பார்த்து பாராட்டினார். நிகழ்ச்சியில் முன்னாள் ஆசிரியர்கள் செய்யது அன்பியா, பீர் முகமது, அமானுல்லா, அப்துல் காதர், காஜா மைதீன் உட்பட பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளும் பல்வேறு அறிவியல் செய்முறை விளக்கத்தை செய்து காண்பித்தனர். அவர்களை இளம் விஞ்ஞானியாக உருவாக்குவதற்கான அத்தனை முயற்சிகளையும் முன்னெடுத்து அவர்களின் திறமைகளை ஊக்குவிக்க மசூதைக்க மேல்நிலைப் பள்ளி நிர்வாகம் தயாராக உள்ளதாக பள்ளியின் தாளாளர் ஹசன் மக்தும் தெரிவித்தார்.
மாணவர்கள் நாங்கள் இளம் விஞ்ஞானிகளாக உருவாகுவோம். எங்களுடைய அறிவுத்திறமையை மேம்படுத்தி, எங்களுடைய சிந்தனையை மேம்படுத்தி, நாங்கள் உறுதியாக இளம் விஞ்ஞானிகளாக வளருவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரிய பெருமக்கள் செய்தனர்.
இந்த நிகழ்ச்சி நடைபெறுகின்ற பொழுது ஏவுகணை, ராக்கெட் உட்பட பல்வேறு அறிவியல் சோதனைகளை மாணவர்கள் செய்து காண்பித்தனர். நிகழ்ச்சி இறுதியில் உதவி தலைமை ஆசிரியர் சிக்கந்தா ரஹ்மான் நன்றி கூறினார்.
- நெல்லை டவுன் லிட்டில் பிளவர் மாடல் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
- கண்காட்சியில் மாணவர்கள் பல்வேறு தலைப்புகளில் படைப்புகளை காட்சி படுத்தியிருந்தனர்.
நெல்லை:
நெல்லை டவுன் லிட்டில் பிளவர் மாடல் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் மரியசூசை, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட அறிவியல் மைய நிர்வாகி குமார் ஆகியோர் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
கண்காட்சியில் மாணவர்கள் பல்வேறு தலைப்புகளில் படைப்புகளை காட்சி படுத்தியிருந்தனர். இதனை சேவியர் பொறியியல் கல்லூரி, ஐன்ஸ்டீன் கல்லூரி விரிவுரையாளர்கள் மதிப்பீடு செய்தனர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு மாணவர்களின் படைப்பு களை பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் மரியசூசை செய்திருந்தார்.
- டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு வியக்கும் விஞ்ஞானம் 2022 எனும் தலைப்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
- மாணவர் மொத்தம் 289 பேர் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என முப்பாடப்பிரிவுகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி ஸ்பிக் நகர் மேல்நிலைப்பள்ளியில் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு வியக்கும் விஞ்ஞானம் 2022 எனும் தலைப்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. விழாவினை ஸ்பிக் மற்றும் கிரீன் ஸ்டாரின் பொது மேலாளர் செந்தில் நாயகம் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். விழாவில் பள்ளி செயலர் பிரேம் சுந்தர், பள்ளி தலைமை ஆசிரியர் பாபு ராதாகிருஷ்ணன்,ஸ்பிக் நகர் ரோட்டரி தலைவர் அருள் ஜெயக்குமார்,செயலாளர் சரவணக்குமார், ரோட்டரி உறுப்பினர்கள் பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.
விழாவின்போது மாணவர் மொத்தம் 289 பேர் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என முப்பாடப்பிரிவுகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். 10 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் விளக்க காட்சியின் மூலம் எதிர்கால அறிஞர்களாக மாறி விளக்கம் அளித்து வியப்படையச் செய்தனர்.மேலும் பல்வேறு மன்றத்தின் சார்பாக திடக்கழிவு மேலாண்மை எனும் தலைப்பில் தங்களது விஞ்ஞான அறிவை பயன்படுத்தினர். இது அனைவரையும் கவரும் விதமாக இருந்தது. இவற்றுடன் பல்வேறு ஓவியங்களை வரைந்து மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
- தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் சாலையில் செயல்பட்டு வரும் ஜான்போஸ்கோ மெட்ரிக் பள்ளியில் பொன்விழா அறிவியில் கண்காட்சி நடைபெற்றது
- இந்த அறிவியல் கண்காட்சியை பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் சாலையில் செயல்பட்டு வரும் ஜான்போஸ்கோ மெட்ரிக் பள்ளியில் பொன்விழா அறிவியில் கண்காட்சி நடைபெற்றது. இலக்குமிலை ஆலை மெட்ரிக் பள்ளி முதல்வர் கார்த்திகேயன் கண்காட்சியை தொடங்கி வைத்தார். உண்ணாமலை பொறியியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு, இயற்கை காற்றோட்டம் மற்றும் பொறியியல் துறை குறித்து எடுத்துரைத்தனர்.
இந்த அறிவியல் கண்காட்சியில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவ- மாணவிகள் பங்கேற்று சுமார் 600 படைப்புகளை வைத்து இருந்தனர். இயற்கை முதல் இன்றைய நவீன உலகில் மனித செயல்பாடுகளை குறைக்கும் கருவிகள் என பல்வேறு தலைப்புகளில் மாணவர்களின் கை வண்ணத்தில் உருவாக்கபட்ட படைப்புகள் கண்காட்சியில் இடம் பெற்று இருந்தன.
மேலும் படைப்புகள் வைத்திருந்த மாணவர்கள் அதற்கான விளக்கத்தினை வழங்கினர். இந்த அறிவியல் கண்காட்சியை பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர். இது போன்ற அறிவியல் கண்காட்சி தங்களுக்கு ஊக்கமாக இருப்பதாகவும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க தங்களுக்கு உத்வேகம் அளிப்பதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை, புதுடெல்லியில் உள்ள அறிவியல் தொழில்நுட்பத்துறை மற்றும் சென்னை அறிவியல் தொழில்நுட்ப மையம் ஆகியவை சார்பில் 2018-2019-ம் கல்வி ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான அறிவியல் முறையில் புதிய கண்டுபிடிப்புகளின் கண்காட்சி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி நோக்கத்திற்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை பெரம்பலூரில் உள்ள தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. கண்காட்சியை முதன்மைக்கல்வி அதிகாரி அருளரங்கன் தொடங்கி வைத்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் வரவேற்றார். இதில் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகளின் 27 படைப்புகள் இடம்பெற்றன.
இதில் திருச்சி அண்ணா தேசிய அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்தை சேர்ந்த அலுவலர் ஜெயபால், சென்னை அறிவியல் தொழில்நுட்ப மையத் சேர்ந்த கிறிஸ் மேத்யூ ஆகியோர் உற்றுநோக்கு அலுவலர்களாக பணியாற்றினர். மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரி பேராசிரியர் குமணன், இயற்பியல் பேராசிரியர், தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வராஜ் ஆகியோர் மதிப்பீட்டாளர்களாக செயல்பட்டனர். இதில் துறைமங்கலம், டி.இ.எல்.சி. நடுநிலைப்பள்ளியின் 6-ம் வகுப்பு மாணவி ஜெயப்பிரியாவின் படைப்பான கரும்பில் ஒரு பரு கருணை சாகுபடி முறையின் காட்சி அரங்கு மாவட்ட அளவில் முதல் இடத்தை பெற்றது. அழகாபுரி ஆர்.சி. ஆரோக்கிய அன்னை நடுநிலைப்பள்ளியின் 8-ம் வகுப்பு மாணவன் தீபக்ராஜூவின் உயிரி ஆற்றல் என்ற படைப்பும், என்.புதூர் நடுநிலைப்பள்ளியின் 8-ம் வகுப்பு மாணவன் சந்தோஷம் உருவாக்கிய காற்று மாசுபாடு என்ற படைப்பும் 2-வது இடத்தை பிடித்தன.
நூத்தப்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி ஜெயபாரதியின் படைப்பான மண்புழு உரம் காட்சி அரங்கு, விஜயபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் 7-ம் வகுப்பு மாணவன் ஜெகன்ராஜீவின் உயிரி நெகிழி என்ற படைப்பு, பிரம்மதேசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் 8-ம் வகுப்பு மாணவி கவுசிகாவின் வாகன பாதுகாப்பு படைப்பு ஆகியவை 3-ம் இடம் பிடித்தன.
தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுவழங்கப்பட்டது. இக்கண் காட்சியில் முதல் மற்றும் 2-வது இடங்களில் வெற்றி பெற்றுள்ள மாணவர்கள் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் கலந்துக் கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஈரோடு மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த கண்காட்சி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்காக நடத்தப்பட்டது. இதில் உணவு, பொருட்கள், உலகில் உள்ள உயிரினங்கள், நகரும் பொருட்களும் பொதுமக்களும், வேலை, இயற்கை ஆதாரங்கள், இயற்கை நிகழ்வுகள், கணிதம் ஆகிய 8 தலைப்புகளில் கண்காட்சி நடந்தது.
இந்த கண்காட்சியில் 112 அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மொத்தம் 267 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு தங்களது படைப்புகளை வைத்திருந்தனர். அதில் சிறந்த கண்டுபிடிப்புகளை நடுவர் குழுவினர் தேர்வு செய்தனர்.
ஒவ்வொரு பிரிவுகளின் கீழ் முதல் 3 சிறந்த கண்டுபிடிப்புகள் தேர்வு செய்யப்பட்டன. அதில் முதல் பரிசாக தலா ரூ.1,500, 2-வது பரிசாக தலா ரூ.1,000, 3-வது பரிசாக தலா ரூ.500 என மொத்தம் 24 மாணவ-மாணவிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
இதேபோல் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாவட்ட அளவிலான வினாடி- வினா போட்டி ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் நடைபெற்றது. இதில் முதல் இடம் பெற்ற மாணவ- மாணவிகள் கோவை மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர்.
பெரம்பலூரில் பள்ளிக்கல்வித்துறை மற்்றும் மத்திய அரசின் கல்வி திட்டம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல், கணிதம், அறிவியல் கண்காட்சி தந்தை ரோவர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி தலைமை தாங்கி அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்து காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.
இதில் தானியங்கி சிக்னல், ராக்கெட் தொழில்நுட்பம், கழிவுநீர் சுத்திகரிப்பு, ஆக்வா தொழில்நுட்பத்தில் பயிர்சாகுபடி மற்றும் மீன்வளர்ப்பு, மருத்துவகுணங்கள் கொண்ட தாவரங்கள், தானியங்கள், வேதிவினைகள், ஆர்க்கிமிடிஸ் கோட்பாடு, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு, காடுகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து ஏறத்தாழ 500 படைப்புகள் அமைக்கப்பட் டிருந்தன. இதில் இப்பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவர்கள் அஜீத்-முகிலன் ஹைடிராலிக் கருவிகளை கொண்டு உருவாக்கிய நடமாடும் நாற்காலி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து பாராட்டுகளை பெற்றது.
கண்காட்சியில் முதன்மை கல்வி அதிகாரி அருள் அரங்கன், பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், மாவட்ட கல்வி அதிகாரிகள் அம்பிகாபதி, செந்தமிழ்ச்செல்வி, தந்தை ரோவர் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு நிறுவனங்களின் தலைவர் வரதராஜன், பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ் மற்றும் ஆசிரியர்கள், நடுநிலை, உயர்நிலை, மேல் நிலைப்பள்ளிகளின் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்