search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sewerage system"

    • பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பாதிப்பு
    • கடந்த வாரம் அந்த வழியாக வந்த தனியார் லாரி ஒன்று புதிதாக கட்டப்பட்ட கால்வாய் மீது மோதி நின்றது.

    புதுச்சேரி:

    திருபுவனை அருகே உள்ள மதகடிப்பட்டு பாளை யத்தில் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிப்படைந்துள்ளனர். மண்ணாடிப்பட்டு கொம்யூன் திருபுவனை தொகுதியில் உள்ள, மதகடிப்பட்டுபாளையம் பகுதியில் கடலூர் சாலை யில் பொதுப்பணித்துறை கழிவு நீர் பாசன உட்கோட்டத்தின் மூலம் கழிவு நீர் வாய்க்கால் மேம்படுத்தும் பணி நடைபெற்று வந்தது.

    அந்தப் பகுதியில் உள்ள துலுக்கான மாரியம்மன் கோவிலுக்கு செல்ல குறுக்கே கழிவு நீர் வாய்க்கால் அமைக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் துலுக்கான மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான தேர் திருவிழா காலங்களில் அந்த வழியாக தேரின் சக்கரங்கள் சென்று திரும்புவதற்கு தரமான சாலையை அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    தேர் திரும்பும் பகுதியில் இரும்பிலான கான்கிரீட் சாலையை போடும்படி பொதுமக்கள் ஒப்பந்ததார ர்களிடம் கேட்டுக் கொண்டனர். ஆனால் அரசு அதற்கு அதிக செலவில் சாலைகள் போடுவதற்கு நிதி அளிக்க வில்லை என்றும் தற்போது ஒதுக்கப்பட்ட நிதியில் மட்டுமே கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படும் என்று பொதுப்பணித்துறை பொறியாளர்கள் பொது மக்களுக்கு பதில் அளித்தனர்.

    இதனால் பொது மக்களுக்கும் அதிகாரி களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது அந்தப் பகுதியில் கால்வாய் அமைக்கும் பணி நின்று போனது. கடந்த வாரம் அந்த வழியாக வந்த தனியார் லாரி ஒன்று புதிதாக கட்டப்பட்ட கால்வாய் மீது மோதி நின்றது.

    இதனால் 3 மீட்டர் தூரத்திற்கு கால்வாய் தடுப்பு சுவர்கள் உடைந்தன. இதனால் ஒப்பந்ததாரருக்கு நஷ்டம் ஏற்பட்ட நிலையில் தற்போது அந்த பகுதியில் கால்வாய் அமைக்கும் பணி பாதியிலேயே நின்று போய் உள்ளது. இதனால் திருபுவனை-கடலூர் சாலையில் உள்ள கிராம தெருக்கள் துண்டிக்கப்பட்டு, அந்த வழியாக வாகனங்கள், பொதுமக்கள் செல்ல முடியாமல் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து பொது மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.

    • யூ வடிவ கழிவு நீர் வாய்க்கால் புதுவை ஸ்மார்ட் சிட்டி வளர்ச்சி திட்ட நிதியிலிருந்து சுமார் 98 லட்சம் மதிப்பில் கட்டுமான பணி புதுவை நகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.
    • பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி புதிய கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட திருவள்ளுவர் நகர் கருவூலத்தில் இருந்து திருவள்ளுவர் நகர் வழியாக செல்லும் புதுவை நகராட்சிக்கு சொந்தமான யூ வடிவ கழிவு நீர் வாய்க்கால், சோலை நகர் வடக்கு மீனவர் பகுதி சிங்காரவேலர்சிலை அருகில் இருந்து கடலை நோக்கி செல்லும் நகராட்சி யூ வடிவ கழிவு நீர் வாய்க்கால் புதுவை ஸ்மார்ட் சிட்டி வளர்ச்சி திட்ட நிதியிலிருந்து சுமார் 98 லட்சம் மதிப்பில் கட்டுமான பணி புதுவை நகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இதற்கான பூமி பூஜை நடைபெற்றது. பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி புதிய கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் மற்றும் உள்ளாட்சி துறை செயலர் வல்லவன் மற்றும் ஸ்மார்ட் சிட்டி வளர்ச்சி திட்ட தலைமை செயல் அதிகாரி அருண், உள்ளாட்சி துறை இயக்குனர் ரவி தீப் சிங் சஹார் மற்றும் புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமார், செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் பழனி ராஜா, இளநிலை பொறியாளர் சிவசுப்பிரமணியம் மற்றும் நகராட்சி ஊழியர்களும் எம்.எல்.ஏ. ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

    ×