என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sea turtle"

    • ஆண்டுதோறும் 100-க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் வந்து முட்டையிட்டு செல்வது வழக்கம்.
    • கடல் ஆமைகள் கடலின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிப்பதாக ஆராய்ச்சியா ளர்களும் கூறுகின்றனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடற்கரைப் பகுதி உள்ளது. இப்பகுதிக்கு ஆண்டுதோறும் 100-க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் வந்து முட்டையிட்டு செல்வது வழக்கம். ஆமை முட்டை களை வனத்துறையினர் பாதுகாப்பாக எடுத்து அந்த முட்டைகள் எல்லாம் ஆமைக்குஞ்சுகளாக மாறியவுடன் அவற்றை பாதுகாப்பாக கடலில் விடுகின்றனர். கடல் ஆமைகள் கடலின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிப்பதாக ஆராய்ச்சியா ளர்களும் கூறுகின்றனர். 

    இதன் காரணமாக தான் இந்த ஆமை இனங்களை அழியாமல் பாதுகாக்க அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்நிலையில் தற்போது ஆமைகளின் இனப்பெருக்க காலம் என்பதால் முட்டையிட நேற்று இரவு சுமார் 50 கிலோ எடையுள்ள ஒரு கடல் ஆமை தீர்த்தவாரி கடற்கரை பகுதிக்கு வந்தது. இதனையடுத்து இந்த ஆமை குழி தோண்டி முட்டை இட சென்றது.

    அப்போது எதிர்பாராத விதமாக மர்மமான முறையில் அந்த ஆமை இறந்து கிடந்தது. கடல் ஆமை அருகில் முட்டையும் சிதறி கிடந்தது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரி வித்தனர். தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த ஆமையை மீட்டு பரிசோதனை செய்து வருகின்றனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆமை யாரேனும் அடித்து கொன்ற னரா? அல்லது படகு மோதி இறந்ததா? அல்லது நாய்கள் அதை கடித்து விட்டதா என்பது ஆமையை உடற்கூறு ஆய்வு செய்யும் போது தான் தெரியவரும் என்று சம்பந்த ப்பட்ட அதிகாரிகள் கூறுகி ன்றனர்.

    • ஆழ்கடலில் வசிக்க கூடிய ஆலிவ் ரெட்லி ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக வந்து முட்டை இட்டு செல்கின்றன.
    • 50கிலோ எடைகொண்ட மீன்பிடி படகுகள் மற்றும் கப்பல்களில் சிக்கி அடிபட்டு காயம் அடைந்து இறந்து விடுகின்றன.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் அடுத்த நரம்பை புதுக்குப்பம் உள்ளிட்ட கடற்கரை யோர பகுதியில் தற்போது ஆழ்கடலில் வசிக்க கூடிய ஆலிவ் ரெட்லி ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக வந்து முட்டை இட்டு செல்கின்றன.

    அவ்வாறு கடற்கரையை நோக்கி வரும் ஆமைகளில் ஏராளமான ஆமைகள் 50கிலோ எடைகொண்ட மீன்பிடி படகுகள் மற்றும் கப்பல்களில் சிக்கி அடிபட்டு காயம் அடைந்து இறந்து விடுகின்றன.

    இந்நிலையில் கிருமாம்பாக்கம் போலீசார் கலைமணி, மணிவண்ணன் ஆகியோர் மூ.புதுக்குப்பம் கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள செடிகொடியில் சிக்கிய நிலையில் ஆலிவ் ரேட்லி ஆமை ஒன்று அங்கிருந்து செல்ல முடியாமல் போராடிக் கொண்டிருந்தது. அதனை கண்ட போலீசார் அதனை பத்திரமாக மீட்டு கடலுக்குள் விட்டனர்.

    • கரை ஒதுங்கிய ஆமை சுமார் 3 அடி நீளமும், 100 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது.
    • ஆமை எவ்வாறு இறந்தது? யாரேனும் ஆமையை வேட்டையாடி கொன்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரிய வகை ஆமை இனங்கள் உயிர் வாழ்கின்றன. அவை கடற்கரை பகுதிகளில் குஞ்சு பொரித்து வாழ்ந்து வருகின்றன.

    ஆமையை மீனவர்கள் உணவுக்காக பிடிக்கவோ, வேட்டையாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அழிந்து வரும் ஆமை இனங்களை பாதுகாக்க வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று காலை தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பகுதியில் அரிய வகை ஆமை இறந்து அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது.

    கரை ஒதுங்கிய ஆமை சுமார் 3 அடி நீளமும், 100 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது. அதன் முகத்தில் கண்கள் இல்லாமல், வாய் மற்றும் இறக்கை பகுதிகள் சேதம் அடைந்து அழுகிய நிலையில் காணப்பட்டது. கடற்கரையில் இறந்து ஒதுங்கி கிடந்த ஆமையை கடற்கரைக்கு நடைபயிற்சிக்கு வந்த பொதுமக்கள் இளைஞர்கள் பார்த்தனர்.

    இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று ஆமை எவ்வாறு இறந்தது? யாரேனும் ஆமையை வேட்டையாடி கொன்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் ஆமையை அந்த பகுதியிலேயே உடற்கூறாய்வு செய்து புதைக்கவும் ஏற்பாடு செய்தனர். 

    • ஆமை சுமார் 3 ½ அடி நீளமும் 50 கிலோ எடையும் இருக்கும்.
    • பொதுமக்கள் ஆமையை ஆர்வமுடன் பார்த்து புகைப்படம் எடுத்துச் சென்றனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் அருகே அமைந்துள்ள ஜே.ஜே. நகர் பகுதி கடற்கரையில் தினசரி இப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் அதிகாலை நேரத்தில் நடை பயணம் மேற்கொண்டு வருவது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று ஜெ.ஜெ. நகர் கடற்கரை பகுதியில் இருந்து வீரபாண்டி பட்டினம் கடற்கரைக்கு செல்லக்கூடிய பகுதி வரை நடைபயணம் மேற்கொண்டு இருக்கும்பொழுது கடற்கரை பகுதியில் இருந்து கடல் ஆமை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இந்த ஆமை சுமார் 3 ½ அடி நீளமும் 50 கிலோ எடையும் இருக்கும் என்று தெரிகிறது.

    இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இந்த ஆலிவ் ரெட்லி வகை ஆமை திருச்செந்தூர் முதல் ராமேஸ்வரம் கடலில் அதிகளவில் காணப்படும் இனமாகும். கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் ஆமையை ஆர்வமுடன் பார்த்து புகைப்படம் எடுத்தும் சென்றனர்.

    ஆனால் தற்போது ஆமைகள் கடலில் முட்டையிட்டு இனபெருக்கம் செய்யும் காலம் என்பதால் இந்த ஆமையானது முட்டை இடுவதற்காக கரை ஒதுங்கும் போது அலைகளின் சீற்றத்தால் அடிப்பட்டும் அல்லது பாறைகளில் வேகமாக மோதியதால் காயங்கள் ஏற்பட்டும் இறந்திருக்கலாம் அல்லது ஏதாவது மீன்பிடி படகுகளில் மோதி இறந்திருக்கலாம் என தெரிகிறது.

    கடந்த 2 வாரங்களில் இந்த ஆமையோடு சேர்த்து மொத்தம் 3 ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளது. கடந்த 2 வாரத்திற்கு முன்பு கடற்கரையில் 100 கிலோ எடைகொண்ட ஆமை ஒன்றும் 10 கிலோ எடைகொண்ட ஆமை ஒன்றும் நேற்றைய தினம் 10 கிலோ எடை கொண்ட ஆமையும் கரை ஒதுங்கியது.

    இந்த நிலையில் இன்று திருச்செந்தூர் அருகே ஜெ. ஜெ. நகர் கடற்கரை பகுதியில் 50 கிலோ எடைகொண்ட 3½ அடி நீளமுடைய கடல் ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் இது போன்று சமீப நாட்களாக கடல் வாழ் உயிரினங்களான டால்பின், ஆமை உள்ளவைகள் தொடர்ந்து அடுத்தடுத்து இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருவது திருச்செந்தூர் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் சென்னை கடற்கரையில் கடந்த மாதம் இதுபோல் அதிக அளவில் கடல் ஆமைகள் வாழ்ந்து இறந்த நிலையில் கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.

    ×