என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "settle"
- தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகம் சார்பாக நிதி ஆப்கே நிகட் என்ற பெயரில் ஜனவரி மாத குறைதீர் கூட்டங்கள் வருகிற 10-ந்தேதி நடைபெறுகிறது.
- அதன்படி சேலம் ஸ்டீல் பிளான்ட் ரோடு தளவாய்பட்டியில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்தில் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் தலைமையில் கூட்டம் நடக்கிறது.
சேலம்:
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல ஆணையாளர் விஜய் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகம் சார்பாக நிதி ஆப்கே நிகட் என்ற பெயரில் ஜனவரி மாத குறைதீர் கூட்டங்கள் வருகிற 10-ந்தேதி நடைபெறுகிறது. அதன்படி சேலம் ஸ்டீல் பிளான்ட் ரோடு தளவாய்பட்டியில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்தில் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் சிவகுமார் தலைமையில் கூட்டம் நடக்கிறது.
இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலகம் மேற்கு இணைப்பு சாலை, கூட்டுறவு காலனி, கிருஷ்ணகிரி என்ற முகவரியில் மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையாளர் ஹிமான்ஷு தலைமையிலும், ஈரோடு மாவட்ட அலுவலகம் ராஜ்மெஜஸ்டிஸ்ட், காவேரி சாலை, ஈரோடு சேலம் பிரதான சாலை கருங்கல்பாளையம், ஈரோடு, என்ற முகவரியில் அமலாக்க அதிகாரி வீரேஷ் தலைமையிலும் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டங்களில் வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைகளை தெரிவிக்க விரும்பும் உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் அதுகுறித்த விவரங்களுடன், தங்களது பெயர், தொழில் மையம், நிறுவன முகவரி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எண், யு. ஏ. என். எண், டெலிபோன் மற்றும் செல்போன் எண்கள் ஆகிய விவரங்களை 9-ந் தேதிக்கு முன்னதாக இந்த அலுவலகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும்.
ஈரோடு மாவட்ட அலுவலகம் அல்லது கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலகம் அல்லது மின்னஞ்சல் முகவரியிலும் பதிவு செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சேலம் மாவட்டத்தில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
- ஏற்காட்டில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக ஏற்காட்டில் நேற்று கனமழை கொட்டியது. ஏற்காட்டில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மேலும் ஏற்காட்டில் பனிமூட்டம் நிலவியதால் சுற்றுலா வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி ஊர்ந்து சென்றன. இதனால் நேற்று கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 30.4 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஆணை மடுவு 11 மில்லி மீட்டர் , கரிய கோவில் 7 என மாவட்டம் முழுவதும் 48.40 பெய்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்