search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை எப்.எக்ஸ். என்ஜினீயரிங் கல்லூரியில் பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்காட்சி
    X

    வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் சான்றிதழ்களுடன் உள்ளதை படத்தில் காணலாம். 

    நெல்லை எப்.எக்ஸ். என்ஜினீயரிங் கல்லூரியில் பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்காட்சி

    • நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். என்ஜினீயரிங் கல்லூரியில் பள்ளி மாணவர்கள் திறனை ஊக்குவிப்ப தற்காக புதிய கண்டுபிடிப்பு, திட்ட மாதிரிகள் மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
    • கல்லூரி அரங்கில் பள்ளி மாணவர்கள் தங்களது வியத்தகு கண்டுபிடிப்புகளையும், திட்டங்களையும் காட்சிபடுத்தினர்.

    நெல்லை:

    நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். என்ஜினீயரிங் கல்லூரியில் பள்ளி மாணவர்கள் திறனை ஊக்குவிப்ப தற்காக புதிய கண்டுபிடிப்பு, திட்ட மாதிரிகள் மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக மத்திய அரசின் சிறு, குறு தொழில் துறை இணை இயக்குநர் சிமியோன் (நெல்லை-மதுரை) டாடா பவர்-எனர்ஜி நிறுவன தலைமை மனிதவள மேம்பாட்டு அதிகாரி அனுபாமா ரட்டா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்.

    இதனையடுத்து பொதுமேலாளர் ஜெயக்குமார், இயக்குநர் (மாணவர் சேர்க்கை) ஜான்கென்னடி ஆகியோர் மாணவர்கள் திறனை ஊக்குவிக்கும் வகையில் பேசினர். உதவி பேராசிரியர் சதீஷ் குமார் நன்றி கூறினார்.இதனையடுத்து, கல்லூரி அரங்கில் பள்ளி மாணவர்கள் தங்களது வியத்தகு கண்டுபிடிப்புகளையும், திட்டங்களையும் காட்சிபடுத்தினர். அவற்றின் செயல்பாடுகளை பற்றி பார்வையாளர்களிடம் விளக்கி கூறினர். இந்த கண்காட்சியில் இடம் பெற்ற சிறந்த படைப்புகள், கண்டு பிடிப்புகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    கண்காட்சியில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில், பொது மேலாளர் கிருஷ்ணகுமார், டாடா தொழில்நுட்ப தலைமை அதிகாரி ஸ்டீபன், தொழில்முனைவோர் துறை இயக்குநர் பூபாலராயன், அப்ளைய்ட் ஆய்வக பொறுப்பா ளர் பேரா சிரியர் லட்சுமிநாராயணன், ஐ.டி. துறை தலைவர் சஜிலின் ரோலட், பேராசிரியர் டேவிட் ஐ லிங் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை வளாக மேலாளர் பேராசிரியர் சகாரியா கேப்ரியல் செய்திருந்தார்.

    Next Story
    ×