என் மலர்
நீங்கள் தேடியது "Senkottai"
- எஸ்.எஸ்.எம்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்தனர்.
- மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டு சுகாதாரம் பற்றிய அறிவுரைகளை வழங்கினர்.
செங்கோட்டை:
செங்கோட்டை அரசு பொது மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணா தலைமையில், எஸ்.எஸ்.எம்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமில் மாணவர்கள் மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்யும் பணியினை மேற் கொண்டனர்.
நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முருகன் பணியினை தொடங்கி வைத்தார். மருத்துவமனை ஊழியர்கள் பலவேசம் மூக்கன், செவிலியர்கள் கண்காணிப்பாளர் மலர்விழி, செவிலியர்கள் ராணி, அப்பாஸ் மீரான் மருந்தாளுநர் ஆகியோர் கலந்து கொண்டு சுகாதாரம் பற்றிய அறிவுரைகளை வழங்கினர்.
- செங்கோட்டை அரசு மருத்துவமனையில் மாவட்ட சுகாதார நலப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பிரேமலதா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை சுகாதார நலப் பணிகள் இணை இயக்குனர் பாராட்டினார்.
செங்கோட்டை:
செங்கோட்டை அரசு மருத்துவமனையில் மாவட்ட சுகாதார நலப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பிரேமலதா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அரசு மருத்துவமனையில் அன்று நான்கு பிரசவங்கள் நடந்தது. அதில் ஒருவருக்கு மட்டுமே சுகப்பிரசவம்ஆன நிலையில் 3 நபர்களுக்கு அறுவை சிகிச்சை மூலமாக பிரசவம் நடைபெற்றது. அவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர்.
இவர்களை இணை இயக்குனர் பிரேமலதா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை பாராட்டினார்.
நிகழ்ச்சியில் தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணன், பிரசவ அறுவை சிகிச்சை செய்த மருத்துவ குழுவினர், செவிலியர்கள், சுகாதார பார்வையாளர் மற்றும் அனைத்து பணி யாளர்களும் உடன் இருந்தனர்.
- செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்பகுதி மக்களுக்காக நவீன வசதி கொண்ட ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது
- செங்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜேஷ்கண்ணா ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்து அர்ப்பணிக்கப்பட்ட ஆம்புலன்சின் சிறப்பை விளக்கி கூறினார்.
செங்கோட்டை:
செங்கோட்டை மேலபஜார் வாகைமரத்திடல் காந்திசிலை முன்பு செங்கோட்டை எம்.எம்.எம். டிரஸ்டின் நிறுவனர் கல்வியாளர் ரசப்காசியார் என்ற சம்சத் சார்பாக செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்பகுதி மக்களுக்காக நவீன வசதி கொண்ட ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது. டிரஸ்டின் நிர்வாக இயக்குனர் ரியாஸ் சாகுல்ஹமீது தலைமை தாங்கினார். நிர்வாக குழு உறுப்பினர்கள் நாகூர்மீரான் முகமதுஆரிப், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகக்குழு உறுப்பினா் சித்திக் வரவேற்று பேசினார். செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் சேக் முகையதீன் தொகுத்து வழங்கினார். இதில் செங்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜேஷ்கண்ணா ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்து அர்ப்பணிக்கப்பட்ட ஆம்புலன்சின் சிறப்பை விளக்கி கூறினார். டிரஸ்டின் துணை நிர்வாக இயக்குனா் லிங்கராஜ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை டிரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் செய்திருந்தனா்.
- செங்கோட்டையில் இருந்து சுரண்டை செல்லும் நெடுஞ்சாலை மிகவும் பிரதான சாலையாகும். இச்சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.
- இந்த சாலையின் செங்கோட்டை நுழைவு பகுதி அருகில் அபாயகரமான வளைவு பகுதிகள், கணக்கபிள்ளைவலசை நான்கு முக்கு சந்திப்பு, சீவநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி, இலத்தூர் சந்திப்பு சாலை, ஈனாவிலக்கு உள்ளிட்ட பகுதிகளில் வாகன விபத்துகளை தடுக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டிருந்தது.
செங்கோட்டை:
செங்கோட்டையில் இருந்து சுரண்டை செல்லும் நெடுஞ்சாலை மிகவும் பிரதான சாலையாகும். இச்சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.
இந்த சாலையின் செங்கோட்டை நுழைவு பகுதி அருகில் அபாயகரமான வளைவு பகுதிகள், கணக்கபிள்ளைவலசை நான்கு முக்கு சந்திப்பு, சீவநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி, இலத்தூர் சந்திப்பு சாலை, ஈனாவிலக்கு உள்ளிட்ட பகுதிகளில் வாகன விபத்துகளை தடுக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டிருந்தது.
இதனால் பிரதான சாலையில் பெரும் அளவில் விபத்துகள் தடுக்கப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் வேகத்தடைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், இதனால் இலத்தூர் உள்ளிட்ட பிரதான சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் எனவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடைகள் அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் அமைத்து சீரான போக்குவரத்துக்கு வழிவகை செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சமூக ஆர்லவலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- செங்கோட்டை நகராட்சி பகுதிகளில் இருந்து சேகரிக்க ப்பட்ட மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் கழிவுகள் மராட்டிய மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- 2.450 டன் பிளாஸ்டிக் கழிவுகள் ஆலங்குளம் தனியார் நிறுவனம் மூலம் மராட்டிய மாநிலத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டது.
செங்கோட்டை:
செங்கோட்டை நகராட்சி பகுதிகளில் இருந்து சேகரிக்க ப்பட்ட மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் கழிவுகள் மராட்டிய மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதன்படி நெல்லை நகராட்சி மண்டல இயக்குனா் அறிவுரையின்படியும், நகராட்சி ஆணையாளா் ஜெயப்பிரியா உத்தரவின்படியும் சுகாதார அலுவலா் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளா் பழனிச்சாமி முன்னிலையில் 2.450 டன் பிளாஸ்டிக் கழிவுகள் ஆலங்குளம் தனியார் நிறுவனம் மூலம் மராட்டிய மாநிலத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டது.
நிகழ்ச்சியில் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- தென்காசி மாவட்டத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட கற்போர் கண்டறியப்பட்டு அடிப்படை எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு வழங்கப்பட்டு வருகிறது.
- மாவட்டத்தில் 9,476 பேர் கண்டறியப்பட்டு அதில் 491 கற்போர் மையங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
செங்கோட்டை:
தென்காசி மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் சார்பில் ஏராளமான, முற்றிலும் எழுத படிக்க தெரியாத 15 வயதுக்கு மேற்பட்ட கற்போர் கண்டறியப்பட்டு அடிப்படை எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 9,476 கற்போர் கண்டுபிடிக்கப்பட்டுள்ள னர். அவர்கள் 491 கற்போர் மையங்களில் சேர்க்கப்பட்டு தன்னார்வலர்கள் மூலம் தங்கள் பெயரை தாங்களே எழுதவும், அடிப்படை சொற்களை வாசிக்கவும் மற்றும் வாழ்க்கை கணக்குகள் செய்யவும் கற்று வருகின்றனர். அதன் அடிப்படையில் செங்கோட்டை வட்டார வள மையத்தை சேர்ந்த அரசு தொடக்கப்பள்ளி அனந்த புரத்தில் கற்போர் மையம் தொடங்கப்பட்டது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கனகலட்சுமி, மேற்பார்வையாளர் சுப்புலட்சுமி, தொடங்கி வைத்து கற்போருக்கு கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் வழங்கினர். தன்னார்வலர் முத்துமாரி கற்போருக்கு அடிப்படைக் கல்வி வழங்கினார்.
- செங்கோட்டை மேலூர் 14-வது வார்டு பகுதியில் அமைந்துள்ள சிமெண்ட் ரோட்டை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனா்.
- பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சிமெண்ட் ரோட்டை பொன்னுலிங்கம் திறந்து வைத்தார்.
செங்கோட்டை:
செங்கோட்டை மேலூர் 14-வது வார்டு பகுதியில் வெள்ளையப்பன் தெரு, பட்டங்கட்டியார் தெரு, மற்றும் சுப்பையா தெரு, நடுவில் அமைந்துள்ள சிமெண்ட் ரோட்டை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து தரும்படி தேர்தல் சமயத்தில் 14-வது வார்டு பகுதியில் போட்டியிட்ட பொன்னுலிங்கத்திடம் அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை வைத்தனா்.
இதனை ஏற்று 14-வது வார்டு நகர்மன்ற உறுப்பினா் பொன்னுலிங்கம் பொது மக்களிடம் உறுதிமொழி பெற்று, செங்கோட்டை நகராட்சியிடம் முறையாக அனுமதி பெற்று நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி தலைமையிலும், நகராட்சி ஆணையாளா் (பொறுப்பு) ஜெயப்பிரியா, நகராட்சி சுகாதார அலுவலா் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் அந்த சிமெண்ட் ரோட்டை பொன்னுலிங்கம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இதனையடுத்து 14-வது வார்டு பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கும், நகர்மன்ற உறுப்பினா் பொன்னுலிங்கத்திற்கும் நன்றி தெரிவித்தனா். நிகழ்ச்சியில் நகராட்சி பணியாளா்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனா்.
- கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதி ஆண்டு இளங்கலை மாணவர்கள் 9 பேர் செங்கோட்டை வட்டாரத்தில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக முகாமிட்டு விவசாயிகளோடு தங்களுடைய விவசாய அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.
- நிகழ்ச்சிக்கு செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் சேக்முகைதீன் தலைமைதாங்கினார்.
செங்கோட்டை:
செங்கோட்டையில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்மலர் உத்தரவின் பேரில் தென்காசி வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சரவணன் ஆலோசனையின் பேரில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் சேக்முகைதீன் மாணவர்களுக்கு சிறப்பான வழிகாட்டுதலை செய்துள்ளார். செங்கோட்டை பகுதியில் விவசாயிகள் பிசான நெல் சாகுபடி செய்து வரும் நிலையில் வேளாண் கல்லூரி மாணவர்கள் விவசாயிகளிடம் வரிசை நடவில் நடப்பட்டுள்ள திருந்திய நெல் சாகுபடி திடல்களில் களை கட்டுப்பாட்டினை கோனோ வீடர் என்ற உருளும் களை கருவிக் கொண்டு எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதை செயல் விளக்கம் செய்து காட்டினார்.
நிகழ்ச்சிக்கு செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் சேக்முகைதீன் தலைமைதாங்கினார். இறுதி ஆண்டு இளங்கலை வேளாண்மை பட்டப் படிப்பு மாணவர்கள் ரகுநந்தன், சஞ்சீவி, வெயிலுமுத்து குமரன், துரைப்பாண்டி, வல்லரசு, மணிகண்டன், ராஜ் செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொண்டு செயல் விளக்கத்துக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- செங்கோட்டை அருகே உள்ள பண்பொழியில் விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் பதப்படுத்தப்பட்ட மாட்டுத் தீவன புல் குறித்த செயல் விளக்க பயிற்சி வழங்கினர்.
- இதில் சைலேஜ் எவ்வாறு உற்பத்தி செய்வது, அதனை கால்நடைகளுக்கு தீவனமாக கொடுப்பது குறித்தும் செயல் விளக்கம் அளித்தனா்.
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே உள்ள பண்பொழியில் விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் பதப்படுத்தப்பட்ட மாட்டுத் தீவன புல் குறித்த செயல் விளக்க பயிற்சி வழங்கினர்.
இதில் வேளாண் அலுவலர் சரவணன் அறிவுரையின்படி வாசு தேவநல்லூா் தங்கப்பழம் வேளாண் கல்லூரியின் 4-ம் ஆண்டு மாணவிகள் அஞ்சலி, பிருந்தா, பரமேஸ்வரி, ரியா, கண்மணி, மதுமிதா, செல்வமங்கை, சுப்புலட்சுமி, உமினாமீனா ஆகியோர் கிராம தங்கல் பயிற்சியின் ஒரு பகுதியாக விவசாயிகளுக்கு சைலேஜ் குறித்து செயல் விளக்க பயிற்சியினை அளித்தனர்.
இதில் சைலேஜ் எவ்வாறு உற்பத்தி செய்வது, அதனை கால்நடைகளுக்கு தீவனமாக கொடுப்பது குறித்தும் செயல் விளக்கம் அளித்தனா். பயிற்சி முகாமில் திரளான விவசா யிகள் கலந்து கொண்டனர்.
- பருவநிலை மாற்றத்தினால் அவ்வப்போது வனப்பகுதிகளை விட்டு வனவிலங்குகள் வெளியேறி ஊருக்குள் வருவது என்பது தொடர்கதையாக விளங்கி வருகிறது.
- தமிழக கேரள எல்லையான மேக்கரை - அச்சன்கோவில் செல்லும் சாலையில் உள்ள தமிழக - கேரளா சோதனை சாவடி அருகே சில தினங்களுக்கு முன்பு பகலில் சிறுத்தை ஒன்று நின்றபடி அங்கு பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த வன ஊழியர்களை பார்த்துக் கொண்டிருந்துள்ளது.
செங்கோட்டை:
தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, மிளா மான், மான், கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான வன உயிரினங்கள் உள்ளன.
பரவ நிலை மாற்றத்தி னால் அவ்வப்போது வனப் பகுதிகளை விட்டு வனவிலங்குகள் வெளியேறி ஊருக்குள் வருவது என்பது தொடர்கதையாக விளங்கி வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடையம் அருகே கரடி ஒன்று மூன்று பேரை கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள சூழ்நிலையில் வன உயிரினங்களின் நட மாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றனர்.
சிறுத்தை
இந்நிலையில், தமிழக கேரள எல்லையான மேக்கரை - அச்சன்கோவில் செல்லும் சாலையில் உள்ள தமிழக - கேரளா சோதனை சாவடி அருகே சில தினங்களுக்கு முன்பு பகலில் சிறுத்தை ஒன்று நின்றபடி அங்கு பாதுகாப்புக்காக நின்று கொண்டி ருந்த வன ஊழியர் களை பார்த்துக் கொண்டிருந்துள்ளது.
இதை பார்த்த வன ஊழியர்கள் அவர்களது செல்போனில் சிறுத்தையை புகைப்பட எடுத்த சூழலில், சிறுத்தை சோதனை சாவடி நோக்கி அடியெடுத்து வைக்கவே, வன ஊழியர்கள் பாதுகாப்பு கருதி உடனே அங்கிருந்த அறைக்குள் சென்றுள்ளனர்.
அறிவுறுத்தல்
மேலும், பகலிலே அச்சன்கோவில் சாலையில், வன உயிரினங்கள் நட மாட்டம் அதிகம் இருப்பதால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக செல்ல வேண்டும் எனவும், அச்சன்கோவில் சாலையில் இரவு நேர பயணங்களை தவிர்ப்பது நல்லது எனவும் வனத்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கி வருகின்றனர்.
- செங்கோட்டை பஸ் நிலையம் அருகில் சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் முழுஉருவச்சிலை கடந்த 1986-ம் ஆண்டு திறக்கப்பட்டது.
- செங்கோட்டை நகராட்சி தலைவர் ராமலெட்சுமி தனது சொந்த பணம் ரூ.50ஆயிரம் செலவில் வாஞ்சிநாதன் சிலைக்கு வர்ணம் பூச ஏற்பாடு செய்தார்.
செங்கோட்டை:
செங்கோட்டை பஸ் நிலையம் அருகில் சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் முழுஉருவச்சிலை கடந்த 1986-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த சிலை பராமரிக்கப்படாமல் இருந்து வந்தது. இதையறிந்த செங்கோட்டை நகராட்சி தலைவர் ராமலெட்சுமி தனது சொந்த பணம் ரூ.50ஆயிரம் செலவில் வாஞ்சிநாதன் சிலைக்கு வர்ணம் பூச ஏற்பாடு செய்தார்.அதைத்தொடர்ந்து வண்ணம் பூசும் பணிகள் மற்றும் சீரமைப்பு முழுவீச்சில் நடந்து முடிந்தது.
குடியரசு தினத்தை முன்னிட்டு வெண்கல சிலையை நகராட்சி தலைவர் ராமலட்சுமி திறந்து வைத்தார். இதில் நகராட்சி துணைத்தலைவர் நவநீதகிருஷ்ணன், உறுப்பினர்கள் முத்துப்பாண்டி பேபி ரெசவு பாத்திமா, மேரிஅந்தோணிராஜ், இந்துமதி சக்திவேல், செல்வகுமாரி முத்தையா, முன்னாள் நகராட்சி உறுப்பினர்கள் திலகர், ராஜகோபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
- முகாமில் மொத்தம் சுமார் 230பேர் கலந்து கொண்டனா். அதில் 72பேருக்கு மருந்து வழங்கப்பட்டது. 42பேருக்கு கண்ணாடி வழங்கப்பட்டது. 40பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
செங்கோட்டை:
செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம், கன்னி யாகுமரி விவேகானந்தா கேந்திரம், பிரானுார், பார்டர் மர வியாபாரிகள், சாமில் உரிமையாளா்கள் சங்கம் சார்பில் நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. சாமில் உரிமையாளா்கள் சங்க நிர்வாகி தொழிலதிபர் படேல் குரூப்ஸ் அம்ரூத்படேல்மோகன் தலைமை தாங்கினார்.
பள்ளி நாட்டுநலப்பணி திட்ட அலுவலா் முருகன், மேலச்செங்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியா் ராஜன், தமிழ்நாடு நுகர்வோர் உரிமை பாதுகாப்பு மைய மாநில செயலாளா் மணிமகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். அதனைதொடா்ந்து ரமிளாமோகன், சாமில் உரிமையாளா்கள் சங்க நிர்வாகி காஞ்சனாபிரவீன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனா்.
கேந்திர அன்பர்கள் கல்யாணக்குமார், கோமதிநாயகம், பேச்சிமுத்து நுாலகர் ராமசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். முகாமில் அரவிந்த் கண் மருத்துமனை மருத்துவா்கள் மற்றும் குழுவினா் கண் சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினா். முகாமில் மொத்தம் சுமார் 230பேர் கலந்து கொண்டனா். அதில் 72பேருக்கு மருந்து வழங்கப்பட்டது.
42பேருக்கு கண்ணாடி வழங்கப்பட்டது. 40பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். முகாமில் செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று சென்றனா். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள், கேந்திர தொ ண்டா்கள், சுபம் அமைப்புசாரா தொழி லாளா்கள் சங்க அலுவலக மேலாளா் கோபக்கு மார், சிவக்குமார், முத்து மாரியப்பன், சத்யபாமா சமூக ஆர்வலா்கள் செய்திருந்தனா்.