என் மலர்
முகப்பு » security forcesencounter
நீங்கள் தேடியது "security forcesencounter"
- பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி பதிலடி கொடுத்தனர்.
- துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதுகாப்பு படையினர் கொடுத்த பதிலடியில் 5 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குல்காம் மாவட்டத்தின் பெஹிபாக் பகுதியில் உள்ள காடரில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அப்போது, பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். அங்கு, தேடுதல் நடவடிக்கை என்கவுண்டராக மாறியது. இதனால், பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி பதிலடி கொடுத்தனர்.
இந்த சம்பவத்தில் 5 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளதாகவும், 2 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #militantsencounter #securityforcesencounter #Kulgamencounter
ஜம்மு:
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் மாவட்டத்துக்கு உட்பட்ட கெல்லம் கிராமத்தில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று அதிகாலை அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையில் தொடர்ந்து நீடித்துவரும் துப்பாக்கிச் சண்டையில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த மோதலின்போது சுமார் 10 பேர் காயமடைந்ததாகவும் தெரியவரும் நிலையில் ராணுவத்தரப்பில் உண்டான இழப்பு தொடர்பாக உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. #militantsencounter #securityforcesencounter #Kulgamencounter
×
X