search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "selling lottery tickets"

    • பெண்கள் 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
    • லாட்டரி எண்களை பெற்று ஏமாற்றி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்துள்ள மைலம்பாடி, காட்டூர் பஸ் நிறுத்தத்தில் பவானி போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த பெண்கள் 2 பேரைப் பிடித்து விசாரித்தனர்.

    அதில் அவர்கள் மைலம்பாடியை சேர்ந்த சந்தியா (37), பவானியை சேர்ந்த சித்ரா (37) என்பது தெரியவந்தது. மேலும் அவர்களது உடைமைகளை சோதனையிட்டபோது ஒரு ரோஸ் கலர் பேப்பரில் எண்கள் எழுதப்பட்டிருப்பது தெரியவந்தது.

    விசாரணையில் அவர்கள் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் என கூறி விற்பனை செய்து பொதுமக்களை ஏமாற்றி வந்ததும், வாட்ஸ்-அப் மூலமாக லாட்டரி எண்களை பெற்று ஏமாற்றி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக சித்தோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு நடுப்பாளையம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக சித்தோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த சித்தோடு நடுப்பாளையம் பகுதியை சேர்ந்த நடராஜ் மகன் ரமேஷ் (வயது 57), அதே பகுதியை சேர்ந்த மணி மகன் ஆனந்தன் (51) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட செல்போன் மற்றும் ரூ.300 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்த சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்த நெடுஞ்செழியன் மகன் நிகாந் (வயது 25), அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் மகன் சிவப்பிரகாஷ் (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • பெருந்துறை போலீசார் ரோந்து சென்றனர்.
    • பூமாணிக்கத்தை கைது செய்து 40 லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் மேக்கூர் இந்திரா நகர் பகுதியில் பெருந்துறை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்றிருந்த மர்மநபர் போலீசாரை பார்த்ததும் தப்பி செல்ல முற்பட்டார்.

    இதையடுத்து போலீசார் அந்த நபரை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட கேரளா மாநில லாட்டரி சீட்டுக்களை விற்பனைக்கு வைத்திருப்பதும், அவரிடம் நடத்திய விசாரணையில் அதேபகுதியை சேர்ந்த பூமாணிக்கம் (52) என்பதும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து பூமாணிக்கத்தை கைது செய்து 40 லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல், சத்தியமங்கலம் கரட்டூர் சாலையில் கேரளா மாநில லாட்டரி சீட்டு விற்றதாக சத்தி ஜலிகுழி வீதியை சேர்ந்த நாகராஜ்(69) என்பவரை போலீசார் கைது செய்து 24 லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

    • போலீசார் 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • அவர்களிடம் இருந்து 3 வெளி மாநில லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்தனர்.

    பவானி:

    பவானி பழனிபுரம் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரிடம் வெளிமாநில வெள்ளை தாளில் எண் எழுதிய துண்டு சீட்டுகளை வைத்துக்கொண்டு இதை வாங்கினால் பரிசுகள் விழும் என 2 பேர் கூறியுள்ளனர்.

    இது குறித்து கண்ணன் பவானி போலீசாரிடம் புகார் அளித்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மேட்டூர் மெயின் ரோட்டில் உள்ள டீக்கடை அருகே நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது பவானி குருப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த விஜயராஜ் (52) மற்றும் பவானி பெருமாபாளையம் பகுதியை சேர்ந்த சசிகுமார் (32) ஆகியோர் என்பதும்,

    வெள்ளை தாளில் எண்கள் எழுதப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் 3 விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து 3 வெளி மாநில லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்தனர்.

    • ஆன்லைன் மூலம் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது தெரிய வந்தது.
    • போலீசார் 2 பேரையும் கைது செய்து பவானி கிளை சிறையில் அடைத்தனர்.

    பவானி:

    பவானி தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் வசிக்கும் கிருஷ்ணன் என்பவர் தன்னிடம் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டுகளை வாங்க சொல்லி வற்புறுத்தி வரும் 2 பேர் குறித்து பவானி போலீசாரிடம் புகார் அளித்தார்.

    இதனைத்தொடர்ந்து சம்பவயிடம் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பவானி வர்ணபுரம் பகுதியை சேர்ந்த தனபால் (47) மற்றும் பழனிபுரம் பகுதியை சேர்ந்த குமரேசன் (47) ஆகிய 2 பேரும் ஆன்லைன் மூலம் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்து பவானி கிளை சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. 

    • லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • இதில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் பல்வேறு பகுதிகளில் சோதனை செய்து வருகிறார்கள்.

    இதேபோல் ஈரோடு பச்சப்பாளி பகுதியில் முகமது சித்திக் என்பவர் நின்று கொண்டு இருந்தார். அப்போது ஒரு வாலிபர் அவரிடம் வெள்ளை தாளில் லாட்டரி சீட்டுகளின் எண்கள் எழுதி அவரிடம் வாங்க வற்புறுத்தினார்.

    இதை வாங்க விருப்பம் இல்லாத அவர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் லாட்டரி விற்பனை செய்தவரை பிடித்து விசாரித்தனர்.

    இதில் அவர் பச்சப்பாளியை சேர்ந்த மாரிசாமி என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து லாட்டரி சீட்டு எண்கள் எழுதி வைத்து இருந்த வெள்ளை தாள்களை பறிமுதல் செய்தனர்.

    பவானி அடுத்த லட்சுமி நகர் பகுதியில் தொட்டிபாளையத்தை சேர்ந்த லோகநாதன் (26) என்பவர் வெள்ளை தாளில் லாட்டரி சீட்டு எண்களை எழுதி விற்பனை செய்ய வைத்து இருந்தார்.

    இதையடுத்து சித்தோடு போலீசார் அவரை பிடித்து விசாரித்து அவரிடம் இருந்து லாட்டரி சீட்டு எண்களை எழுதி வைத்து இருந்த வெள்ளை தாள்களை பறிமுதல் செய்தனர்.

    இதே போல் சித்தோடு அடுத்த ஆர்.என். புதூர் பகுதியில் வெள்ளை தாளில் லாட்டரி சீட்டு எண்களை எழுதி வைத்து விற்பனை செய்த ஜெகதீசன் (37) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி அவரிடம் இருந்து லாட்டரி சீட்டு எண்கள் எழுதி வைத்து இருந்த வெள்ளை தாள்களை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு மரப்பாலம் பகுதியில் வெள்ளை தாளில் லாட்டரி சீட்டு எண்கள் எழுதி வைத்து விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த செந்தில்வேலன் (57) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி அவரிடம் இருந்து லாட்டரி சீட்டு எண்கள் எழுதி வைத்து இருந்த வெள்ளை தாள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 4 பேரை கைது செய்தனர்.

    இதேபோல் சத்தியமங்கலம் பகுதியில் சிலர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சத்தியமங்கலம் கோட்டு வீராம்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த பகுதியில் 2 பேர் இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து கொண்டு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ய வைத்து இருந்தனர்.

    இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கேரளா மாநிலத்தை சேர்ந்த சத்தியசீலன் (73), சத்தியமங்கலம் அடுத்த ரங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்த சிவா (42) என தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து அவர்கள் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரத்து 160 மதிப்புள்ள 90 லாட்டரி சீட்டுகள் ரூ.20 ஆயிரத்து 500 பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இதே போல் சத்தியமங்கலம் பூ மார்க்கெட் அருகே ஒருவர் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து கொண்டு லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்து இருந்தார்.

    அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் பு.புளியம்பட்டி பகுதியை சேர்ந்த அன்வர் பாஷா (49) என்பதும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு வைத்து இருந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து சத்தியமங்கலம் போலீசார் அவரிடம் இருந்து ரூ.480 மதிப்புள்ள 12 லாட்டரி சீட்டுகள், ரூ.17 ஆயிரத்து 700 பணம் மற்றும் அவரது மோட்டார் சைக்கிள் ஆகிய வற்றை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 3 பேரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
    • அவர்களது சட்டை பாக்கெட்டில் ரோஸ் கலர் சீட்டில் எண் எழுதி வெளி மாநில லாட்டரி சீட்டுகளை பரிசு விழும் என விற்பனை செய்தது தெரியவந்தது.

    பவானி:

    பவானி அந்தியூர் மெயின் ரோடு பொன்காட்டார் கடை அருகில் பவானி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.

    அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பவானி அருகில் உள்ள ஜம்பை, நல்லிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த தாண்டான் (46) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அய்யாசாமி (46) என்பது தெரியவந்தது.

    அவர்களது சட்டை பாக்கெட்டில் ரோஸ் கலர் சீட்டில் எண் எழுதி வெளி மாநில லாட்டரி சீட்டுகளை பரிசு விழும் என விற்பனை செய்தது, செல்போன் மூலம் விற்பனை செய்தது தெரியவ ந்ததை தொடர்ந்து 2 பேரையும் பவானி போலீசார் கைது செய்தனர். 5 சீட்டுகள் பறிமுதல் செய்தனர்.

    புதுவையில் ஆன்-லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் சமீப காலமாக தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் லாட்டரி சீட்டு விற்ற பலர் கைது செய்யப்பட்டனர்.

    நேற்று ஒதியஞ்சாலை போலீசாருக்கு அண்ணா சாலையில் சிலர் நின்று கொண்டு லாட்டரிசீட்டு விற்பதாக தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இன்ஸ் பெக்டர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் சப்இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    அப்போது அந்த பகுதியில் 3 பேர் நின்று கொண்டு தங்களது செல்போனை இயக்கி கொண்டிருந்தனர். அவர்கள் போலீசார் வருவதை கண்டவுடன் தப்பி ஓடமுயன்றனர். அவர்கள் 3 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர்.

    அவர்களிடம் விசாரணை நடத்தியபோது செல்போன் மூலம் போலி 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்றது தெரியவந்தது. பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் கோவிந்தசாலை அந்தோணியார் கொவில் தெருவை சேர்ந்தவர்கள் பெருமாள்(45), சங்கர நாராயணன்(43), தமிழக பகுதி ராயபுதுகுப்பம் பகுதியை சேர்ந்த சத்யராஜ்(37) என்பது தெரியவந்தது. மேலும் விசாரித்ததில் அவர்களுக்கு கோபி, நாகராஜ், செல்வா, குணா உள்பட 10க்கும் மேற்பட்டவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 ஆயிரம் பணமும், 3 செல்போன், தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×