என் மலர்
நீங்கள் தேடியது "select"
- கட்சி நிர்வாகிகளை சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார்
- மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணைசெயலாளரும், நகரமன்ற துணைத் தலைவருமான வாஷிம்ராஜாவை சந்தித்தார்.
அருவங்காடு,
நீலகிரி மாவட்ட தி.மு.க மகளிர் அணி துணை அமைப்பாளராக பிரபாவதி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் அவர் குன்னூர் நகரசெயலாளர் ராமசாமி, மாநில சிறுபான்மை பிரிவு துணைசெயலாளர் அன்வர்கான், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணைசெயலாளரும், நகரமன்ற துணைத் தலைவருமான வாஷிம்ராஜா, பொதுக்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா மற்றும் நகரமன்ற தலைவர் சீலாகேத்ரின், நகர அவைதலைவர் தாஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
- மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களும் பெற்று வருகின்றனர்.
- வருகிற 28-ந் தேதி தேதி செங்கல்பட்டுவில் விளையாட்டு ேபாட்டி நடைபெறவுள்ளது.
அருவங்காடு,
நீலகிரி மாவட்டம் குன்னூரில் பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவிகள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.
குறிப்பாக கைப்பந்து, கால்பந்து, டேபிள் டென்னிஸ், ஆக்கி, சதுரங்கம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களும் பெற்று வருகின்றனர்.
இவர்களை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஊக்கப்படுத்தி வரும் நிலையில் குன்னூர் ஸ்டேன்ஸ் பள்ளியில் 68 மாணவ, மாணவிகள் தற்போது மாநில அளவிலான போட்டிகளில் விளையாட தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
வருகிற 28-ந் தேதி தேதி செங்கல்பட்டுவில் நடைபெற உள்ள மாநில விளையாட்டுப் போட்டிகளில் இந்த மாணவ - மாணவிகள் பங்கேற்பதற்காக தற்போது குன்னூரில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
