search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sedapatti"

    சேடப்பட்டியில் திருமணமான 2 ஆண்டில் வி‌ஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்தார். இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.

    பேரையூர்:

    சேடப்பட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கம்மாளப்பட்டியைச் சேர்ந்தவர் அமர்நாத். இவரது மனைவி வினோதினி (வயது 19). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. ஹரி (1½) என்ற மகன் உள்ளான்.

    எம்.கல்லுப்பட்டியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அமர்நாத் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த வினோதினி வி‌ஷம் குடித்து மயங்கினார். சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சேடப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. வினோதினிக்கு திருமணமாகி 2 ஆண்டே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடக்கிறது. அவர் எதற்காக தற்கொலை செய்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×