என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Sellur Raju"
- திமுக அரசை மாற்ற வேண்டும் என்று மக்கள் முடிவுடன் இருக்கின்றனர்.
- திமுக பேசாத பேச்சா.. எல்லோரும் பேசுவதைப் போல் அந்த நடிகையும் பேசிவிட்டார்.
மதுரையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஒரு திரைப்பட நடிகை. அவரது மகனுக்கு 12 வயது. ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர். அந்த பெண் தான் மகனை முழுவதுமாக உடன் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டும்.
திமுக பேசாத பேச்சா.. எல்லோரும் பேசுவதைப் போல் அந்த நடிகையும் பேசிவிட்டார். சரி அந்த விஷயத்திற்குள் நான் செல்லவில்லை.
ஒரு நடிகையை இரண்டு தனிப்படைகளை அமைத்து காவல் துறை பிடித்திருக்கிறார்கள். ஒரு நடிகையை பிடிக்க இவ்வளவு செய்யும்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி சிறைக்கு சென்று வந்து ஒரு வருடங்களுக்கும் மேல் ஆகியும் அவரது தம்பியை காவல்துறையினரால் இன்னும் பிடிக்க முடியவில்லையே. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கீழ் இருக்கும் காவல்துறை. இதற்கு மேல் என்ன கூறுவது.
ஆக மொத்தம் இந்த அரசை மாற்ற வேண்டும் என்று மக்கள் முடிவுடன் இருக்கின்றனர்.
எத்தனை நாட்களுக்கு முன்னால் தேர்தல் பணிகளை ஆரம்பித்தாலும் வருகின்ற சட்டசபை தேர்தலில் திமுகவையும் அதன் கூட்டணி கட்சிகளையும் மக்கள் முடிவுக்கு கொண்டு வந்துவிடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசவில்லை. தனது கருத்தை மட்டுமே தெரிவித்ததாக வாதிடப்பட்டது.
- இருப்பை தக்கவைத்துக்கொள்ள திமுக, அதிமுக மாறி மாறி குற்றச்சாட்டு கூறி வருகின்றனர்.
மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் செல்லூர் ராஜூ மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது செல்லூர் ராஜூ தரப்பில், எதிர்க்கட்சி எம்எல்ஏ என்ற அடிப்படையில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினேன். முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசவில்லை. தனது கருத்தை மட்டுமே தெரிவித்ததாக வாதிடப்பட்டது.
ஆனால் முதலமைச்சரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செல்லூர் ராஜூ பேசுவதால் அவர் வழக்கை எதிர்கொள்ள வேண்டும். அதனால் வழக்கை ரத்து செய்யக்கூடாது என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி வேல்முருகன், அதிமுக, திமுக கட்சிகள் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. இருப்பை தக்கவைத்துக்கொள்ள திமுக, அதிமுக மாறி மாறி குற்றச்சாட்டு கூறி வருகின்றனர். ஜனநாயகத்தை வலுப்படுத்துவதாக கூறிக்கொண்டு குற்றச்சாட்டுகளை கூறுகின்றனரே தவிர நாட்டுக்கு நல்லது செய்யும் எண்ணமில்லை என்று தனது கருத்தை தெரிவித்த நீதிபதி அவதூறு வழக்கை ரத்து செய்வதாக கூறினார்.
- 20 நாட்களாக சாக்கடை நீர் நிரம்பி இருக்கிறது.
- பொதுப்பணி துறைக்கு ரூ.11 கோடி ஒதுக்கும் முதலமைச்சர் ஏன் முன்பே செய்யவில்லை.
மதுரை:
மதுரை மாநகராட்சி செல்லூர் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளை ஆய்வு மேற்கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ஏன் பணிகள் மந்தமாக நடைபெறுகிறது என்று அதிகாரிகளை கடிந்து கொண்டார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆக்கரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சொல்லி இருக்கிறது என்றால் உயர்நீதிமன்றம் முல்லை நகருக்கு மட்டும் சொல்லவில்லை. மதுரையில் இருக்கும் எல்லா இடங்களுக்கும் தான் சொல்லி இருக்கிறது.
அப்படி செய்ய வேண்டும் என்றால் முதலில் உயர்நீதிமன்றத்தை தான் அகற்ற வேண்டும். அதுவும் நீர்நிலையில் தான் இருக்கிறது.
20 நாட்களாக சாக்கடை நீர் நிரம்பி இருக்கிறது. ஏன் அமைச்சர்கள் வந்து பார்க்கக்கூடாதா?
இந்த பகுதியில் தொற்று நோய் பரவி வருகிறது. எல்லோரும் எளிய மக்கள்.
இப்போது பொதுப்பணி துறைக்கு ரூ.11 கோடி ஒதுக்கும் முதலமைச்சர் ஏன் முன்பே செய்யவில்லை.
முதல்வர் ஆய்வு கூட்டம் நடத்தி இருப்பார். மதுரையில் அதிகம் பாதிக்கப்படக்கூடிய இடங்களை சொல்லி இருப்பார்கள். அதற்காக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த அரசாங்கம் வெறும் பெயரளவுக்குதான். கூட்டணி பலம் இருக்கிறது.
என்ன கூட்டணியாக இருந்தாலும் இந்த அரசாங்கத்தின் மீது உள்ள வெறுப்புணர்ச்சி காரணமாக இந்த கூட்டணியில் சேரும் கட்சிகள் எல்லாமே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்போகிறார்கள். இதுதான் நடக்கப்போகிறது என்று கூறினார்.
- இப்போது பந்தல்குடி வாய்க்காலில் வேலை பார்ப்பவர்கள் மழை வருவதற்கு முன் ஏன் செய்யவில்லை.
- கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கக்கூடியது.
மதுரை:
திமுக கூட்டணி புயலில் அடித்துக்கொண்டு போகும் என்று சொல்கிறீர்களே...
துளி கூட அசையாது... ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு... ஆலமரத்தை அழிக்க சில பேர் வேரெடுத்துக்கொண்டு வருகிறார்கள் என்று உதயநிதி சொல்கிறார் என்ற செய்தியாளரின் கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சொல்வது எல்லாம் சரிதான். வெள்ளத்தில் ஆலமரமே பிடுங்கிக்கொண்டு போயிருக்கிறது.
உலகமே அழிந்திருக்கிறது. உதயநிதிக்கு தெரியவில்லை.
எத்தனை கூட்டணி பலம் இருந்தாலும் மக்கள் பலம் இல்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது.
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. மக்கள் தான் நமக்கு எஜமானர். அந்த மக்களுக்கு செய்யாமல், கூட்டணி பலத்தோடு மக்களை போய் சந்திப்போம் என்று சொன்னால் என்ன அர்த்தம்.
பந்தல்குடி வாய்க்காலில் எத்தனை ஜேசிபி கொண்டு வேலை நடக்கிறது என்று பாருங்கள்.
இப்போது பந்தல்குடி வாய்க்காலில் வேலை பார்ப்பவர்கள் மழை வருவதற்கு முன் ஏன் செய்யவில்லை.
மக்கள் பணியை மட்டும் பாருங்கள் என்று பொதுச்செயலாளர் சொல்லி இருக்கிறார்.
மக்களுக்கான திட்டங்கள் சென்றடைகிறதா?, கட்டமைப்பை வலுப்படுத்துங்கள், மக்கள் குறைகளை எடுத்துச்சொல்லுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் பாமக கட்சி கூட்டணி குறித்து எங்களுடன் பேசிக்கொண்டு இருந்தார்கள். 10 நாளைக்கு முன்பு எங்களுடன் தான் கூட்டணி என்றார்கள். 10 நாளில் எல்லாம் மாறி விட்டது.
கூட்டணி என்பது இப்போது பேசக்கூடிய தருணம் இல்லை. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கக்கூடியது. இப்போது கூட்டணி பற்றி பேசுவது வேஸ்ட்.
கிழக்கு பகுதியில் உள்ள 28 வார்டுகளில் மாநகராட்சி பணி மெத்தனமாக உள்ளது. 100 வார்டுகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.
அமைச்சர் மூர்த்தி இருக்கும் தொகுதியிலே இதுபோல் இருக்கிறது என்று கூறினார்.
- செல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்திருந்தது.
- அண்ணே எல்லாம் பண்ணிகிட்டு இருக்கோம் என அவரிடம் அமைச்சர் மூர்த்தி பதில் அளித்தார்.
மதுரை மாநகரில் நேற்று வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்துள்ளது. நேற்று மாலை ஒரு மணி நேரத்தில் மதுரை மாநகரில் மட்டும் 4.5 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. குறைந்த மணி நேரத்தில் அதிகனமழை பெய்ததால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நள்ளிரவு நேரத்தில் மதுரையில் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக செல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்திருந்தது. அந்த தண்ணீரே வடியாத நிலையில் நேற்று பெய்த மழையால் மீண்டும் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை வரை செல்லூர், அய்யர்பங்களா, நரிமேடு, ஒத்தக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் தண்ணீர் வடியாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
மாவட்ட நிர்வாகம் தண்ணீரை வெளியேற்றும் பணியை முடுக்கி விட்டுள்ளது. நவீன மின் மோட்டார்கள் மூலம் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மதுரை மாநகர மக்களுக்கு இந்த பருவமழையால் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை செல்லூர் பகுதியில் நடைபெற்று வரும் வெள்ள மீட்பு பணிகளை அமைச்சர் மூர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவரிடம் வெள்ள மீட்பு பணிகளை முடுக்கி விடுமாறு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கோரிக்கை விடுத்தார்.
அதிகாரிகளிடமும் வெள்ள மீட்பு பணிகள் தொடர்பாக முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ வலியுறுத்தினார்.
அண்ணே எல்லாம் பண்ணிகிட்டு இருக்கோம் என அவரிடம் அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
- மக்கள் விரோத ஆட்சியை வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களின் மகத்தான ஆதரவுடன் தூக்கி எறிந்து முற்றுப்புள்ளி வைப்போம்.
- வருகிற 30-ந்தேதி பசும்பொன் வரும் எடப்பாடியாருக்கு மகத்தான வரவேற்பு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வழங்க வேண்டும்.
மதுரை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வருகிற 30-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்கிறார். இதற்காக 29-ந்தேதி மாலை மதுரை வரும் எடப்பாடி பழனிசாமிக்கு மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு வழங்கப்படுகிறது.
இது தொடர்பான ஆலோசனை கூட்டம் மதுரை மாநகர் மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் இன்று நடைபெற்றது. பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியில், அ.தி.மு.க.வின் 53-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனால் தி.மு.க.வி.ன் அதிகார துஷ்பிரயோகத்தால் அ.தி.மு.க. கொடியை கூட ஏற்றுவதற்கு எதிர்நீச்சல் போடும் நிலை உள்ளது.
இந்த மக்கள் விரோத ஆட்சியை வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களின் மகத்தான ஆதரவுடன் தூக்கி எறிந்து முற்றுப்புள்ளி வைப்போம். வருகிற 30-ந்தேதி பசும்பொன் வரும் எடப்பாடியாருக்கு மகத்தான வரவேற்பு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வழங்க வேண்டும். வருங்கால முதலமைச்சராகும் எடப்பாடியாருக்கு மதுரை நகரமே திரண்டு வந்து வரவேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திமுக அரசும், அமைச்சர்களும் கமிஷன், கலெக்ஷன் மட்டுமே பார்க்கிறார்கள். மக்களை பார்ப்பதில்லை.
- மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் வரும் சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு பதிலடி கொடுப்பார்கள்.
மதுரை:
வீரபாண்டிய கட்டபொம்மனின் 225-வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலைக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ கூறியதாவது:
அ.தி.மு.க. ஆட்சியில் பருவ மழைகளையும் புயல்களையும் சிறப்பாக எதிர்கொண்டு மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்தோம். ஆனால் தி.மு.க. அரசு மக்களுக்கு எதையும் செய்யவில்லை.
மழை நேரத்தில் முதல்வர் ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் போட்டோ சூட் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
தி.மு.க. அரசும், அமைச்சர்களும் கமிஷன், கலெக்ஷன் மட்டுமே பார்க்கிறார்கள். மக்களை பார்ப்பதில்லை.
மழையால் பாதிக்கப்பட்ட தமிழக மக்கள் வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு சரியான பதிலடி கொடுப்பார்கள். அமைச்சர் மூர்த்தி கூட மதுரையில் அவர் தொகுதியில் தான் ஆய்வு செய்கிறார்.
புது காதலன், புது காதலி போல தமிழக அரசும், ஆளுநர் உள்ளனர். ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்துகொள்ள மாட்டோம் என ஆளுநருக்கு எதிராக செயல்பட்ட தி.மு.க, தற்போது ஆளுநரோடு இணக்கமாக இருக்கிறார்கள்.
முதல்வர் ஸ்டாலின் திடீரென டெல்லிக்கு செல்கிறார், பிரதமரை சந்திக்கிறார். மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்குகிறார்கள் ஏதோ தேன்நிலவு போல நடக்கிறது.
ஆளுநர் எப்போதும் அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டி மக்களின் குறைகளை எடுத்துச் சொல்வார். ஆனால் ஆளுநர் தற்போது மாறி இருக்கிறார் என தெரிவித்தார்.
சென்னை மழையை முன்னிட்டு தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை பணிகளை ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
- பலாத்காரம் என்பதற்கு பதிலாக அவர் பலத்த காரம் என பதிவிட்டது சர்ச்சையாகி உள்ளது.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் எக்ஸ் தள பதிவால் புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. "டம்மி முதல்வரின் ஆட்சியில் நடக்கும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள்" தொடர்பாக செல்லூர் ராஜூ எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
அந்த பதிவில் அவர், "பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பலத்த காரம், கற்பழிப்பு" என குறிப்பிட்டுள்ளார். இதில் பலாத்காரம் என்பதற்கு பதிலாக அவர் பலத்த காரம் என பதிவிட்டுள்ளது சர்ச்சையாகி உள்ளது.
முன்னதாக இவர் வைகை அணையை மூடுவதற்கு தெர்மாகோல் பயன்படுத்திய சம்பவம் அரசியலில் பேசுபொருளான நிலையில், தற்போது எக்ஸ் தள பதிவில் எழுத்துப்பிழை ஏற்பட்டதை பலரும் சமூக வலைதளங்களில் நக்கலாக பதிவிட்டு வருகின்றனர்.
- அண்ணாமலை நேற்று இரவு சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டார்.
- வருகிற நவம்பர் மாத இறுதியில் படிப்பை முடித்து சென்னை திரும்புகிறார்.
லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சர்வதேச அரசியல் படிப்புக்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த 40 பேரை தேர்வு செய்துள்ளது.
இதில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 12 பேரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் ஒருவர். அங்கு தங்கி படிப்பவர்களுக்கான செலவை பல்கலைக்கழகமே ஏற்றுக்கொண்டுள்ளது.
இதற்காக அண்ணாமலை நேற்று இரவு சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டார். 3 மாதங்கள் லண்டனில் தங்கி படிக்கும் அண்ணாமலை வருகிற நவம்பர் மாத இறுதியில் படிப்பை முடித்து சென்னை திரும்புகிறார்.
இந்நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை மேற்படிப்புக்காக லண்டன் சென்றுள்ளதை கிண்டலடிக்கும் விதமாகஅதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது எக்ஸ் பக்கத்தில்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர், "தமிழக பாஜகத் தலைவர் திரு அண்ணாமலை மேற்படிப்புக்காக லண்டன் சென்றதை ஒரு குறும்புக்கார் ஊடகத்தில் இப்படி போட்டு இருக்கார் நான் பார்தேன் நீங்களு பார்ப்பதற்காக !!!" என்று குறிப்பிட்டு, வீடீயோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், ஆடுகள் பாடம் படிப்பதை போன்று காட்சியளிக்கிறது.
தமிழக பாஜகத் தலைவர் திரு அண்ணாமலை மேற்படிப்புக்காக லண்டன் சென்றதை ஒரு குறும்புக்கார் ஊடகத்தில் இப்படி போட்டு இருக்கார் நான் பார்தேன் நீங்களு பார்ப்பதற்காக !!! pic.twitter.com/hVJLYINzt4
— Sellur K Raju (@SellurKRajuoffl) August 29, 2024
- கூட்டணி ஆட்சிக்கு தயார் என்று அதிமுக அறிவித்தால், பாஜக கூட்டணியில் இடம் பெறலாம் என அண்ணாமலை பேசியிருந்தார்.
- அண்ணாமலையிடம் சீட் கேட்டு அதிமுக நிற்க வேண்டுமா? என்று செல்லூர் ராஜு ஆவேசம்.
"அதிமுகவின் வாக்கு விகிதம் 40%-லிருந்து 19%-ஆக குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு தயார் என்று அதிமுக அறிவித்தால், பாஜக கூட்டணியில் இடம் பெறலாம்" என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ காட்டமாக பதில் அளித்துள்ளார்.
"அண்ணாமலையிடம் சீட் கேட்டு அதிமுக நிற்க வேண்டுமா? என்ன வாய்கொழுப்போடு பேசுகிறார்கள் பாருங்கள். அதிமுகவுக்கு இப்படி ஒரு நிலை நிலைவந்தால் நாங்கள் செத்துவிடுவோம்" என்று செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
- உதயநிதியே திமுகவில் திணிக்கப்பட்டவர் தான்.
- திமுகவில் வாரிசுகள் மட்டும் தான் அரசியலுக்கு வர முடியும்.
உதயநிதி துணை முதல்வர் ஆவது குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த செல்லூர் ராஜூ கூறியதாவது:-
உதயநிதியே திமுகவில் திணிக்கப்பட்டவர் தான். மு.க ஸ்டாலின் எதிர்கட்சியாக இருக்கும்போது எனது குடும்பத்தில் யாரும் அதாவது மகனோ, மருமகனோ வேறுயாரும் திமுகவிற்கு எந்த பதவியிலும் வரமாட்டார்கள் என்று கூறினார். நான் மட்டும் தான் அரசியலில் இருப்பேன் என்றும் கூறினார்.
இப்போது உதயநிதிக்கு முதலில் இளைஞர் அணி, பின்னர் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், இனி துணை முதலமைச்சர் என்று பதவிகள் வழங்கப்படுகிறது.
அ.தி.மு.க. மட்டும் தான் ஜனநாயக இயக்கம். அடுத்து தொண்டர்களும் மேலே தலைவர்களாகளாம், பொது செயளாளராகளாம், முதலமைச்சராகளாம்.
திமுகவில் வாரிசுகள் மட்டும் தான் அரசியலுக்கு வர முடியும்.
பொதுவாக திமுக கட்சியில்லை அது ஒரு கம்பெனி. தி.மு.க. என்பது கருணாநிதி குடும்பத்தின் பிரைவேட் கம்பெனி.
முதலில் கருணாநிதி. அதன் பிறகு மு.க.ஸ்டாலின். பின்னர் உதயநிதி. இன்று மூத்த தலைவர் துரைமுருகன் இன்பநிதி வந்தாலும் கூட நாங்கள் தோலில் துக்கிட்டுப் போவோம் என்று சொல்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க. நினைத்திருந்தால் அப்போதே கச்சத்தீவை மீட்டெடுத்திருக்கலாம்.
- தி.மு.க. அரசு அனைத்து தர மக்களுக்கும் அல்வா கொடுத்துவிட்டது.
மதுரை:
மதுரை பழங்காநத்தத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய ரேஷன் கடை கட்டிடத்தை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாடகமாடுகிறார். மத்திய அரசுக்கு எதிராக ஆளுங்கட்சி ஆர்ப்பாட்டம் செய்கிறது. இதெல்லாம் மக்களை ஏமாற்றுவதற்காக தான் நடத்தப்படுகிறது.
தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தான் நீட் தேர்வு வந்தது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கூட தமிழகத்திற்கு உரிய நிதியை ஒதுக்கப்படவில்லை. அப்போது தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தார்களா?
தி.மு.க. நினைத்திருந்தால் அப்போதே கச்சத்தீவை மீட்டெடுத்திருக்கலாம். காவிரியை மீட்டெடுத்திருக்கலாம். மக்கள் பிரச்சனையை விட்டுவிட்டு பாராளுமன்றத்தில் செங்கோலை பற்றி பேசுகிறார் மதுரை எம்.பி. வெங்கடேசன். எய்ம்ஸ் மற்றும் மெட்ரோ திட்டத்தைப் பற்றி ஏன் பேசவில்லை. மக்களை ஏமாற்றுவதற்காக தி.மு.க. நடத்தும் நாடகம் வெகுநாள் எடுபடாது. தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது.
மதுரையில் 2 வாரத்தில் மட்டும் 16 கொலைகள் நடந்துள்ளது. தி.மு.க. அரசு அனைத்து தர மக்களுக்கும் அல்வா கொடுத்துவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்