search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sewer canal"

    • ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம், அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மங்கலம் சாலையில் உள்ள ஆண்டிபாளையம் முதல் இடுவம்பாளையம் வரை சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக சாக்கடை நீர் சாலைகளில் செல்வதால் அப்பகுதியில் உள்ள முல்லை நகர் ,அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

    இது தொடர்பாக பலமுறை மாநகராட்சி அதிகாரியிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது .தகவல் கிடைத்ததும் திருப்பூர் மத்திய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம், அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதை அடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • சாக்கடை நீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது.
    • இதுவரைக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    வீரபாண்டி:

    திருப்பூர் மாநகராட்சி 53வது வார்டு நொச்சிப்பாளையம் பிரிவு மூலக்கடையில் உள்ள சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் 2 ஆண்டுகளாக உள்ளது.

    திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள பாலத்தின் அடியில் சாக்கடை மண் நிரம்பியுள்ளது. இதனால் சாக்கடை நீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது.

    இதனால் தூர்நாற்றம் வீசுகிறது. கொசு உற்பத்தியாகி பலவகை வைரஸ் நோய்கள் ஏற்படுகின்றன. மக்கள் பிரதிநிதி வந்த பின்பு இதற்கு தீர்வு ஏற்படும் என எதிர்பார்த்த நிலையில் இதற்கு இதுவரைக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே எங்களின் நீண்டநாள் கோரிக்கையை திருப்பூர் மேயர் மற்றும் நான்காம் மண்டலத்தலைவர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அரக்கோணம் அருகே கழிவுநீர் கால்வாயில் பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் பஜனைகோவில் தெருவை சேர்ந்தவர் ரகுபதி இவரது மனைவி அம்சா (எ) வள்ளி (வயது 40). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். ரகுபதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் அம்சா எந்தவித ஆதரவுமின்றி அந்த பகுதியில் வசித்து வந்தார்.

    இந்நிலையில் திரு.வி.க.தெருவில் உள்ள கழிவு நீர் கால்வாயில் அம்சா இன்று காலை இறந்துகிடந்தார். இதனை கண்ட பொதுமக்கள் அரக்கோணம் கிராம நிர்வாகி வேலுவிற்கும் அரக்கோணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

    சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், சப்-இன்ஸ் பெக்டர் மஞ்சுநாத் மற்றும் போலீசார் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் உடலை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் அம்சா உடலில் காயங்கள் இருந்தன எனவே அவர் கழிவுநீர் கால்வாயில் தவறி விழந்ததில் ஏற்பட்ட காயங்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×