search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "semmalai mla"

    மேட்டூர் பழையமார்கெட் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு செம்மலை எம்.எல்.ஏ ஆறுதல் கூறினார்.
    மேட்டூர்:

    மேட்டூர் பழையமார்கெட் பகுதியில் ஆற்றுகரை ஒரமாக உள்ள குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்தது.

    இதனை அறிந்த மேட்டூர் எம்.எல்.ஏ. செம்மலை காவிரி தண்ணீர் புகுந்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார். தேங்கி உள்ள தண்ணீரை மோட்டார் மூலம் உறிஞ்சி எடுக்குமாறு மேட்டூர் நகராட்சி அதிகாரியிடம் தெரிவித்தார்.மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். எதிர் வரும் காலங்களில் தண்ணீர் குடியிருப்பு பகுதிகளில் நுழையாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். எம்.எல்.ஏ. செம்மலை உடன் மேட்டூர் நகராட்சி பொறுப்பாளர் ராஜேந்திரன், மேட்டூர் நகர கூட்டுறவு வங்கி தலைவர் சந்திரசேகரன், மேட்டூர் நகர் மன்ற முன்னாள் தலைவர் லலிதா சரவணன், துணைத்தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உடன் சென்றனர். #tamilnews
    ×