என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Scott Boland"

    • 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஸ்காட் போலண்ட் 28 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
    • இரு அணிகளும் சம பலத்துடன் திகழ்வதால் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை ( புதன் கிழமை) தொடங்கி 11-ந் தேதி வரை நடக்கிறது. ஐ.சி.சி. கோப்பையை கைப்பற்ற இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இரு அணிகளும் சம பலத்துடன் திகழ்வதால் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஸ்காட் போலண்ட் ஆடும் லெவனில் இருப்பார் என அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.

    7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஸ்காட் போலண்ட் 28 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 

    • நிதிஷ் குமார் ரெட்டி- வாஷிங்டன் சுந்தர் ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 127 ரன்கள் குவித்தது.
    • இந்த ஜோடி ஆஸ்திரேலியாவின் முன்னிலையை 116 ரன்னாக குறைத்துள்ளது.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடி ஆஸ்திரேலியா 474 ரன்கள் குவித்தது.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா 221 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் நிதிஷ் குமார் ரெட்டியுடன் ஜோடி சேர்ந்து வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக விளையாடினார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி 127 ரன்கள் குவித்தது. வாஷிங்டன் சுந்தர் 50 ரன்னில் ஆட்டமிழந்தார். நிதிஷ் குமார் ரெட்டி சதம் விளாசி 105 ரன்னுடனுன் களத்தில் உள்ளார்.

    தற்போது வரை ஆஸ்திரேலியா 116 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளை சிராஜை வைத்துக் கொண்டு நிதிஷ் குமார் ரெட்டி எவ்வளவு ரன் விளாசினார் என்பது தெரியவில்லை.

    இந்த நிலையில் நாங்கள் வலுவான நிலையில் உள்ளோம் என ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் போலண்ட் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து போலண்ட் கூறுகையில் "நாங்கள் 116 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளோம். நாங்கள் மிகவும் வலுவான நிலையில் உள்ளோம். உண்மையிலேயே இன்னும் சற்று கூடுதல் சிறப்பாக இருந்திருக்கனும். ஆனால், டெஸ்ட் போட்டியில் இப்படித்தான் ஏற்றம் இறக்கம் இருக்கும் என நினைக்கிறேன்.

    நாளை காலை விரைவாக ஒரு விக்கெட்டை வீழ்த்தி, சிறப்பான முன்னிலை பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அதன்பிறகு ஆட்டம் எப்படி செல்கிறது என பார்க்க வேண்டும்" என்றார்.

    • விராட் கோலி எப்பவும் போல அவுட் சைடு ஆப் ஸ்டம்ப் திசையில் அவுட் ஆனார்.
    • ஆஸ்திரேலிய தரப்பில் போலண்ட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 'பார்டர்- கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் 4 போட்டிகள் முடிவில் 2-1 என ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.

    இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 185 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 181 ரன்னில் சுருண்டது. இதன்மூலம் 4 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது.

    இந்த இன்னிங்சிலும் இந்திய அணியின் பேட்டிங் சொதப்பலாக இருந்தது. தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல் களமிறங்கினர். பொறுமையாக விளையாடிய கேஎல் ராகுல் திடீரென அதிரடியாக விளையாட முயற்சித்தார். இதனால் அவர் 13 ரன்னில் அவுட் ஆனார்.

    போலண்ட் பந்து வீச்சில் திணறி வந்த ஜெய்ஸ்வால் அவர் ஓவரிலேயே போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த சுப்கில் அதிரடியாக விளையாட முயற்சித்தார். வெளியில் சென்ற பந்தை அடிக்க முயற்சித்தார். இப்படி அடிக்கடி அதிரடியாக விளையாட முயன்றார். ஆஸ்திரேலியாவின் அறிமுக வீரர் பந்தை இறங்கி வந்த அடிக்க முயற்சித்த போது கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    அடுத்த சிறிது நேரத்தில் விராட் கோலி எப்பவும் போல அவுட் சைடு ஆப் ஸ்டம்ப் திசையில் சென்ற பந்தை அடிக்க முயற்சித்து 6 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட் தான் சந்தித்த முதல் பந்தையே சிக்சராக மாற்றினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடி பண்ட் சிக்சர் அடித்து (29 பந்தில்) அரை சதம் கடந்தார். அவர் 61 ரன்கள் எடுத்த நிலையில் பேட் கம்மின்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த நிதிஷ் ரெட்டி 4 ரன்னில் வெளியேறினார். இதனால் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய தரப்பில் போலண்ட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • 2-வது 3-வது இடங்கள் முறையே ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ், தென் ஆப்பிரிக்காவின் ரபாடா உள்ளனர்.
    • டாப் 10-ல் மற்றொரு இந்திய வீரரான ஜடேஜா 9-வது இடத்தில் உள்ளார்.

    ஆண்கள் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில் டெஸ்ட் பந்து வீச்சாளருக்கான தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். 2-வது 3-வது இடங்கள் முறையே ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ், தென் ஆப்பிரிக்காவின் ரபாடா உள்ளனர்.

    இந்த வரிசையில் 29 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தை ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான ஸ்காட் போலண்ட் பிடித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் 3 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிரடி காட்டியிருந்தார்.

    டாப் 10-ல் மற்றொரு இந்திய வீரரான ஜடேஜா மட்டுமே உள்ளார். அவர் 1 இடம் முன்னேறி 9-வது இடத்தில் உள்ளார்.

    ×