search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shankar Lalwani"

    • பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
    • இந்தியா கூட்டணி சார்பில் இன்று முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைப்பது தொடர்பான பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது. இதே போன்று காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் இன்று முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது.

    இந்த நிலையில், 2024 மக்களவை தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    இந்தூரின் தற்போதைய எம்.பி. ஷங்கர் லால்வானி 11 லட்சத்து 72 ஆயிரத்திற்கும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் முதல் இடத்தை பிடித்தார்.

    அசாமின் துப்ரி தொகுதியில் காங்கிரசின் ரகிபுல் உசேன் 7.36 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    இவரை தொடர்ந்து அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் விதிஷா தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மூன்றாவது இடத்தில் உள்ளார். இவர் 8.21 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    பா.ஜ.க.-வின் சி.ஆர். பாட்டில் நவ்சாரி தொருதியில் 7.73 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 7.44 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    • தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 17 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
    • இந்தூர் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க.வின் சங்கர் லால்வானி 12,26,751 வாக்குகள் பெற்றார்.

    போபால்:

    பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வருகிறது.

    தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 17 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க.வின் சங்கர் லால்வானி அபார வெற்றி பெற்றார்.

    இவர் 12,26,751 வாக்குகள் பெற்றார்.

    இவரை எதிர்த்து போட்டியிட்ட பகுஜன் சமாஜ் வேட்பாளர் 51,659 வாக்குகள் பெற்றுள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 11,75,092 ஆகும்.

    இந்தத் தொகுதியில் நோட்டா இரண்டாம் இடம் பிடித்துள்ளது. 2,18,674 வாக்குகளை நோட்டா பெற்றுள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் 10 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதி இது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×