என் மலர்
நீங்கள் தேடியது "Serbia"
- வர்ச்சர் பகுதியில் இயங்கி வரும் பள்ளியில் துப்பாக்கி சூடு நடைபெற்றது.
- போலீசார், அவசர கால மீட்பு படையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செர்பியா நாட்டின் பெல்கிரேட் பகுதியில் உள்ள பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் சிக்கி எட்டு குழந்தைகள் மற்றும் காவலர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக 14 வயது சிறுவனை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

14 வயது சிறுவன் தனது தந்தையின் துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கி சூடு நடத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. செர்பியா தலைநகரில் உள்ள வர்ச்சர் பகுதியில் இயங்கி வரும் பள்ளியில் துப்பாக்கி சூடு நடைபெற்றது. எட்டு குழந்தைகள் உள்பட மொத்தம் ஒன்பது பேர் உயிரிழந்த நிலையில், ஆறு மாணவர்கள் மற்றும் ஆசிரியர் காயமுற்றனர்.
துப்பாக்கி சூடு ஐந்து நிமிடங்கள் வரை நடைபெற்று இருக்கிறது. போலீசார், அவசர கால மீட்பு படையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படிப்பில் நல்ல கவனம் செலுத்தி வந்த மாணவர் போதை பழக்கத்தில் இவ்வாறு செய்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
- தூதரகத்துக்கு வில்-அம்புடன் நபர் ஒருவர் வந்தார்.
- நபர் குறித்த விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை.
செர்பியா நாட்டு தலைநகர் பெல்கிரேடில் இஸ்ரேல் தூதரகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் தூதரகத்துக்கு வில்-அம்புடன் நபர் ஒருவர் வந்தார்.
அவர் திடீரென்று அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது தாக்குதல் நடத்த முயன்றார். அங்கிருந்த போலீஸ்காரர் மீது அம்பை எய்தாா். இதில் கழுத்தில் அம்பு பாய்ந்து காவலா் காயமடைந்தாா். உடனே போலீஸ்காரர் தற்காப்புக்காக அம்பு வைத்திருந்த நபரை நோக்கி துப்பாக்கியால் சுட்டாா். இதில் அந்த நபா் உயிரிழந்தாா்.
தாக்குதலில் காயமடைந்த போலீஸ்காரரை மருத்துவ மனையில் சேர்த்தனர். அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தாக்குதலில் ஈடுபட்ட நபர் குறித்த விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை.
காசாவில் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் இஸ்ரேலுடன் சொ்பியா நட்புறவை பேணி வரும் சூழலில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக செர்பியா பிரதமர் மிலோஸ் வுசெவிக் கூறும்போது, `இது கொடூரமான பயங்கரவாத செயல். இது எந்த மதத்திற்கும் எந்த தேசத்திற்கும் காரணமாக இருக்க முடியாது. இது ஒரு தனிநபரின் குற்றம்' என்றார்.
இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் கூறும்போது, `செர்பியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தின் அருகே பயங்கரவாதத் தாக்குதலுக்கு முயற்சிக்கப்பட்டுள்ளது. தூதரகம் மூடப்பட்டுள்ளது மற்றும் தூதரகத்தின் எந்த ஊழியரும் காயமடையவில்லை. தாக்குதல் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது' என்று தெரிவித்தார்.
- விபத்தில் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர்.
- சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெல்கிரேட்:
செர்பியா நாட்டின் நோவி சட் நகரில் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. அந்த ரெயில் நிலையத்தில் வழக்கம்போல பயணிகள் ரெயிலுக்கு காந்திருந்தனர்.
அப்போது திடீரென ரெயில் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர்.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்த 4 பேரை மீட்டனர் ஆனாலும், இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பல்கலைக்கழகங்களுக்கான நிதி அதிகரிப்பு குறித்த வாக்கெடுப்பு இன்று நடைபெற இருந்தது.
- ஆளுங்கட்சி உறுப்பினரான ஜாஸ்மினா ஒப்ராடோவிக் என்பவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது.
செர்பியா நாட்டு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கண்ணீர் குண்டுகள், புகைகுண்டுகளை வீசியதால் 3 எம்பிக்கள் காயமடைந்தனர்.
இன்று (மார்ச் 04) கூடிய மக்களவை கூட்டத்தின்போது சேர்பியன் ப்ராக்ரசிவ் கட்சி தலைமயிலான ஆளும் கூட்டணி (SNS) யை எதிர்த்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
பல்கலைக்கழகங்களுக்கான நிதி அதிகரிப்பு குறித்த வாக்கெடுப்பு இன்று நடைபெற இருந்தது. ஆனால் இந்த அவை சட்டவிரோதமானது என்றும் அந்நாட்டு பிரதமர் மிலோஸ் உசெவிகின் ராஜினாமாவை முதலில் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் எதிர் கட்சி எம்பிக்கள் சிலர் தங்களது இருக்கைகளை விட்டு இறங்கி மக்களவை சபாநாயகரை நோக்கி ஓடினர். அவர்களுக்கும் அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதற்கிடையே மற்ற சில எதிர்கட்சி உறுப்பினர்கள் கருப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிற புகைக்குண்டுகளை மக்களவைக்குள் வீசி, அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் சுமார் 3 எம்பிக்கள் காயமடைந்துள்ளனர் என்றும் ஆளுங்கட்சி உறுப்பினரான ஜாஸ்மினா ஒப்ராடோவிக் என்பவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் சபாநாயகர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த 4 மாதங்களுக்கு முன் ரெயில் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து 15 பேர் பலியான விபத்தின் பின்னணியில் உள்ள ஊழலை எதிர்த்து மக்கள் போராட்டம் வெடித்தது.
இதன் தொடர்ச்சியாக கடந்த ஜனவரி மாதம் அந்நாட்டு பிரதமர் உசெவிக் தனது பதவியை ராஜிநாமா செய்தார். ஆனால் அவரது ராஜிநாமா மக்களவையில் உறுதி செய்யப்படாமல் மற்ற வேலைகளில் ஈடுபட்டதினால் எதிர் கட்சியினர் தற்போது அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

செர்பியா, கிரீஸ், பல்கேரியா, ருமேனியா ஆகிய நாடுகள் இணைந்து 2028-ம் ஆண்டு ஐரோப்பிய கால்பந்து போட்டியையோ அல்லது 2030-ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டியையோ நடத்துவதற்கான உரிமத்தை கோர முடிவு செய்துள்ளது. இதற்கான முயற்சியில் இறங்குவதற்காக ஒவ்வொரு நாட்டின் சார்பில் தலா 4 பிரதிநிதிகள் கொண்ட ஒருங்கிணைப்பு கமிட்டி அமைக்கப்படுகிறது. #WorldCup2030 #Euro2028
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் உலக குரூப் பிளே-ஆப் சுற்று ஆட்டத்தில் இந்தியா-செர்பியா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் செர்பியாவில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் வீரர்கள் யார்? யாருடன் மோதுவார்கள் என்பது நேற்று அறிவிக்கப்பட்டது.
இன்று நடைபெறும் முதலாவது ஒற்றையர் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 135-வது இடத்தில் உள்ள இந்திய வீரர் ராம்குமார், 86-வது இடத்தில் உள்ள செர்பியா வீரர் லாஸ்லோ ஜெரோவை சந்திக்கிறார். மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 162-வது இடத்தில் உள்ள இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், 56-ம் நிலை வீரரான செர்பியாவின் துசான் லாஜோவிக்குடன் மோதுகிறார்.
நாளை நடைபெறும் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ஸ்ரீராம் பாலாஜி ஜோடி, செர்பியாவின் நிகோலா மிலோஜெவிக்-டேனிலோ பெட்ரோவிக் இணையை எதிர்கொள்கிறது. நாளை மறுநாள் நடைபெறும் மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் ராம்குமார், துசான் லாஜோவிக்கையும், பிரஜ்னேஷ் குணேஸ்வரன், லாஸ்லோ ஜெரோவையும் சந்திக்கின்றனர். செர்பியா அணியில் சமீபத்தில் நடந்த அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீரருமான ஜோகோவிச் இடம் பெறாததால் இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது. அதேநேரத்தில் காயம் அடைந்த யுகி பாம்ப்ரி இந்திய அணியில் இடம் பெறாதது ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது.
இந்த போட்டி குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ஜீஷன் அலி கருத்து தெரிவிக்கையில், ‘களிமண் தரையில் நடைபெறும் இந்த போட்டியில் நமது அணியில் யுகி பாம்ப்ரி இடம் பெறாததால் பெரிய பின்னடைவு எதுவும் இல்லை. கடந்த 9 மாதங்களில் யுகி பாம்பிரி களிமண் தரையில் நடைபெறும் போட்டியில் ஒன்றிரண்டில் மட்டுமே விளையாடி இருக்கிறார். நமது மற்ற வீரர்களை விட யுகி பாம்ப்ரி தரவரிசையில் உயர்ந்தவர் என்றாலும், களிமண் தரையிலான போட்டிக்கு அவருக்கு ஆட்டம் பொருந்தாது. ராம்குமார், பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ஸ்ரீராம் பாலாஜி ஆகியோர் ஐரோப்பியாவில் களிமண் தரை ஆடுகளங்களில் பயிற்சி பெற்று வருகிறார்கள். அந்த அனுபவத்தை இந்த போட்டியில் அவர்கள் பயன்படுத்துவார்கள்’ என்றார். #DavisCup #India #Serbia



21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி வருகிற 14-ந் தேதி ரஷியாவில் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் அணிகள் வெவ்வேறு அணிகளுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. இதில் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த பயிற்சி ஆட்டம் ஒன்றில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள மொராக்கோ அணி, சுலோவக்கியாவை சந்தித்தது. இதில் மொராக்கோ அணி 2-1 என்ற கோல் கணக்கில் சுலோவக்கியாவை வீழ்த்தியது. சுலோவக்கியா அணி வீரர் ஜான் கிரிக்ஸ் 59-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். மொராக்கோ அணி தரப்பில் அயூப் எல் காபி 63-வது நிமிடத்திலும், யூனஸ் பெல்ஹன்டா 74-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
ஆஸ்திரியாவில் உள்ள கிராஸ் நகரில் நடந்த பயிற்சி ஆட்டத்தில் ‘இ’ பிரிவில் இடம் பெற்றுள்ள செர்பியா, தகுதி பெறாத சிலி அணியுடன் மோதியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் செர்பியா அணி 0-1 என்ற கோல் கணக்கில் சிலியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது. சிலி வீரர் குல்லெர்மோ மாரிபன் 89-வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்தார். செர்பியா அணியினர் கோல் அடிக்க கிடைத்த நல்ல வாய்ப்புகளை வீணடித்தனர்.
