search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "set stage"

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்பதற்காக வண்ணாரப்பேட்டை விருந்தினர் மாளிகையில் இருந்து இன்று காலை புறப்பட்டு வந்தார்.
    • விவசாயம், இல்லம் தேடிக் கல்வி, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், நான் முதல்வன் திட்டம், மாணவ-மாணவிகளுக்கு இலவச சிற்றுண்டி, ஊனமுற்றோருக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை விளக்கும் வகையிலான பேனர்களை 11 மேடைகளாக அமைக்கப்பட்டு இடம்பெற்று இருந்தன.

    நெல்லை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்பதற்காக வண்ணாரப்பேட்டை விருந்தினர் மாளிகையில் இருந்து இன்று காலை புறப்பட்டு வந்தார்.

    அவருக்கு தி.மு.க.வினர் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அந்த வகையில் முன்னாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா மற்றும் தச்சை பகுதி தி.மு.க. செயலாளர் தச்சை சுப்பிரமணியன் ஆகியோரது ஏற்பாட்டில் பாளை நீதிமன்றம் அருகே உள்ள ஒரு பள்ளி முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய திட்டங்களை விளக்கி மேடை அமைக்கப்பட்டிருந்தது.

    விவசாயம், இல்லம் தேடிக் கல்வி, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், நான் முதல்வன் திட்டம், மாணவ-மாணவிகளுக்கு இலவச சிற்றுண்டி, ஊனமுற்றோருக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை விளக்கும் வகையிலான பேனர்களை 11 மேடைகளாக அமைக்கப்பட்டு இடம்பெற்று இருந்தன.

    அவற்றை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன், மாநகராட்சி கவுன்சிலர் கோட்டையப்பன் மற்றும் நிர்வாகிகள் ஆ.க.மணி, பொன்னையா பாண்டியன், பகுதி செயலாளர் கோபி என்ற நமச்சிவாயம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×