என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sembarambakkam"

    • செம்பரம்பாக்கம் ஏரியில் ஓராண்டுகளில் 540 எம்.எல்.டி. உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
    • சென்னை மற்றும் திருவள்ளூர் மக்களுக்கு நீர் தட்டுப்பாடு இன்றி வழங்கப்படும்

    தமிழக சட்டப்பேரவைக்  கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் அளவை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்குமா? என கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்து நகராட்சி துறை அமைச்சர் கே.என். நேரு கூறியதாவது:-

    செம்பரம்பாக்கம் ஏரியில் ஓராண்டுகளில் 540 எம்.எல்.டி. உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதன் மூலம் சென்னை மற்றும் திருவள்ளூர் மக்களுக்கு நீர் தட்டுப்பாடு இன்றி வழங்கப்படும்.

    செம்பரம்பாக்கத்தில் தற்போது 240 எம்.எல்.டி. தண்ணீர் உள்ளது. ஏழாண்டு காலமாக இதை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலையிடம் அனுமதி பெறப்பட்டு தற்போது அந்த குழாய் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்குள் செம்பரம்பாக்கம் ஏரியில் 540 எம்.எல்.டி. உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    • மழை முழுவதுமாக நின்று விட்டதால் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பும் முழுவதுமாக நிறுத்தப்பட்டது.
    • புழல் ஏரிக்கு 200 கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 150 கன அடியும் தண்ணீர் செல்கிறது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ளது கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

    சமீபத்தில் பெய்த பலத்த மழை காரணமாக பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பியது. ஏரியின் பாதுகாப்பை கருதி உபரி நீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரும் நிறுத்தப்பட்டது. மழை முழுவதுமாக நின்று விட்டதால் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பும் முழுவதுமாக நிறுத்தப்பட்டது. போதுமான தண்ணீர் பூண்டி ஏரியில் இருந்ததால் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் திறக்க வேண்டாம் என்று தமிழக அதிகாரிகள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

    கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திரா அரசு வருடம் தோறும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும். அதன் அடிப்படையில் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போதைய நிலவரப்படி ஏரி நீர்மட்டம் 34. 65 அடியாகவும் தண்ணீர் இருப்பு 3.028 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

    கிருஷ்ணா தண்ணீர் திறப்பை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் தண்ணீர் இருப்பை குறைக்கும் வகையில் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விட அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை முதல் இணைப்பு கால்வாய் வழியாக பூண்டி ஏரியில் இருந்து புழல் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    வினாடிக்கு 350 கன அடி தண்ணீர் கால்வாயில் திறக்கப்பட்டு உள்ளது. இதில் புழல் ஏரிக்கு 200 கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 150 கன அடியும் தண்ணீர் செல்கிறது. எனவே விரைவில் கிருஷ்ணா தண்ணீர் ஒப்பந்தப்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஏரிக்கு 450 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
    • 1000 கனஅடி உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    திருவள்ளூர்:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.

    வடகிழக்கு பருவமழையால் குடிநீர் வழங்கும் ஏரிகளில் சோழவரம் ஏரியை தவிர மற்ற ஏரிகள் அனைத்தும் நிரம்பின. முழு கொள்ளளவை எட்டியதால் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் இருந்து ஏற்கனவே உபரி நீர் திறந்துவிடப்பட்டது.

    தற்போது பூண்டி ஏரியில் இருந்து மட்டும் 1000 கனஅடி உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஆனால் சோழவரம் ஏரிக்கு மட்டும் எதிர்பார்த்த அளவு தண்ணீர் வரத்து இல்லாமல் இருந்தது. இதனால் சோழவரம் ஏரியில் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்தது.

    இந்த நிலையில் தற்போது சோழவரம் ஏரி 10 மாதங்களுக்கு பிறகு 50 சதவீதம் நிறைந்து உள்ளது. மொத்த கொள்ளளவான 1080 மில்லியன் கனஅடியில் 503 மில்லியன் கனஅடி தண்ணீர் நிரம்பி உள்ளது. ஏரிக்கு 450 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    கடந்த ஆண்டு இதே நாளில் சோழவரம் ஏரியில் 770 மி.கனஅடி தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    பூண்டி ஏரியில் மொத்த உயரமான 35 அடியில் 34.93 அடியும், புழல் ஏரியில் 21 அடியில் 19.99 அடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் 24 அடியில் 23.15 அடிக்கும் தண்ணீர் உள்ளது. ஏரிகளில் தண்ணீர் இருப்பை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    ×