என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shanmugam"

    • சிபிஐஎம் புதிய செயலாளராக தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவரும், கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான சண்முகம் தேர்வு.
    • வேலை வழங்குவதற்கு பதிலாக பாஜக வேலையை பறிக்கிறது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில புதிய செயலாளராக தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவரும், கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    விழுப்புரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாட்டில், 80 உறுப்பினர்கள் சண்முகத்தை தேர்வு செய்துள்ளனர்.

    இந்நிலையில், மதவெறி சக்திகளை எதிர்க்கும் திமுகவுடன் தொடர்ந்து பயணிப்போம் என்று சிபிஎம் கட்சியின் புதிய மாநில செயலாளர் சண்முகம் பேட்டி அளித்துள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பதில் அவர் மேலும் கூறியதாவது:-

    மதவெறி, சாதிவெறிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும். மதவெறி சக்திகளை எதிர்க்கும் திமுகவுடன் தொடர்ந்து பயணிப்போம்.

    போராட்டம், ஆர்ப்பாட்டம் எல்லாம் அரசியல் சாசனத்தில் உள்ளவை, எந்த அரசும் அதை நிறுத்த முடியாது. திமுக வெளிச்சத்தில் தான் நாங்கள் இருக்கிறோம் என்று முரசொலியில் சொல்வது பொருத்தமானதல்ல.

    வேலை வழங்குவதற்கு பதிலாக பாஜக வேலையை பறிக்கிறது. அரசுத்துறையில் நிரந்தர பணி இருக்காது என்ற நிலையை பாஜக அரசு ஏற்படுத்தி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாநாட்டில், தன்னை பதவிகளில் இருந்து விடுவிக்குமாறு கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை வைத்தார்.
    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில புதிய செயலாளராக சண்முகம் தேர்வு.

    விழுப்புரம் மாநில மாநாட்டில் இன்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில புதிய செயலாளராக தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவரும், கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான சண்முகம் தேர்வு செய்யப்பட்டார்.

    விழுப்புரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாட்டில், 80 உறுப்பினர்களால் சண்முகம் தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில புதிய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சண்முகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தமிழ் மாநிலச் செயலாளராகப் பொறுப்பேற்றிருக்கும் தோழர் பெ.சண்முகம் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் விவசாயத் தோழர்களுக்காகவும் உழைத்த அவருக்கு கடந்த ஆண்டு அண்ணல் அம்பேத்கர் விருதை கழக அரசு வழங்கியது. அத்தகைய சிறப்புக்குரிய தோழர் சண்முகம் சிபிஐஎம்-ன் மாநில புதிய மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

    கடந்த பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற சக்திகளின் ஒருங்கிணைப்புக்கும், கழகக் கூட்டணியின் அனைத்து வெற்றிகளுக்கும் எந்நாளும் உழைத்த தோழர் கே. பாலகிருஷ்ணன் அவர்களின் பணிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடைபெற்றிருந்தாலும் மக்கள் பணிக்கு விடைகொடுக்காமல் நாளும் உழைப்பவர் தோழர் கே.பாலகிருஷ்ணன் என்பதை நாடறியும்.

    இரு தோழர்களும் தங்கள் பணியைத் தொய்வின்றித் தொடர வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சில நாட்களுக்கு முன்பு ஆதிஷேசன் சங்கம்பட்டிக்கு திரும்பி வந்துள்ளார்.
    • காட்டுமிராண்டித்தனமான வன்கொடுமைச் செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், செல்லம்பட்டி ஒன்றியம், வாலாந்தூர் ஊராட்சிக்குட்பட்ட சங்கம்பட்டியை சேர்ந்த பாண்டியராஜன், ஈஸ்வரி இவர்களின் மகன் ஆதிசேஷன் (வயது) 17. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சங்கம்பட்டியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கிராமத்தில் சிறுவர்களுடன் சேர்ந்து ஆதிசேஷன் நடனம் ஆடியுள்ளார். அப்போது ஏற்பட்ட சிறிய மோதலில் பிற்படுத்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு முகத்தில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆதிசேஷனைத் தேடி சென்றவர்கள் அவர் அங்கு இல்லாத நிலையில் அவரது வீட்டின் கதவுகளைச் சேதப்படுத்தி மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். தான் தாக்கப்படுவோம் என்ற அச்சத்தில் ஆதிசேஷன் வெளியூர் சென்று விட்டார்.

    சில நாட்களுக்கு முன்பு ஆதிஷேசன் சங்கம்பட்டிக்கு திரும்பி வந்துள்ளார். இந்நிலையில் 16-01-2025 அன்று ட்ரம் செட் அடிக்கும் வேலைக்காக உசிலம்பட்டி சென்ற ஆதிசேஷனை சங்கம்பட்டியைச் சேர்ந்த கிஷோர், உக்கிரபாண்டியன், மணிமுத்து, பிரம்மா, சந்தோஷ், நித்திஷ் ஆகிய ஆறு பேரும் இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்து சங்கம்பட்டி அருகே உள்ள முத்தையா கோவில் கண்மாய்கரையில் வைத்து கடுமையாக தாக்கியதோடு சிறுவன் மீது சிறுநீரும் கழித்துள்ளனர். மேலும் பிற்படுத்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுவனின் காலில் விழ வைத்தும், தவழ்ந்து செல்ல வேண்டும் என்றும் சாதிய வன்மத்துடன் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் மீண்டும் ஊர் பக்கம் தலை காட்டினால் கொலை செய்யாமல் விடமாட்டோம் எனவும் மிரட்டி அனுப்பி உள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து 17-01-2025 அன்று தனது உயிருக்கு பாதுகாப்பு கேட்டு உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் ஆதிசேஷன் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் 256(b), 351(2) மற்றும் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் 3(1)(r),3(1)(S) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மணிமுத்து, நித்திஷ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த காட்டுமிராண்டித்தனமான வன்கொடுமைச் செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. பட்டியலின சிறுவனை கடுமையாகத் தாக்கி வன்கொடுமைகள் செய்த குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்திட வேண்டும். ஆதிஷேசனைத் தாக்கியதோடு மட்டுமல்லாமல் சாதிய ரீதியாக இழிவுபடுத்தி வன்கொடுமைகள் செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற சாதிய ரீதியான தாக்குதல்கள் தொடர்வதை தமிழ்நாடு அரசும், காவல்துறையும் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு தடுத்திட வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டவருக்கு உரிய நிவாரணம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்த அரசாணையை மத்திய அரசு வெளியிட வேண்டும்.
    • எதிர்க்க வேண்டியதை எதிர்க்கிறோம். வரவேற்க வேண்டியதை வரவேற்கிறோம்.

    மதுரை:

    சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 129-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை ஜான்சி ராணி பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

    டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்த அரசாணையை மத்திய அரசு வெளியிட வேண்டும், பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை எப்போதும் போல டங்ஸ்டன் விவகாரத்தில் பொய் பிரசாரம் செய்கிறார். திருப்பரங்குன்றம் மலைக்கோவில் வழிபாடு நடவடிக்கை எடுக்க வேண்டும், விவாகரத்தில் மதப்பிரச்சனை வராத அளவிற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மக்கள் சார்ந்த பிரச்சனைகளில் விஜய் கவனம் செலுத்துவதில் நாங்கள் வரவேற்கிறோம். இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் நிலைப்பாடு, சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஏப்ரல் 6-ந் தேதி மதுரையில் நடைபெறும் 24-வது அகில இந்திய மாநாட்டில் முடிவு செய்வோம்.

    3 ஆண்டுகளுக்கு முன்னர் கேரளா கண்ணூரில் நடைபெற்ற 23-வது அகில இந்திய மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து வருகிறோம். தி.மு.க.வின் அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கவில்லை. எதிர்க்க வேண்டியதை எதிர்க்கிறோம். வரவேற்க வேண்டியதை வரவேற்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஹிட்லர், முசோலினி ஆகியோருடைய வரலாறுகளை விஜய் படிக்க வேண்டும்.
    • பாசிசம் பயங்கரமானது. படுகொலைக்கும் தயங்காது. பாயாசம் சுவையானது. உடல் நலத்திற்கு நல்லது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் சண்முகம் த.வெ.க தலைவர் விஜய் குறித்து கூறியதாவது:-

    வசனம் பேசுவதில் வல்லவரான விஜய் மத்திய பாஜக அரசு குறித்து பேசும்போது மட்டும் பூடகமாகவும், பதுங்கியும் பேசுவது ஏன்?

    பாசிசம் – பாயாசம் என்று தொடர்ந்து நக்கலடிப்பதைப் பார்த்தால் இரண்டு குறித்தும் அவருக்கு எதுவும் தெரியாது என்றே கருத வேண்டியிருக்கிறது.

    ஹிட்லர், முசோலினி ஆகியோருடைய வரலாறுகளை அவர் படிக்க வேண்டும். பாசிசம் பயங்கரமானது. படுகொலைக்கும் தயங்காது. பாயாசம் சுவையானது. உடல் நலத்திற்கு நல்லது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 'நுணலும் தன் வாயால் கெடும்' என்று சொல்வார்கள் சீமான் தன்னுடைய வாயாலே தன்னை கெடுத்துக்கொண்டிருக்கிறார்.
    • கம்யூனிஸ்டுகள் என்றாலே போராட்டக்காரர்கள் என்று தான் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய இந்திய மக்கள் புரிந்து கொண்டு இருக்கிறார்கள்.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, பாலியல் வழக்கு குறித்து பேச தகுதியற்றவர்கள் கம்யூனிஸ்டு கட்சியினர். காம்ரேட்டில் இருந்து கார்ப்பரேட்டாக மாறி உள்ளனர். பாலியல் குற்றவாளி என நீதிமன்றம் கூறாத நிலையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம் என்னை எப்படி பாலியல் குற்றவாளி என கூறுகிறார்?. கம்யூனிஸ்டு கட்சியில் செயல்படாத தலைவர்கள் உள்ளனர்.

    அண்ணா பல்கலைக்கழக பாலியல் சம்பவம், பொள்ளாச்சி சம்பவம் உள்ளிட்ட 26-க்கும் மேற்பட்ட பாலியல் சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் அதை பற்றி கம்யூனிஸ்டு கட்சியினர் வாய் திறக்கவில்லை என்று கூறி இருந்தார்.

    இந்நிலையில் சீமான் கூறியதற்கு பதில் அளித்து மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

    'நுணலும் தன் வாயால் கெடும்' என்று சொல்வார்கள் சீமான் தன்னுடைய வாயாலே தன்னை கெடுத்துக்கொண்டிருக்கிறார் என்பதற்கு அவரது ஏராளமான ஊடக பேட்டிகள், மேடை பேச்சுகள் ஒரு உதாரணம்.

    பிரச்சனைகளை பட்டியலிட்டு இதில் எல்லாம் கம்யூனிஸ்ட்டுகள் என்ன செய்தார்கள் என்று அவர் கேள்வி கேட்டு இருக்கிறார்.

    அவர் பட்டியலிட்ட எல்லா பிரச்சனைகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களப் போராட்டத்தில் நின்று, பலவற்றில் வெற்றி பெற்றுள்ளோம் என்பதை நெஞ்சை நிமிர்த்தி என்னால் சொல்ல முடியும்.

    இந்த போராட்டம் நடைபெற்ற காலம் முழுவதும் சீமான் கருத்து கந்தசாமியாகவும், வாயால் வடை சுடுகிற வேலையை மட்டுமே செய்து கொண்டிருந்தார். அவர் களப் போராட்டத்திற்கு என்றுமே வந்ததில்லை என்பதை சம்பந்தப்பட்ட பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கிற மக்கள் அறிவார்கள்.

    அதனால் கம்யூனிஸ்டுகள் போராடுகிறார்களா என்ற சான்றிதழ்களை சீமான் போன்றவர்கள் வழங்க வேண்டியதில்லை. கம்யூனிஸ்டுகள் என்றாலே அவர்கள் போராட்டக்காரர்கள் என்று தான் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய இந்திய மக்கள் புரிந்து கொண்டு இருக்கிறார்கள்.

    ஆகவே சீமானிடம் இருந்து கம்யூனிஸ்டுகளுக்கான சான்றிதழை பெற வேண்டிய நிலையில் நாங்கள் இல்லை என்பதை சொல்லிக்கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.

    தி.மு.க.வில் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி ஒப்பந்தப்படி வைகோ மேல்- சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்படுகிறார். இன்னொரு இடத்துக்கு தி.மு.க. தொழிற்சங்க பொதுச்செயலாளர் சண்முகம் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
    சென்னை:

    தமிழகத்தில் இருந்து டெல்லி மேல்சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட 6 பேரின் பதவி காலம் ஜூன் மாதம் முடிகிறது.

    அ.தி.மு.க.வில் மைத்ரேயன், கே.ஆர்.அர்ஜுன், டி.ரத்தினவேல், ஆர்.லட்சுமணன், தி.மு.க.வில் கனிமொழி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் டி.ராஜா ஆகியோரது பதவி காலம் முடிகிறது.

    கனிமொழி பாராளுமன்ற எம்.பி.யாகி விட்டதால் அவரது மேல்-சபை எம்.பி. பதவி முடிவுக்கு வந்து விட்டது.

    புதிய 6 மேல்- சபை எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் (ஜூன்) நடைபெறுகிறது.

    சமீபத்தில் நடந்த 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் அந்த கட்சி மேல்-சபையில் ஒரு இடத்தை இழக்கிறது. தி.மு.க. 13 இடங்களை கைப்பற்றியதால் கூடுதலாக ஒரு மேல்-சபை எம்.பி. பதவியை பெறுகிறது.

    இதன் மூலம் மேல்-சபையில் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு தலா 3 இடங்கள் கிடைக்க உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலின் போது பா.ம.க.வுக்கு ஒரு மேல்-சபை தொகுதி வழங்குவதாக அ.தி.மு.க. சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதன்படி பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி மேல்-சபை எம்.பி.யாக வாய்ப்பு உள்ளது. அ.தி.மு.க.வில் இருந்து 2 மேல்-சபை உறுப்பினர்களாக கே.பி.முனுசாமி, தம்பிதுரை ஆகியோர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.


    தி.மு.க.வில் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி ஒப்பந்தப்படி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மேல்- சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்படுகிறார்.

    இன்னொரு இடத்துக்கு தி.மு.க. தொழிற்சங்க பொதுச்செயலாளர் சண்முகம் (தொ.மு.ச.) எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

    மீதம் உள்ள ஒரு எம்.பி. பதவியை முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குக்காக காங்கிரஸ் கேட்கும் என தெரிகிறது. இதுகுறித்து தி.மு.க. தலைமை விரைவில் முடிவை அறிவிக்கும்.
    ×