search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shanmugasundaram"

    • மதுரைக்கு மெட்ரோ ரெயில் திட்டம் வரவேற்கத்தக்கது என்று சமூக ஆர்வலர் கருத்து தெரிவித்துள்ளார்.
    • சிங்கார சென்னை போல எழில்மிகு மதுரையாக மேம்படுத்த மாமதுரை என்ற தொழில் வளர்ச்சி திட்டத்தை அறிவித்திருப்பதும் நல்லது என்றார்.

    திருப்பரங்குன்றம்

    மதுரை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோரெயில் திட்டம் கொண்டு வந்தது நகரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று சமூக ஆர்வலரும், பாண்டியன் நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவருமான சண்முகசுந்தரம் கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ள 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இந்தியாவிற்கே வழிகாட்டு கிற கலங்கரை விளக்கமாக அமைந்தி ருக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான மாநில அரசு நிதி பற்றாக்குறையை ரூ.62கோடியில் இருந்து ரூ.30கோடியாக குறைத்தி ருப்பது மு.க.ஸ்டாலினின் நிர்வாக திறமைக்கும், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் நிதி மேலாண்மைக்கும் சான்றாக அமைந்துள்ளது.

    மதுரை மாநகரை சிங்கார சென்னை போல எழில்மிகு மதுரையாக மேம்படுத்த மாமதுரை என்ற தொழில் வளர்ச்சி திட்டத்தை அறிவித்திருப்பதும், அதன் முதல்கட்டமாக மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறியிருப்பதும் மதுரை மக்களிடம் கோடை மழையை போன்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அதேபோன்று ஏழை, எளிய மக்கள் நிலம் வாங்குவதற்கு ஏதுவாக பத்திரப்பதிவு கட்டணம் 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைத்திருப்பதன் மூலமாக ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற கனவு நனவாக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்த பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×