என் மலர்
நீங்கள் தேடியது "Sexual abuse"
- பிரிட்டன் ராணி எலிசபெத்தின் இரண்டாவது மகனும் இளவரசருமான ஆண்ட்ரூவும் மீதான வர்ஜீனியாவின் குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
- ஜெஃப்ரி எப்ஸ்டீன் தன்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகவும், பாலியல் அடிமையாகப் பயன்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் அமெரிக்க தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்து பரபரப்பை வர்ஜீனியா கியூஃப்ரே உயிரிழந்தார்.
41 வயதான வர்ஜீனியா ஆஸ்திரேலியாவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டு இறந்து கிடந்தார். வர்ஜீனியா தற்கொலை செய்து கொண்டதை குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.
அமெரிக்க கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் மற்றும் பிரிட்டன் ராணி எலிசபெத்தின் இரண்டாவது மகனும் இளவரசருமான ஆண்ட்ரூவும் மீதான வர்ஜீனியாவின் குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தன்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகவும், பாலியல் அடிமையாகப் பயன்படுத்தியதாகவும், இளவரசர் ஆண்ட்ரூவும் 17 வயதில் தன்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகவும் வர்ஜீனியா குற்றம்சாட்டினார்.
இளவரசர் ஆண்ட்ரூவுடன் உடலுறவு கொள்ள ஜெஃப்ரி எப்ஸ்டீன் தனக்கு 15,000 டாலர் கொடுத்ததாக கியூஃப்ரே வெளிப்படுத்திய ஆதாரங்கள் அடங்கிய நீதிமன்ற ஆவணங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. மேலும் பல சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் மீது சுமத்தப்பட்டன.
இந்த வழக்கில் 2008 இல் தண்டனை பெற்ற ஜெஃப்ரி எப்ஸ்டீன், 2019 இல் நியூயார்க் நகர சிறையில் தற்கொலை செய்து கொண்டார். பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை தொடர்ந்து தொடர்ந்து ஆண்ட்ரூ தனது அரச பட்டங்களை இழந்தார்.
- தனது மனைவியை உடலாலும், மனதாலும் சித்ரவதை செய்து வந்துள்ளார்.
- திருமணத்தின்போது 12 பவுன் நகை, ரூ.2லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரி சைகள் கொடுக்கப்பட்டு ள்ளது.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் வெள்ளையம்மாள்புரம் ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் கவிதா(26). இவருக்கு 16 வயது இருக்கும் போதே கார்த்திக்(35) என்பவருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்தின்போது 12 பவுன் நகை, ரூ.2லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரி சைகள் கொடுக்கப்பட்டு ள்ளது.
இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகள் உள்ளார். திருமணத்தில் இருந்தே கணவர் சரிவர வேலைக்கு செல்லாமல் குடும்ப தேவைக்கும் பணம் கொடுக்காமல் இருந்து வந்துள்ளனர். மேலும் தனது மனைவியை உடலாலும், மனதாலும் சித்ரவதை செய்து வந்துள்ளார். மேலும் அவரது நகைகளையும் பறித்து வைத்துக்கொண்டு தராமல் இருந்துள்ளார்.
இதுகுறித்து உத்தம பாளையம் அனைத்து மகளிர் போலீசில் கவிதா புகார் அளித்தார். அதன்பே ரில் கார்த்திக், அவரதுதந்தை சோனைமுத்து, தங்கை சோபனா(28) ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பிலிப்பைன்ஸில் இந்த பாதிரியரை பல லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.
- போலி பாதிரியாரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டேவின் நீண்டகால நண்பர் அப்போலோ குயிபோலொய் என்ற போலி பாதிரியார், பாலியல் குற்றச்சாட்டு மற்றும் ஆள் கடத்தல் போன்ற குற்ற செயல்களில் சிக்கினார். இதைத் தொடர்ந்து எஃப்பிஐ-இன் அதிகம் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
இவர் மீது அமெரிக்க நீதித்துறை கடந்த 2021 ஆம் ஆண்டு 12 முதல் 25 வயதுடைய சிறுமிகள் மற்றும் பெண்களை தன்னுடன் கட்டாய பாலியல் உறவு வைத்துக் கொள்ள செய்ததாக குற்றம்சாட்டியது. மேலும் இவர் மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம், அமெரிக்க தேவலயங்களுக்கு மக்களை சட்டவிரோத விசாக்கள் மூலம் அழைத்து வந்தது போன்ற குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.
இவ்வாறு சட்டவிரோதமாக அமெரிக்கா அழைத்து வரப்பட்டவர்களை கொண்டு தொண்டுபணிகள் மற்றும் தேவாலய நிர்வாகத்திற்காக நிதி திரட்ட வைத்தது, அந்த பணத்தை கொண்டு ஆடம்பர வாழ்க்கையை நடத்தி வந்தது போன்ற குற்றங்களில் அப்போலோ பாதிரியர் ஈடுபட்டு வந்துள்ளார். பிலிப்பைன்ஸில் இந்த பாதிரியரை பல லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.
தன்னை பிரபஞ்சத்தின் உரிமையாளர் என்றும், கடவுளால் நியமிக்கப்பட்ட மகன் என்றும் கூறிக் கொள்ளும் அப்போலோ பாதிரியார் நேற்று (ஞாயிற்றுக் கிழமை) கைது செய்யப்பட்டார். இவரை கைது செய்ய 2 ஆயிரம் காவலர்கள், ஹெலிகாப்டர் மற்றும் தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டு உள்ளன.
74 ஏக்கர் பரப்பளவு கொண்ட வளாகத்தில் போலீசார் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக நடத்திய தேடுதல் வேட்டையில், போலி பாதிரியாரை போலீசார் கண்டுபிடித்தனர். அத்தனை பிரபலமாக இருந்த போதிலும், போலீஸ் தேடலுக்கு அஞ்சி பங்கர் ஒன்றில் மறைந்திருந்த போலி பாதிரியாரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
செங்கோட்டை அருகே உள்ள கட்டளைகுடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் காங்கேயன்(வயது 60). இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 7-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை பாலியல் சீண்டல்கள் செய்துள்ளார்.
உடனே அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் காங்கேயனை எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 25-ந்தேதி சிறுமியை மீண்டும் காங்கேயன் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் தென்காசி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் காங்கேயன் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.
இதற்கிடையே காங்கேயன் போலீசாருக்கு பயந்து தலைமறைவானார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அங்கு வந்த தர்மராஜ் எனக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக புகரில் சிறுமி தெரிவித்துள்ளார்.
- போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மராஜை தேடி வருகின்றனர்.
திருச்செந்தூர்:
நாசரேத் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் 10-ம் வகுப்பு படித்து வருகிறேன். எங்கள் பகுதிக்கு நாசரேத் பிரகாசபுரத்தை சேர்ந்த வியாபாரியான தர்மராஜ் என்பவர் அடிக்கடி வருவார்.
இதனால் அவர் என்னிடம் சகஜமாக பேசி பழகி வந்தார். அதே போன்று சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அங்கு வந்த தர்மராஜ் எனக்கு பாலியல் தொந்தரவு செய்தார்.
தொடர்ந்து அவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த சிறுமி கூறியிருந்தார்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட திருச்செந்தூர் அனைத்து மகளிர் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தர்மராஜை தேடி வருகிறார்கள்.
பீகார் மாநிலம் புத்த கயா கிராமத்தில் இயங்கி வரும் பிரஜ்னா ஜோதி புத்த ஆரம்ப பள்ளி மற்றும் தியான மையத்தின் குருவாக செயல்படுபவர் பந்த் சுஜோய் அக சங்பிரியா பண்டே. இவர் சமீபத்தில் தியான மையத்தில் சிறுவர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சிறுவரின் பாதுகாவலர்கள் அளித்துள்ள இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் புத்த மதகுருவை கைது செய்துள்ளனர். மேலும், அவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாட்டின் பல்வேறு இடங்களில் சிறுவர், சிறுமியர் மீதான பாலியல் துஷ்பிரயோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என அரசுக்கு பலரும் வலியுறுத்தி வருகின்றனர். #Bihar #SexualAbuse