search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Semmozhi Park"

    • கலைவாணர் அரங்க வளாகத்திலேயே இந்த மலர் கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது.
    • மலர் கண்காட்சி 10 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னை கத்தீட்ரல் சாலையில் உள்ள செம்மொழி பூங்காவில் இன்று (10-ந் தேதி) 12 லட்சம் பூக்களுடன் பிரம்மாண்ட மலர் கண்காட்சி தொடங்கியது.

    சென்னையில் இதற்கு முன்பு 2 முறை மலர் கண்காட்சி நடை பெற்று உள்ளது. அப்போது கலைவாணர் அரங்க வளாகத்திலேயே இந்த மலர் கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது.

    ஆனால் இந்த முறை இயற்கை சூழலில் செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சியை நடத்துவதற்கு தமிழக அரசின் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    இதன்படி இன்று (சனிக்கிழமை) செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி தொடங்கியது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார். மலர் கண்காட்சி 10 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ஊட்டி, கொடைக்கானல், மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து சுமார் 12 லட்சம் பூக்களை கொண்டு வந்து பிரமாண்டமான முறையில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.

    கடந்த 2010-ம் ஆண்டு 8 ஏக்கர் பரப்பளவில் செம்மொழி பூங்கா உருவாக்கப்பட்டது. அங்கு மலர் கண்காட்சிக்காக விதவிதமான பூக்களை கொண்டு பல்வேறு உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. யானை, மயில், கொக்கு உள்ளிட்ட பறவைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 18 வகையான உருவங்களை வைத்து உள்ளனர்.


    இந்த மலர் கண்காட்சியை பொதுமக்கள் பார்ப்பதற்கு நுழைவு கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு ரூ.150, சிறியவர்களுக்கு ரூ.75 கட்டணம் வசூலிக்கப்படும்.

    இது தொடர்பாக தோட்டக்கலை துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, "இந்த மலர் கண்காட்சியை நிரந்தரமாக வைத்து பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கலாம் என்று வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். அது போன்று நிரந்தரமாக மலர் கண்காட்சியை செம்மொழி பூங்காவில் நடத்தினால் பொதுமக்கள் செம்மொழி பூங்காவுக்கு அதிக அளவில் வருவார்கள்" என்றனர்.

    • செம்மொழி பூங்கா ரூ.172 கோடியில் அமைய உள்ளது.
    • 18 மாதத்தில் இத்திட்டப்பணி நிறைவுபெறும்.

    கோவை,

    கோவை மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவையில் தென்ேமற்கு பருவமழை துவங்கியுள்ளதால், டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல்களை உருவாக்கும் கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முன்பு, வார்டு தோறும் இப்பணியில் 6 ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.

    இது, தற்போது 10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டெங்கு கொசு ஒழிப்புக்கு தேவையான மருந்து உள்ளிட்ட உபகரணங்கள் போதுமான அளவு இருப்பு உள்ளது. கணபதி, பீளமேடு, செட்டி வீதி போன்ற பகுதிகளில் டெங்கு கொசு பரவல் அதிகம் உள்ளது. இதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மாநகரில் பாதாள சாக்கடை பணி நிறைவு பெற்ற இடங்களில் தார்ச்சாலை புதுப்பிப்பு பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. முதல் கட்டமாக, வார்டு தோறும் 50 சதவீத தார்ச்சாலைகளை புதுப்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான பணி நடந்து வருகிறது.

    கோவை மாநகரில் தெருநாய் பெருக்கத்தை கட்டுப்படுத்த, அவற்றை பிடித்து குடும்ப கட்டுப்பாடு செய்யும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. கடந்த 10 நாட்களில் 500 தெருநாய்கள் பிடிக்கப்பட்டு, குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. அடுத்த 2 மாதத்தில் 5 ஆயிரம் தெருநாய்களை பிடித்து குடும்ப கட்டுப்பாடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஆர்.எஸ்.புரம் புரூக் பீல்டு சாலை, மேட்டுப்பாளையம் ரோடு, கவுண்டம்பாளையம் ரோடு. ரத்தினபுரி, தடாகம் ரோடு-டி.பி.ரோடு சந்திப்பு, சிங்காநல்லூர் காமராஜர் ரோடு உள்ளிட்ட மழைநீர் அதிகம் தேங்கும் இடங்களை கண்டறிந்து, ரூ.12.63 கோடியில் மழைநீர் வடிகால் கட்டுமான பணி மிக விரைவில் தொடங்க உள்ளது.

    காந்திபுரம் சத்தி ரோட்டில் உள்ள ஆம்னி பஸ்நிலையம் ரூ.3.5 கோடியில் புனரமைக்கப்பட உள்ளது. சரவணம்பட்டியில் சுமார் 1 ஏக்கர் நிலத்தில் ரூ.1.2 கோடியில் "சயின்ஸ் பார்க்" கட்டப்பட உள்ளது. பீளமேடு டைடல் பார்க் பகுதியில் ரூ.15 கோடியில் தார்ச்சாலை, பூங்கா, நடைபாதை உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. கோவையில் உள்ள குளங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, குளக்கரையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் நடந்து வருகிறது.

    ஏற்கனவே, 2 இடங்களில் இப்பணி நிறைவடைந்துள்ளது. இன்னும் 4 இடங்களில் இப்பணி நடந்து வருகிறது. ஆர்.எஸ்.புரம் பூமார்க்கெட் உள்பட நகரில் பல்வேறு இடங்களில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான பணியும் நடந்து வருகிறது.

    கோவை மத்திய சிறைவளாகத்தில், உலகத்தமிழ் செம்மொழி பூங்கா செம்மொழி மாநாடு நினைவாக, செம்மொழி பூங்கா ரூ.172 கோடியில் அமைய உள்ளது. இதற்கான டெண்டர் கடந்த மாதம் 28ம் தேதி விடப்பட்டது.

    தற்போது தொழில் நுட்ப ரீதியிலான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இம்மாதம் இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாதம், முதல் வாரத்தில் இத்திட்டப்பணி தொடங்கும். இதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார்.

    இப்பூங்கா பல்வேறு அடுக்குகளாக மிக பிரம்மாண்டமான முறையில், சர்வதேச தரத்தில் அமைய உள்ளது. 18 மாதத்தில் இத்திட்டப்பணி நிறைவுபெறும். இது, கோவையின் மற்றொரு அடையாளமாக இருக்கும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவில் கைகொடுக்கவில்லை. அதனால், சிறுவாணி அணையில் நீர் இருப்பு போதுமான அளவு இல்லை.

    ஆனாலும், சிறுவாணி பயன்பாட்டாளர்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, மாநகராட்சி தெற்கு மண்டல பகுதிகளில் பில்லூர் குடிநீர் திட்டக்குழாய் இணைப்பு இல்லாத இடங்களுக்கு சிறுவாணி மற்றும் ஆழியார் குடிநீர் தடையின்றி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு கமிஷனர் மு.பிரதாப் கூறினார்.

    • ரூ.172.21 கோடி மதிப்பில் செம்மொழி பூங்கா அமைக்க திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
    • முதல் கட்டமாக 45 ஏக்கரிலும், 2-ம் கட்டமாக 120 ஏக்கரிலும் பூங்கா அமைக்கப்படும்.

    கோவை,

    கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் 165 ஏக்கர் பரப்பளவில் மத்திய ஜெயில் அமைந்துள்ளது.

    இந்த ஜெயிலை இடம் மாற்றி விட்டு அந்த இடத்தில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என கடந்த 2010-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.

    இதை தொடர்ந்து முதல் கட்டமாக ஜெயில் வளாகத்தில் உள்ள 45 ஏக்கர் நிலம் செம்மொழி பூங்காவுக்காக மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது.

    பின்னர் தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்னர் செம்மொழி பூங்கா திட்ட பணி மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டது.

    மாநகராட்சி வசம் உள்ள ஜெயில் இடத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.172.21 கோடி மதிப்பில் செம்மொழி பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கோவையில் செம்மொழி பூங்கா அமைக்க தமிழக சட்டசபையில், தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:-

    பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் 2 கட்டங்களாக செம்மொழி பூங்கா அமைக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக 45 ஏக்கரிலும், 2-ம் கட்டமாக 120 ஏக்கரிலும் பூங்கா அமைக்கப்படும்.

    இயற்கையை பாதுகாத்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், மாணவர்களின் கல்வி ஆராய்ச்சி சுற்றுச்சூழல் மேலாண்மை ஆகியவற்றுக்கு பயன்தரும் வகையிலும் மக்களுக்கும், குழந்தைகளுக்கும் சிறந்த பொழுது போக்குக்கு அளிக்கும் வகையிலும் உலக தரத்தில் இந்த பூங்கா அமைக்கப்பட உள்ளது.

    பூங்காவில் வரலாற்று சிறப்புகளை அறியும் வகையில் குறிஞ்சி வனம், செம்மொழி வனம், மரவனம் ஆகியவை அமைகின்றன.

    பூங்காக்களின் வகை, அதன் தன்மைகளை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மகரந்த பூங்கா, நறுமண பூங்கா, மூலிகை பூங்கா போன்ற 16 வகையான பூங்காக்கள் கலை நுட்பத்டன் அமைக்கப்பட உள்ளன.

    இந்த பூங்கா வளாகத்தில் விழா நடத்துவதற்கான மண்டபங்கள், உள் அரங்கம், வெளியரங்கம், பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம், விற்பனை அங்காடிகள், ஓய்வறைகள், திறந்தவெளி அரங்கம், உடற்பயிற்சி செய்யும் வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளன.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×